கவிதைகள்

அந்தக் கடிதம்…. கவிதை… முல்லைஅமுதன்

அந்தக் கடிதம் கிடைக்காமலேயே
இருந்திருக்கலாம்.

அம்மா கேட்டு புலம்பினாள்.
அக்கா
அறையெல்லாம் தேடிச் சலித்தாள்.
போதாததிற்கு,
தம்பியும் பறனில் தேட உதவினான்.
அதுவாக இருக்குமோ?
இதுவாக இருக்குமோ??

கண்டுபிடித்ததாய்,
பின் படித்து எமாந்தார்கள்.
அப்பா மட்டும் கண்களை மூடியபடி
சாய்மனைக் கதிரையில் கிடந்தார்.
ஒருவாறாக,

பின்கட்டில் நாய் கிளறிய
குப்பையில் கண்டெடுத்த
கடித்தைப்
படித்துத் தெரிந்துகொண்டார்கள்
தற்கொலைக்கான காரணத்தை.

முல்லைஅமுதன்
20/09/2024

Loading

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *