ரூ.5 கோடி விலை போகும் 1 Penny நாணயம்
பிரித்தானியாவில் மிக முக்கியமான அபூர்வ நாணயங்களை சேகரிப்பாளர்கள் தேடிவருகின்றனர்.
சேகரிப்பாளர்களுக்கு பெரும் வருமானத்தை அளிக்கக் கூடியவையாக இருக்கும் இந்த நாணயங்கள் கோடிக்கணக்கில் விலை போகக்கூடியவை.
இந்த அரிய நாணயங்களைப் பற்றி தெரியாத மக்களிடம் சாதாரணமாக புழக்கத்திலோ அல்லது அவர்களது உண்டியலிலோ இருக்கலாம்.
Coin Collector UK எனும் நாணய நிபுணர், மூன்று முக்கியமான அபூர்வ நாணயங்களை பற்றி தகவல்கள் பகிர்ந்துள்ளார். இதன் மதிப்பு £130,000 வரை ( இலங்கை பணமதிப்பில் ரூபா 5 கோடி) செல்லலாம் என்று அவர் கூறியிருக்கிறார்.
1. 1933 One Penny நாணயம்
1933 ஆண்டு Penny மிக மிக அரிதானது. 10-க்கும் குறைவானவை மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு நாணயம் ஏலத்தில் £127,000 வரை விற்பனையாகியுள்ளது. மற்றொரு penny ஏலத்தில் இது £86,000-க்கும் விற்கப்பட்டது.
இந்த 1933 ஆண்டு கொண்ட penny நாணயம் கிடைத்தால், மிகப்பாரிய தொகையைப் பெறலாம்.
2. 2011 Olympic Aquatics 50p நாணயம்
2011-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Olympic Aquatics 50p நாணயத்தில் ஒரு பிழை உள்ளது. நாணயத்தில் முகத்தை மறைக்கும் கோடுகள் இருந்தால், அதன் மதிப்பு £2,000 வரை இருக்கும். இத்தகைய தவறுடன் 500 நாணயங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டன.
3. 2014 Lord Kitchener £2 நாணயம்
2014-ஆம் ஆண்டு வெளியான Lord Kitchener £2, நாணயத்தில் மற்றொரு முக்கியமான பிழை உள்ளது. இதில், ராணியின் படம் உள்ள பக்கத்தில் “two pounds” என்ற வார்த்தைகள் இல்லாமல் இருந்தால், அதன் மதிப்பு £800 வரை இருக்கும்.
இந்த அபூர்வ நாணயங்களை உங்களிடம் உள்ள நாணயங்களில் தேடுங்கள்., அப்படி இருந்தால் நீங்கள் அதனை நல்ல வேலைக்கு விற்கலாம்.