இந்தியா

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது: தமிழக முதலமைச்சர் அவசர கடிதம்

இலங்கை – இந்திய மீனவர் விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு  கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கடந்த 21ஆம் திகதி சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுத்திட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்களிடம் அதிக அளவில் அபராதம் வசூலிப்பதைத் தடுத்திடவும், மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள், IND-TN-16-MO-3451 IND-TN-16-MO-1544 ஆகிய பதிவெண்களைக் கொண்ட இரண்டு படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத ஒரு படகு என மூன்று படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.

இவர்கள் கடந்த 21ஆம் திகதி இலங்கை இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி, தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன்பிடிக்கும் போது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.

கைது செய்யப்படும் மீனவர்களிடம், அவர்களது சக்திக்கு மீறிய அபராதங்களை இலங்கை நீதிமன்றங்கள் விதித்து வருவதாகக் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அதிகாரிகள் இதுபோன்று கைது செய்வதைத் தடுத்திட உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, கைது செய்யப்படும் மீனவர்களிடம் அதிக அளவில் அபராதம் விதிப்பதைத் தடுத்திட இலங்கை அரசை வலியுறுத்த வேண்டுமென்று வெளியுறவுத் துறை அமைச்சரிடம் அவர் கேட்டுக்கொணடார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.