இந்தியா

மோடியின் அமெரிக்க விஜயம் – நேரில் சந்திக்க காத்திருக்கும் ஸ்டாலின்

பிரதமர் மோடி இம்மாதம் 21ஆம் திகதி அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 21, 22, 23 ஆகிய 3 நாட்கள் அவர் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் வரும் 21ஆம் திகதி அமெரிக்கா செல்லும் முன்னர் சந்திப்பு நடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்வி நிதி, மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்கான நிதியை விடுவிக்க கோரியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *