கட்டுரைகள்
லெபனான் மீது இஸ்ரேல் தரை வழி தாக்குதல் ! இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!! …. ஐங்கரன் விக்கினேஸ்வரா
காசா போர் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதலுக்கு பழி தீர்க்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடங்கி உள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது)
லெபனானில் ஹிஸ்புல்லா கட்டமைப்பைக் குறிவைத்து தரை வழி தாக்குதலை இஸ்ரேல் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மரணத்தின் பின்னர் நீண்ட நாட்களாக ஈரான் நேரடியாகத் தலையிடாத நிலையில், தற்போது இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய 400 ஏவுகணைகளை வீசி தாக்கியுள்ளது. இது மிகப் பெரிய போராக வெடிக்கும் ஆபத்தும் உள்ளது.
காசாவில் உள்ள ஹமாஸ் மீதான தாக்குதலை இஸ்ரேல் பல மாதங்களாக தொடர்ந்து வருவதுடன், லெபனானில் பல நாட்களாக வான்வழித் தாக்குதலை மட்டுமே நடத்தி வந்தது.
தற்போது இஸ்ரேல் தரை வழி தாக்குதலைத் தொடங்குவது மத்திய கிழக்கில் பாரிய பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மரணத்தின் பின்னர், மத்திய கிழக்கில் கடந்த சில காலமாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
லெபனானில் தரை வழி தாக்குதல்:
இஸ்ரேல் தனது எல்லைக்கு அருகிலேயே தரை வழி தாக்குதலைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. ஈரானின் தற்போதய தாக்குதலின் பின்னர் பெரிதாக போர் மூளும் அபாயம் உள்ளதென ஐநா எச்சரித்துள்ளது.
சில மாதமாக லெபனான் எல்லையில் இஸ்ரேல் வீரர்கள் ஏற்கனவே குவிக்கப்பட்டு இருந்தார்கள். கடந்த இரண்டு வாரங்களாக ஹிஸ்புல்லா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இப்போது தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி உள்ளது.
தொடர்ந்து ஹமாஸ், ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், 29/9/24 ஞாயிற்றுக்கிழமை யேமனில் உள்ள ஹவுதி படை மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடாத்தியது. இதனால் மத்திய கிழக்கில் தொடர் பதற்றம் அச்சமும் நிலவி உள்ளது.
இதற்கிடையே இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே போர் நிறுத்தத்தைக் கொண்டு வர பல அரபு நாடுகள் முயன்றுள்ளன. ஆனால்
ராணுவ அழுத்தம் கூட சில சமயம் உதவும் என்ற போதிலும் அது எதிர்பாராத விளைவுகளுக்கும் வழிவகுக்கும் என்று அமெரிக்கா எச்சரித்ததும் குறிப்பிடத்தக்கது.
ஹிஸ்புல்லா மீது குண்டு மழை:
லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து நடத்துகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக லெபனானில் உள்ள பல இடங்களில் குண்டு மழை பொழிந்தது.
ஏற்கனவே இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதை இரு தரப்பும் இதை ஏற்கனவே உறுதி செய்துள்ளன.
தற்போது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா உள்கட்டமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தரை வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதை இஸ்ரேல் தரப்பே உறுதிப்படுத்தி தெரிவித்துள்ளது.
இத்தனை நாட்கள் வான்வழித் தாக்குதலை மட்டுமே இஸ்ரேல் நடத்தி வந்த நிலையில், தரை வழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்குவது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறை இஸ்ரேலிய எல்லைக்கு அருகில் உள்ள ஹிஸ்புல்லா உள்கட்டமைப்பை இலக்காகக் கொண்ட தாக்குதலை நடத்துவதாக அவர்கள் எங்களுக்குத் தெரிவித்தனர். அவை சிறியளவிலான தரை வழி தாக்குதலாக இருக்கும் என்பதே எங்கள் புரிதல் என தெரிவித்துள்ளது.
ஈரான் தலையிட கோரிக்கை:
ஈரான் இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளவில்லை. இதனால் இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து வரும் லெபனான் நாட்டில் செயல்படும் தனது ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மூலம் ஈரான், இஸ்ரேலை மறைமுகமாக தாக்கி வருகிறது.
ஹிஸ்புல்லா தலைமையகத்தில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலால் தலைவர் ஹசன் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டார்.ஹசன் நஸ்ரல்லாவை கொலையின் பின்னர் ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹசன் நஸ்ரல்லாவை கொலைக்கு எதிராக ஈரான் இதில் தலையிட வேண்டும் என்று அரபு நாடுகளில் குரல்களும் எழுந்தன. லெபனானில்
இஸ்ரேல் பல திசைகளில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், நேரடியாக ஈரான் இதில் தலையிட வேண்டும் என்றும் குரல்களும் ஈரானில் எழுந்தது.
நீண்டகாலமாக ஈரான் நேரடியாகத் தலையிடாத நிலையில், அவர்கள் இஸ்ரேல் மீது ஏவிய ஏவுகணைகளால் தாக்கியுள்ளது. இது மிகப் பெரிய போராக வெடிக்கும் ஆபத்தும் உள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்:
காசா மீதான போர் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதலுக்கு பழி தீர்க்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடங்கி உள்ளது.
ஈரானில் இருந்து நானூறு பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டுள்ளது.
இதனால் அங்குள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்னர். நீண்ட காலமாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு தயாராகி வந்தது. இந்த தாக்குதல் நடந்தால் ஈரான் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்கா எச்சரித்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வார இறுதியில் ஹிஸ்புல்லாவின் தலைமை தளபதி நஸ்ரல்லாவையும் ஏவுகணை தாக்குதல் மூலம் இஸ்ரேல் தீர்த்து கட்டியது. இதனால் இஸ்ரேல் மீது ஈரான் கடும் கோபத்தில் உள்ளது. இத்தகைய சூழலில் தான் ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டது. ஈரான் இந்த தாக்குதலை நடத்தும் பட்சத்தில் அமெரிக்கா, இஸ்ரேலை பாதுகாக்க தேவையான நடவடிக்கையில் ஈடுபடும். இதனால் ஈரான் மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும் என எச்சரிக்கை செய்தது.
ஈரானின் தாக்குதலை எதிர்கொள்ள தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொண்டு வந்தது. இத்தகைய சூழலில் தான் ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதலை தொடர்ந்துள்ளது. மொத்தம் 400 ஏவுகணை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியதாக கூறப்படுகிறது.
ஈரானின் இந்த தாக்குதலால் இஸ்ரேலில் உள்ள சைரன்கள் அலறின. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது ஈரானின் இந்த தாக்குதலை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.
இருப்பினும் சேத விபரங்கள் பற்றிய எந்த தகவலையும் இஸ்ரேல் வெளியிடவில்லை. ஆனாலும் கூட ஈரானின் ஏவுகணைகளை இஸ்ரேல் தனது ‛அயன்டோம்’ வான் பாதுகாப்பு
(IRON DOME) மூலம் வானிலேயே இடைமறித்து செயலிழக்க செய்தோடு, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு திசைதிருப்பி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் மீதான ஈரானின் நேரடி தாக்குதலால் பல்வேறு நாடுகளும் அங்குள்ள நிலையை உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளன. காசா மீது இஸ்ரேல் போர் தொடங்கி ஓராண்டு கடக்க உள்ளது. அதேபோல் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் – இஸ்ரேலுக்கும் தொடர்ந்து மோதல் என்பது வலுத்து வருகிறது.
இத்தகைய சூழலில் தான் ஈரான் தற்போது இஸ்ரேல் மீது நேரடியாக ஏவுகணை தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.