முச்சந்தி
அநுர வந்தது பெரிய மாற்றம்!
அவரை கொண்டு வந்தது கோட்டாவை கொண்டு வந்த அதே சிங்கள புத்தி ஜீவிகள் அமைப்பு.
கோட்டாவுக்காக வெளிநாடுகளில் இருந்து படையெடுத்த அதே ஆட்கள் இந்தமுறை அநுரவுக்காக படையெடுத்தார்கள்.
கோட்டா சொதப்பும் வரை, அவர் யுத்த வெற்றியின் மூளை நல்ல நிர்வாகி என்ற கட்டமைக்கப்பட்ட விம்பத்தில் இருந்தார்.
யோசித்து பார்த்தால்,
அந்த புத்தி ஜீவிகள் அமைப்பு மகிந்தவையே துரத்தி மைத்திரியை கொண்டு வந்தது.
மைத்திரி காலம் அதிகமான கடன், பிரச்சினைகள் , அடிபிடி , ஈஸ்டர் தாக்குதல் என்று சிங்களவர்களை பயம் காட்ட வேறு வழி இல்லாமல் , கோட்டா மீது இருந்த நல்ல நிர்வாகி என்ற பிம்பத்தை நம்பியும் , பெளத்த மேலாதிக்க மனநிலையிலும் அவரை கொண்டு வந்தார்கள்.
அவரும் சொதப்பி நாடு படு மோசமான பின், பெளத்தமும் வேண்டாம், இறமையும் வேணாம் நாட்டின் பொருளாதாரம் மீள் வேண்டும், ஊழல் மறைய வேண்டும் என முந்தைய தேர்தலில் 5 வீதம் வாக்கு பெற்றவரை ஜனாதிபதி ஆக்கியுள்ளார்கள்.
அவரும் சொதப்பலாம் அல்லது வெல்லலாம்!
இரண்டுக்கும் வாய்ப்பு உள்ளது என்று தெரிந்தே அவரை கொண்டு வந்துள்ளார்கள்.
பாருங்கள், இது எவ்வளவு பெரிய ரிஸ்க்?
காரணம், முன்னேற வேண்டும் என்றால் ஏதாவது மாற்றம் தேவை. அதற்கான முயற்ச்சி தேவை. அதற்காக ரிஸ்க் எடுக்கவும் தயங்கக்கூடாது. ரிஸ்க் எடுக்க பயந்து பழைய குதிரையிலேயே ஓடி பயனில்லை என்று சிங்களவர்கள் எடுத்த ரிஸ்க்தான் அநுர.
அந்த ரிஸ்க் வென்றால் ஐந்து வருடத்தில் நாடு பல முன்னேற்றங்களை அடைந்து ஆசியாவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாகும். தோற்றால் சிங்களவர் இன்னொருவரை தேடுவார்கள்.
நிலமை இப்படி இருக்க,
நாம் அந்த சிங்களவரை கேலி செய்துகொண்டு இருக்கோம்.
காரணம் நமக்கு இன்னும் ரிஸ்க் எடுக்க துணிச்சல் இல்லை. பலர் இன்னும் பழைய குதிரைகளை ஓடவே விரும்புகிறார்கள்.
இளைஞர்களே இப்போது தேவை உங்கள் எழுச்சி!
பழைய ஆட்களை விலகச் சொல்லி உங்கள் எதிர்ப்புக்களை வெளிக்காட்டுங்கள்!
புதியவர்களை தேடி நீங்களே விரைவாக தேர்தல் வேட்பாளராக முன்னிறுத்துங்கள்.
உங்கள் அரசியலை நீங்களே தீர்மானியுங்கள். யாரோ அல்லக்கைகளை தீர்மானிக்க விடாதீர்கள்.
From Dr Sivachandran