இலங்கைதேர்தல் களம்

தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் யார்?; தேர்தலின் பின்னர் சிறீதரன் முடிவு 

இலங்கைத் தமிழரசுக், கட்சியின் தலைவர் பொறுப்பை உடனடியாக ஏற்குமாறு அக்கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா விடுத்த அறிவிப்பு தொடர்பில் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் முடிவொன்றை எடுப்பதாக சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக், கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து தான் விலகுவதாகவும் அதனால் கட்சியின் தலைவர் பொறுப்பை உடனடியாக ஏற்குமாறும் சிவஞானம் சிறீதரனுக்கு மாவை சேனாதிராஜா, கடிதம் அனுப்பிஇருந்தார்.

அக்கடிதத்தில், மாவை சோமசுந்தரம் சேனாதிராஜா ஆகிய நான் இதுவரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து செயற்பட்டு வந்திருக்கின்றேன்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு 2024 ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்றபோது பொதுக்குழுவில் தாங்கள் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தீர்கள்.

தாங்கள் அந்தவகையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பை இன்னும் ஏற்கவில்லை. அதனால் நான் தொடர்ந்தும் கட்சியின் தலைவராகச் செயலாற்றி வந்துள்ளேன். அந்தப் பொறுப்பை உடனடியாக ஏற்றுத் தலைவராகச் செயற்படுமாறு அன்றிலிருந்து பல தடவைகள் வற்புறுத்தி வந்துள்ளேன்.

2024 ஒக்டோபர் 7ஆம் திகதியிலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகியிருக்கத் தீர்மானித்துள்ளேன் என்பதனை இந்தக் கடிதம் மூலம் அறியத் தருகின்றேன்.

எனவே, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பை உடனடியாக ஏற்று நிறைவேற்றிச் செயற்படுமாறு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன் என்று மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.

அதேவேளை கடிதத்தின் பிரதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்துக்கும் அனுப்பப்பட்டிருந்தது.

இக்கடிதம் கிடைத்ததையடுத்து மாவை சேனாதிராஜாவை அவரது மாவிட்டபுரம் இல்லத்தில் திங்கட்கிழமை 5.15 மணிமுதல் 6.30 மணிவரை சந்தித்து கலந்துரையாடிய சிவஞானம் சிறீதரன், நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது தலைவர் பதவி தொடர்பில் முடிவுகளை எடுத்தால் அது கட்சியின் ஒற்றுமைக்கும் தேர்தலில் கட்சியின் வெற்றிக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். எனவே தேர்தலை எதிர்கொண்ட பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்பது தொடர்பில் ஒரு முடிவுக்கு வருவோம் என தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் இருவரும் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக கலந்துரையாடிய நிலையில் சிறீதரனின் கருத்தை ஏற்றுக் கொண்ட மாவை சேனாதிராஜா பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் தலைவர் பதவி தொடர்பில் சிறீதரன் முடிவொன்றை எடுப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.