கட்டுரைகள்

முன்னாள் நீதியரசர் திரு.சி.விக்னேஸ்வரன் அவர்களின் அதிகபட்ச அறிவு…. ஏலையா க.முருகதாசன்

முன்னாள் நீதியரசர் திரு.சி.விக்னேஸ்வரன் அவர்களைப்பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வீணடித்ததுதான் இவரைத் தெரிவு செய்ததால் பெறப்பட்ட பலன்.இவருக்கு வாக்குப் போட்ட மக்களின் அறிவும் கேள்விக்குறியாகி உள்ளது.

இவரை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்தமையும்,நல்லூர்த் தொகுதியில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்த திரு.அருளம்பலம் அவர்களின் மனைவி வீடு வீடாகச் சென்று தயவு செய்து அவருக்கு வோட்டுப் போடுங்கள் இம்முறை தோற்றால் அவர் தற்கொலை செய்யும் நிலைமைக்குக்கூட வரலாம் எனக் கேட்டு அவரை வெல்ல வைத்தது ஞாபகம் வருகின்றது.
வடக்கு மாகாண சபையின் முதல்வராக இருந்து கைதடியில் கதைத்துக் கதைத்தே காலத்தைக் கடத்தியதும் எதிர்க்கட்சித் தலைவரான திரு.தவராசா அவர்கள் முதல்வரைப் பார்த்து வினைத்திறன் இல்லாதவர் என்று சொன்னது முற்றிலும் சரியானது என்பதையும் இப்பொழுது ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.

அரசியல் சிந்தனைகள் எப்பொழுதும் காலத்திற்கு ஏற்றவாறு மாறிக் கொண்டிருக்கும்.உலக நாடுகளினால் ஒரு காலகட்டம் வரையும் நடைமுறைப்படுத்தப்பட்ட சித்தாதங்கள் கோட்பாடுகள்கூட தேவைகருதி மாற்றப்பட்டு வருகின்றன.

ஆனால் என்னமோ தெரியாது தமிழரசியல்வாதிகள் புளித்துப் போன மோரையே திரும்பத் திரும்பத் உறை ஊற்றி புளிக்க வைத்துக் கொண்டிருப்பது போல ஒரு சதத்திற்கும் உதவாத அரசியலைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் திரு.சாணக்கியன் ,திரு.சுமந்திரன் ஆகியோர் சொன்ன கருத்துக்கு திரு.சி.வி.விக்னேஸ்வரன் தனது கருத்தைச சொன்ன சாராசம்சத்திலிருந்தே அவரின் அரசியல் அறிவு புலனாகிறது.

திரு.சுமந்திரனும்,திரு.சாணக்கியனும் இலங்கையின் சமகால அரசியலைப் புரிந்தவர்களாக இருக்கிறார்கள்.இலங்கை அரசியலின் யதார்த்தத்தையும் அதை எப்படி அனுக வேண்டுமென்ற சூட்சுமத்தையும் புரிந்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அதனால் அவர்கள் இனி இப்படித்தான் நாம் இந்தப் பாதையில் போக வேண்டுமென்பதை ஆராய்ந்தறிந்து அவர்கள் தருவது போலல்லாமலும் நாம் கேட்பது போலல்லாமலும் சுவாசித்தலை உணராது சுவாசித்தல் போல தானாக ஒரு சட்டவியல்புக்கு உட்பட்டு நடப்பது போல நடப்பதற்கு ஒத்துழைப்புக் கொடுத்து எதை ஆக்ரோசமாகச் சொல்லிப் பெற நினைத்தோமோ அதை மிக இயல்பாக பெறும் ஒரு தந்திரத்தை கையாள்வதே சிறந்த வழி என சொல்ல,அதற்கு திரு.பிரபாகரரனையும் மாவீரர்களையும் பணயக் கைதிகளாக்கி முன்னிறுத்தி அரசியல் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்ர்தலுக்குப் பிறகு பயம் வந்துவிட்டது.

அவர்களுக்கும் தெரியும் இனி வெருட்டி அலுவல் பார்க்க ஏலாது என்று.ஏனென்றால் தமிழர்களின் பலம் என்ன பலவீனம் என்னவென்பதை சிங்கள அரசியல்வாதிகள் தெளிவாகவே உணர்ந்துவிட்டார்கள்.

இன்னும் குறிப்பாக தமிழரசுக் கட்சியாகட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகட்டும் அவர்களுக்கு புதிய சிந்தனை ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை.புதிய சிந்தனை இருக்குமாயின் அதன் மூலம் இளைஞர்களுடன் கலந்துரையாடுவதும்,அதிலும் பல்துறையிலும் விஞ்ஞான அனுமுறையை கொண்டிருப்பவர்களில் விசாலான நுட்பறிவைக் இணைத்துக் கொண்டு அரசியலைச் செய்ய வேண்டும்.

அல்லது இவ்விரண்டு கட்சிகளையும் கலைத்துவிட்டு இளந்தலைமுறையினரான துறைசார் ஆகக் குறைந்த தகுதியான பட்டதாரிப் பெண்களை ஆண்களையும் அதற்கு மேற்பட்ட கல்வியினைக் கொணடவர்களை கொண்ட ஒரு புதுக்கட்சி உருவாக வேண்டும்.
ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்குமான வாழ்வியல் சார்ந்த அவர்களின் பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய நடவடிக்ககளை எடுக்கும் போது அது இலங்கையர்கள் என்ற பொதுநிலைப் பண்பில் சிங்களவர்,தமிழர்,முஸ்லீம்கள் என்ற வேறுபாடின்றி அனைவருக்குமான தீர்வாக அது அமைந்துவிடும்.

நாடாளுமன்றத்தில் தமது நேரத்தைச் செலவழித்த தமிழரசியல்வாதிகள்,நாடாளுமன்றத்தை ஒரு அரட்டை அரங்கமாக நினைத்துச் செயல்பட்டதை தெட்டத் தெளிவாக உணர முடிகின்றது.
தமிழருடைய உரிமைப் பிரச்சினையைப் பேசிப் பேசியே காலத்தைக் கழித்தவர்கள் தாம் இலங்கைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் திரு.சி.வி.விக்னேஸ்வரன் உட்பட எவருமே இலங்கையின் பொருளாதாரம் பற்றியோ,விவசாயம் பற்றியோ,தொழில்துறை நிதிவலு பற்றியோ,சிங்கள,தமிழ்,முஸ்லீம் மக்களுக்கான பொதுப் பிரச்சினை பற்றியோ பேசவேயில்லை.

திரு.சி.வி.விக்னேஸ்வரன் போன்ற இர்களைப் போன்றவர்கள் இனி அரசியல்வாதிகளாக இருக்கத் தேவையில்லை.ஒவ்வொரு வாக்கும் பெறுமதியானது அதை இவர்களின் தெரிவுக்கு தாரைவார்த்துக் கொடுத்தல் அறிவிலித்தனமாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.