இந்தியா

“அண்ணா பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாதுரையின் 116-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, கே.என்.நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள்., மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு அண்ணா உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *