அநுராவின் வெற்றியும் எதிர்கால இலங்கையும்… ஏலையா க.முருகதாசன்
இலங்கை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் மீண்டும் தொடங்கியுள்ளது.
திருமதி.சிறிமாவோ பண்டாரநாயக்கா தனது அமைச்சர்களாக இலங்கையின் இயல்புக்கு ஏற்றவாறு நாட்டை எவ்வாறு முனனேற்றலாம் எனபதற்காக பொருளாதார அறிஞர்களை அமைச்சர்களாக இணைத்து நாட்டை சரியான பாதையிலேயே கொண்டு சென்றார்.
ஒரு நாட்டில்,அந்த நாடு இதுவரை எந்தக் கோட்பாட்டுக்கமைய பயணித்ததோ அதற்கு எதிர்மாறாகவோ அல்லது சற்று மாற்றாத்துக்கு உட்பட்டோ பயணிக்கும் போது பழகிய வாழ்க்கை முறையிலிருந்து விடுபட்டு புதிய சிந்தாந்த வழியமைந்த கோட்பாட்டை அனுசரித்து மக்கள் வாழத் தொடங்குவது என்பது கொஞ்சம் சிரமமானதே.
இது அந்த அந்த நாட்டின் குடிமகன்களாக இருக்கும் மக்களின் வாழ்க்கை நிலையைப் பொறுத்துத்தான் அமையும்.
பணக்கார வர்க்கம்,நடுத்தர வர்க்கம்,வறுமைக் கோட்டுக்கு கீழானவர்கள் என்ற பேதத்தின் அடிப்படையில் இருக்கும் ஒரு நாட்டின் மக்களின் பேதத்தை ஒரு புள்ளியில் சமன்படுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் தேவைப்படும்.
இதை இவ்வாறும் கணிக்கலாம்.பசியில்லாமலே மூன்று வேளையும் சத்தான உணவைச் சாப்பிடுபவர்கள்.பசிக்காகவும் உடல் ஆரோக்கியத்துக்காகவும் மூன்று வேளை மட்டும் சாப்பிடுபவர்கள்.பசியிருந்தும் ஒரு வேளை சத்தற்ற உணவைச் சாப்பிடுபவர்கள் எனப் பிரிக்கலாம்.
இவற்றில் இணர்டாவதாகவும் மூன்றாவதாகவும் சொல்லப்பட்டவர்கள் பசிக்கும்,உடல் ஆரோக்கியத்துக்கும் எனச் சத்தான உணவுகளைச் சாப்பிடுபவர்களாக உயர்த்தப்படுதல் வேண்டும்.
முதலாவதாக இருப்பவர்கள்; பசியில்லாத போதும் மூன்று வேளையும் அதற்கப்பாலும் சத்தான உணவைச் சாப்பிடுபவர்களின் மாற்றத்துக்காக ஒரு அரசு திட்டங்கள் எதையும் வகுக்காது.
இரண்டாவது மூன்றாவது பிரிவினருக்னகான கொள்கையை வகுக்கும் போது முதலாவதாக இருக்கம் பண்க்கார வர்க்கம் வறுமை நிலைக்குத் தள்ளப்படாமலும் மற்றைய இரண்டு பகுதியினரின் நிலையை அடைதல்: அவர்களுக்கு இயல்பானதாகத் தோன்றுவதாக அரசு கொள்கையை வகுத்துக் கொள்ளும். சுபீட்சமான நாடு எதுவென்றால் எந்த நாட்டில் உணவுப் பஞ்சம் இல்லையோ,எந்த நாட்டில் உணவுக்கான வறுமை நிலை இல்லையோ.தனது வருவாய்க்குள் தனது உணவுக்கான பொருட்களை வாங்குவதுடன் தனது குடும்பத்துக்குத் தேவையான இன்றியமையாதவைகளை வாங்க முடியுமோ அந்த நாடு, மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடாக கணிக்கப்படும்.உடல் ஆரோக்கியத்துக்கான உணவுகளையும்,நோய்கள் தாக்காதவாறு உடலைப் பாதுகாக்கின்ற உணவுகளைக் கொண்டிருக்கும் நாடுகளே மகிச்நசியான நாடாகும்.உடல் ஆரோக்கியம் என்பதும் ஒரு செல்வச் செழிப்பேயாகும்.
