இந்தியா

18 நிறுவனங்களுடன் 7,616 கோடி முதலீட்டு ஒப்பந்தங்களுடன் நாடு திரும்பினார் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 19 நாட்கள் உத்தியோக விஜயம் மேற்கொண்டு கடந்த மாதம் 27ஆம் திகதி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாடு திரும்பியுள்ளார்.

இப்பயணத்தின்போது முதலமைச்சர் முன்னிலையில் அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்தோடு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை அவர் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.500 கோடி முதலீட்டில், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தற்போதுள்ள கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்த 11ஆம் திகதியன்று சிகாகோவில் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து ஓசூரில் ரூ.100 கோடி முதலீடு செய்யும் வகையில் அமெரிக்காவின் RGBSI நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் ட்ராயில் அமைந்துள்ள RGBSI நிறுவனத்தின் அதிகாரிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஓசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் நிறுவனம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் மூலமாக 18 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்காக ஒப்பந்தம் கையெழுத்து கையெழுத்தாகி உள்ளது.

இந்நிலையில் அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு சிகாகோ விமான நிலையத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு புறப்பட்டுள்ளார். சென்னை புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமெரிக்க வாழ் தமிழர்கள் வழியனுப்பி வைத்தனர். முதலமைச்சரின் வருகைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிகாகோ விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் திமுக கொடி மற்றும் பதாகைகள் ஏந்தி வழியனுப்பி வைத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.