அரை மணி நேரத்தில் குணமாகும் சக்கரைநோய்!
நீரிழிவு நோய் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் அதை அரை மணி நேர அறுவை சிகிச்சையில் குணப்படுத்தும் நடைமுறை சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் அதை அரை மணி நேர அறுவை சிகிச்சையில் குணப்படுத்தும் நடைமுறை சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 25 வயது பெண் நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ததன் மூலம் அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து நீரிழிவுக்கான ஊசியே தேவைப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
நோயாளியின் உடலில் கணையப்பகுதியில் உள்ள திசுக்களில் சிறிதளவை வெளியே எடுத்து அதனுடன் ரசாயன மூலக்கூறை
சேர்த்து சில திருத்தங்கள் செய்து பின்னர் மீண்டும் உடலில் வைப்பது மூலம் இந்த அதிசயத்தை சீன மருத்துவ விஞ்ஞானிகள் சாதித்துக்காட்டியுள்ளனர்.
அரை மணி நேர சிகிச்சை மூலம் நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்தியுள்ளது இதுவே முதன்முறை என ஷாங்காயை சேர்ந்த சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை கூறியுள்ளது.
இந்த அறுவை சிகிச்சை டைப் ஒன் என்ற நீரிழிவு வகைக்கானது என்றும் அப்பத்திரிகை கூறியுள்ளது. உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான நீரிழிவு நோயாளிகளுக்கு நம்பிக்கை தரும்
செய்தியாக இது பார்க்கப்படுகிறது