முற்போக்குக் கூட்டணியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு திருமதி.சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அமைச்சரவையில்: பொருளாதார அறிஞர்கள் அங்கம் வகித்தமையால் விவசாயத்துக்கும் உள்நாட்டு உற்பத்திகளுக்குமே அவ்வரசாங்கம் முன்னுரிமை கொடுத்துச் செயல்பட்டது.
இலங்கை ஒரு விவசாய நாடுதான் என்பதுடன் பெருந்தோட்ட பயிர்ச் செய்கைக்கான நாடுமாகும்.
ஒரு நாட்டில் உற்பத்தியாகும்,விவசாய உற்பத்தகிளாகட்டும்,பெருந்தோட்ட பயிர்ச் செய்கைகளாகட்டும்,சிறபயிர்ச் செய்கைகளாகட்டும் அவற்றின் தரம் என்றுமே குறையாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
விவசாயத்தின் மூலம் இலங்கையில் உற்பத்தியாகும் உற்பத்திப் பொருட்களை விட அதையொத்த இறக்குமதி செய்யும் பொருட்கள் மலிவானவை என்ற கொள்கையே தவறானது.
இது இறக்குமதி செய்யும் வணிகர்களாலும் முகவர்களாலும் இன்னும் அதிகாரிகள் அமைச்சர்களாலும் மேற்கொள்ளப்படும் தற்காலிக இறக்குமதிக் கொள்கையாகும்.இத்தவறான அனுகுமறையில் இலஞ்சமும் ஊழலும் தாராளமாக இடம்பெறும்.
தேசிய உணர்வற்றவர்களினால் மேற்கொள்ளப்படும் இலஞ்சம் ஊழல் பேகான்றவற்றால் கட்டியமைக்கப்பட்ட இறக்குமதிக் கொள்கையால் நாடு சீரழிந்தது.
மக்களுக்கும் உள்நாட்டு உற்பத்திகளே தேசிய செல்வம்,,அதுவே என் வளம்,எங்கள் வளம் என்ற உணரவு ஏற்பட வேண்டும்.
நானறிந்த வரையில்: ஒரு காலத்தில் எமது நாட்டில் திராட்சை,உருளைக் கிழங்கு,சோயா,கடலை, உழுந்து எதுவுமே விளைவிக்க முடியாது என்பது மட்டுமல்ல,திராட்சையை வீட்டு வளவுக்குள் நட்டால் குடிமூழ்கிப் போகும் என்று சாத்திரமும் சொல்லப்பட்டது.இவையெல்லாம் பரப்பப்பட்டவை.ஒரு நாட்டின் வளத்தை புறந்தள்ளுபவர்களை தேச விரோதிகள் என்று துணிந்து அவர்களின் முகத்துக்கு நேரேகூடச் சொல்வதில் எந்தத் தவறுமே இல்லை.
இவையெல்லாம் உள்நாட்டு உற்பத்திகளுக்கு எதிரான சதியோகும்.பிற்காலத்தில் எதெல்லாவற்றையும் உற்பத்தி செய்ய முடியாது என்று சொல்லப்பட்டதோ அவையெல்லாம் தங்குதடையின்றி தாராளமாக உற்பத்தி செய்யப்பட்டது மட்டுமல்ல,இன்றும் தொடர்கின்றது.ஏழைகளுக்கு எட்டாதவை,அதற்கு வக்கற்றவர்கள் என்று வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள் எள்ளிநகையாடப்பட்டவர்களின் வீட்டுக் கூடத்துக்கே அவை சென்றன.
ஒரு நாட்டுக்கு முதலில் தேவைப்படுவது விவசாயம்,கல்வி,மருத்துவம் என்ற இந்த மூன்றுமேயாகும்.இந்த மூன்றும் சிறப்பாக இருக்கும் நாடுதான் சுபீட்சமான செல்வந்த நாடாகும்.
விவசாய நாடாகவும்,பெருந்தோட்டப் பயிர்களான தேயிலை,றப்பர் அத்துடன் கொக்கோ ஏலம் கறுவா கராம்பு போன்ற பொருளாதாரப் பயிர்களைக் கொண்டிருந்த நாடாகவும் முத்து இரத்தினம் போன்ற பொருளாதார வளங்களைக் கொண்ட நாடாகவும் இருந்த அருமந்த நாட்டை கடன்பட்ட நாடாகவும்,இறக்குமதி செய்யும் நாடாகவும் இயலாமைக்கு கொண்டு வந்துவிட்டிருக்கிறார்கள் கடந்தகால ஆடசியபாளர்கள்.
