தேர்தலில் எவ்வாறு வெற்றிக்கொள்வது?; வியூகம் வகுத்த இ.தொ.கா
நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தமது வேட்பாளர்களின் வெற்றிக்கான வியூகங்களை வகுப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடலை நடத்தியது.
கொட்கலை சில்.எல்.எப். வளாக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், நிதிச் செயலாளரும் தவிசாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் உட்பட இ.தொ.காவின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலில், பொதுத் தேர்தலில் இ.தொ.கா. சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு எவ்வாறு வியூகங்களை வகுத்து பிரச்சாரங்களை மேற்கொள்வது, மக்களிடம் சென்று வாக்குச் சேகரிக்கும் முறை மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
நாடாளுமன்றத் தேர்தலில் இ.தொ.கா. சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் ஜீவன் தொண்டமான், மருதப்பாண்டி ராமேஸ்வரன், பழனி சக்திவேல் ஆகியோர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(க.கிஷாந்தன்)