தேர்தல் களம்முச்சந்தி
தேசிய மக்கள் சக்தி சார்பாக யாழில் வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா களத்தில்
நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக யாழ். மாவட்டத்தில் யாழ். போதனா வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா களமிறங்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ் . போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா, பின்னர் களுபோவில வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
அதேவேளை, கொவிட் – 19 தொற்றுக் காலப்பகுதியில் யாழ். போதனா வைத்தியசாலையில் இவர் சேவை ஆற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.