பொருளாதரம் அதன்மூலம் மக்கள் நலன் சார்ந்த வாழ்வு என எதையுமே பேசாமல் இனங்களின் ஒற்றுமையைச் சீர்;குலைக்கும் இனவாத மதவாத உணர்ச்சிகளை தூண்டிய அனைத்துத் தரப்பினராலும் இலங்கை சிதிலமடைந்தது.
வெளிநாட்டுக் கொள்கை என்பது இலங்கையைப் பொறுத்தவரை வாழைப்பழத்தில் ஊசி எற்றுவது போலவும்,மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையைம் காட்டும் விலாங்கு மீனுக்கு ஒத்ததாகவே இருக்க வேண்டும்.
இனங்களை இலங்கையர் என்ற பொது நிலைக்குள் கொண்டு வராது,இனக்கலவரங்கள் (இனக்கலவரத்தைத் தூண்டியவர்கள் தமிழக வணிகர்களான மலையாளிகளும்,செட்டிமார்களுந்தான்) தொடங்கி இன முரண்பாடுகளை அரசியல் அலகுகளாக விழுமியமாக அதை ஒரு பண்பாடாகவே வளரவிட்டு அரசியல் நடத்தி அப்பலவீனத்துக்கூடாக இந்தியா, சீனா, ஐரோப்பிய நாடுகளை இலங்கையில் ஆதிக்கம் செலுத்த வைத்தமையை அறவே நீக்கிவிட முடியாதவாறு இலங்கையை ஆணடவர்கள் எடுப்பார் கைப்பிள்ளையாக மாற்றிவிட்டார்கள்.
அநுராவின் ஜனாதிபதிப் பதவி என்பது,தனது கூட்டமைப்பின் கொள்கையை நிறைவேற்றுவதில் நிறைவேற்று அதிகாரத்தைக் கடுமையாக கடைப்பிடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.ஆனால் கடைப்பிடிப்பார் என எதிர்பார்க்கின்றோம்.
மூக்குள்ள நாளும் சளி போகாது என்பது போல தீராத தலையிடியாயிருக்கும் ஒற்றைத்தலையிடிக்கு தைலமாக இருக்கும் பொலிஸ் ,காணியதிகாரத்தை மகாகாணங்களுக்கு கொடுப்பதுததான் உகந்தது என்ற போதும் அதனைச் செயற்படுத்துவதில் சில தடைகள் ஏற்படலாம்.
இதில் புத்தமத சங்கங்களும் புத்தமதகுருமாரும் முழு இலங்கைக்குமான நற்சிந்தனையைக் கொண்டிருப்பதன் அவசியம் மிக முக்கியம் அதுவே கவனிக்க வேண்டிய விடயமுமாகும்.
இலங்கைக் குடிமக்கள் அனைவரும் இலங்கையர் என்ற பொதுப்பெயரை அனைத்துத் தரப்பினரும் ஒருமித்து ஏற்றுக் கொள்ளல் என்பதுதான் இணமுரண்பாடுகளற்ற ஒரு நாட்டை உருவாக்குவதற்கான முதல் பயணப் பதிவாகும்.
முற்போக்குச் சிந்தனையும்,சோசலிசக் கோட்பாடும்,ஜனநாயகப் பண்பாடும் கொண்டவராக அவதானிக்கப்பட்ட இன்று இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட திரு.அநுரா குமார திசநாயக்கா சட்டப் பாதுகாப்புள்ள மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடாக இலங்கையை மாற்றியமைப்பார் என நம்புகிறோம்.
தனித்துவமாகவும்,மக்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க அரசாட்சி நடத்தும் வலுவை புதிய ஜனாதிபதி மேற்கொண்டிருக்கும் அதே வேளை உலகியல் போக்கில் ஒவ்வொரு நாடும் இன்னொரு நாட்டுடன் பல்வேறு அரசியல் பொருளாதார கட்டமைப்புகளுக்காக இணைந்து செயல்படுவதை புதிய ஜனாதிபதியும் அதனைத் தவிர்க்காது மிகவும் நுட்பமான இராஜதந்திரப் போக்கை கடைப் பிடிப்பார் எனவும் எதிர்பார்க்கின்றோம்.
அண்டை நாடான இந்தியாவால்தான் இலங்கை இந்நிலைக்கு ஆளானது என்பதை நாம் அறிந்த போதும் அதையும் கையாளும் வல்லமையை புதிய ஜனாதிபதி கொண்டிருப்பார் என்பதை அவரின் உரைகளில் காணப்பட்ட சாரசம்சம் இனங்காட்டியுள்ளது.