18 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட மகள்… AI புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்த குடும்பம்
அமெரிக்காவில் 18 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட பெண்ணின் புகைப்படம் AI character ஆக உருவாக்கப்பட்டதைப் பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
Drew Crecente என்பவரின் மகள் Jennifer Ann கடந்த 2006ஆம் ஆண்டில் தனது முன்னாள் காதலரால் கொலை செய்யப்பட்டார்.
தனது மகளின் நினைவாக Drew இளம்பெண்களுக்கான விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் Character.AI நிறுவனத்தின் செயல் Jenniferயின் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது, Jennifer யின் புகைப்படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தி Chatbotஐ Character.AI நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இதன்மூலம் பொதுமக்களுக்கு தேவையான Customer Care வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 69 உரையாடல்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
இதனால் இதுபோன்று ஒருவரின் தனிப்பட்ட விடயங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும், அதனை நீக்க வேண்டும் என்றும் Drew கோரிக்கை வைத்தார்.
மேலும், Jenniferயின் சித்தப்பா பிரைன் சமூக வலைத்தளங்களில் இதுதொடர்பாக பதிவிட, அவருக்கு ஆதரவு பெருகியது. அதனைத் தொடர்ந்து Jennifer Annயின் Chatbot ஐ நீக்கியது Character.AI நிறுவனம்.
தனிமனித விடயங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.