தேர்தல் களம்

நுவரெலியாவில் புதிய சுயேச்சைக் குழுவினர் கட்டுப்பணம் செலுத்தி களம் இறங்குகின்றனர்

நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு “இனியாவது நமக்காக நாம்” என்ற அமைப்பின் ஊடாக புதிய சுயேச்சைக் குழுவொன்று நேற்று செவ்வாய்க்கிழமை கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பரம்பரை கட்சிகளை புறக்கனித்து சுயேச்சையாக நுவரெலியாவில் களம் காணுவதற்காக இளைஞர்கள் ஒன்றிணைந்து புதிய அரசியல் மாற்றத்திற்கான நுவரெலியா தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த போது –
நாட்டை வளப்படுத்துவதற்கு பல ஆண்டுகளின் பின்னர் ஒரு அதிசயம் நடந்தது போல் ஓர் இடதுசாரி கொள்கையில் உள்ள ஒருவர் தேர்தல் மூலமாக ஜனாதிபதியாக ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் மலையகத்தில் அனைத்து பகுதிகளும் வெவ்வேறு மாற்றம் தான் நிகழ வேண்டும் என்றால் நாடாளுமன்றத் தேர்தலில் சிந்தித்து செயல்பட வேண்டும். அதற்காகவே பழைய கட்சிகளை புறக்கணித்து, இளைஞர்கள் ஒன்றிணைந்து சுயேச்சையாகக் களம் இறங்கி உள்ளோம்.- எனத் தெரிவித்தனர் .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.