பலதும் பத்தும்

10 வயது சிறுவனை மணந்ததாக மோசமாக விமர்சிக்கப்பட்ட பெண்….

இங்கிலாந்தில் வாழும் பெண்ணொருவர், தனது திருமணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட, அவற்றைப் பார்த்தவர்கள், அந்தப் பெண் ஒரு சிறுவனை திருமணம் செய்துகொண்டுள்ளதாக எண்ணி அவரை மோசமாக விமர்சித்துவருகிறார்கள்.

உண்மை என்ன தெரியுமா?

10 வயது சிறுவனை மணந்ததாக மோசமாக விமர்சிக்கப்பட்ட பெண்: உண்மை என்ன தெரியுமா? | Woman Criticized For Marrying 10 Year Old Boyஅந்தப் பெண்ணின் பெயர் லாரன் இவென்ஸ் (Lauren Evens, 31). அவரும் ஒரு பையனும் திருமணக் கோலத்தில் நிற்கும் புகைப்படங்களும், அவர் அந்தப் பையனை முத்தமிடும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகின.

அதைக் கண்ட இணையவாசிகள், லாரன் சிறுவர்களுடன் தவறாகப் பழகும் பெண் என மோசமாக அவரை விமர்சித்துள்ளார்கள்.

ஆனால், உண்மை என்னவென்றால், அவர் திருமணம் செய்துள்ளது ஒரு பையனை அல்ல! தனது தோழியாகிய ஹன்னா கே (Hannah Kaye, 29) என்பவரைத்தான் லாரன் திருமணம் செய்துள்ளார்.

பார்ப்பதற்கு சின்னப்பையன் மாதிரி இருக்கும் ஹன்னாவுக்கு 29 வயது. நான் இளமையாக தோற்றமளிப்பதற்காக எக்கச்சக்கமாக செலவு செய்துள்ளேன். ஹன்னாவோ இயற்கையாகவே இளமைத்தோற்றத்துடன் இருக்கிறார்.

ஆக, நான் சின்னப்பையன் ஒருவனைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. 29 வயதான என் தோழியைத்தான் திருமணம் செய்திருக்கிறேன்.

அதுதான் உண்மை. ஆகவே, என்னை யாரும் கைது செய்யமுடியாது, மோசமாக பேசுபவர்கள் பேசட்டும் என்கிறார் லாரன்!

10 வயது சிறுவனை மணந்ததாக மோசமாக விமர்சிக்கப்பட்ட பெண்: உண்மை என்ன தெரியுமா? | Woman Criticized For Marrying 10 Year Old Boy

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.