கட்டுரைகள்

தமிழ்ச் சொல்லும் அச்சொல்லில் மறைந்திருக்கும் புதைபொருளும்!… சங்கர சுப்பிரமணியன்.

சங்கர சுப்பிரமணியன்

தமிழில் பல சொற்களில் பொருட்கள் புதைந்து கிடக்கின்றன. இவ்வாறு புதைந்து கிடக்கும் சொற்கள் பலருக்கு தெரியும். பலருக்கு தெரியாமலும் இருக்கலாம். தெரியாமலிருந்தால் பரவாயில்லை. தெரிந்திருப்பவர்கள் சொல்லலாம் அல்லவா?

ஏன் சொல்லவில்லை அதற்கு காரணம் என்னவாக இருக்கும்? முதலில் கட்டுரையைப் பார்ப்போம். புரிந்தாலும் உங்களுக்குப்புரியும். ஒருவேளை புரிந்தாலும் நீங்களும் சொல்லாதவர்கள் பட்டியலில் இடம்பெறலாம்.

தேவர்கள் அசுர்கள் என்ற சொற்களை பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். தமிழறிந்த அறிஞர்கள் இந்த சொற்கள் தமிழில் எப்போது இடம் பெற்றிருக்கும் என்பதைச் சொல்வார்களா? ஏனென்றால் தமிழர் ஆரம்மபத்தில் இயற்கையைத்தான் இறைவனாக எண்ணி வணங்கி இருக்கிறார்கள்.

அதன்பின் தம் இனத்தை காத்த தலைவர்கள் மடிந்ததும் அவர்கள் மடிந்த இடத்தில் கல்லை நட்டுவைத்து வணங்கியிருக்கிறார்கள். அப்போதிருந்துதான் நடுகல் வழிபாடு தொடங்கியது. அந்த நடுகல் வழிபாடு நடந்த காலத்தில் தேவர்களும் அசுரர்களும் தோன்றியிருக்க வழியில்லை. கடவுள் வழிபாடு தொடங்கிய பின்னரே தேவர்கள் தோன்றினர்.

Thinakkural.lkகடவுள் என்று ஒருவராக இருந்தவர் கடவுளர் என்று பலர் ஆனார்கள். இவர்களுடன் வாழ்ந்தவர்களே தேவர்கள். இந்த தேவர்களுக்கும் தலைவனாக ஒருவர் இருந்தார். அவர்தான் தேவேந்திரன். அந்த தேவர்களுக்கு படைத் தளபதியாக கடவுள் முருகன் இருந்தார். தேவேந்திரனுக்கு கடவுள் முருகன் படைத்தளபதி என்றால் தேவர்கள் கடவுளைவிட பெரியவர்களா? இப்படி பல இடங்களில் சிக்கல்கள் உள்ளன.

நல்லவர்கள் என்று ஒரு கூட்டம் இருந்தால் தீயவர்கள் என்று ஒரு கூட்டம் இருக்கும். நல்லவர்கள் தேவர்கள் என்பதால் அசுரர்கள் தீயவர்கள் ஆனார்களா, அல்லது
ஆக்கப்பட்டார்களா? தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அடிக்கடி சண்டை வருமாம்.

தேவர்கள் மேலுலகத்தில் இருப்பவர்கள். அசுரர்கள் பூமியில் வாழ்பவர்கள். அசுரர்களால் மேலுலகத்துக்கு செல்லமுடியாது.

அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் அடிக்கடி சண்டை வரும் என்றால் தேவர்கள்தான் அடிக்கடி கீழிறங்கிவந்து சண்டை போடுவார்கள் என்பதை அறியமுடிகிறது. ஒருவர் இன்னொருவர் இடத்திற்கு சென்று அவர்களை அடக்க முயன்று ஆதிக்கம் செய்ய முற்பட்டாலோ ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் மட்டமே பிரச்சனை வரும். நமக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்று இருக்கமுடியாது.

அல்லது தேவர்கள் மேலே இருக்கிறார்கள் என்பதெல்லாம் பொய்யாக கூட இருக்கலாம். தேவர்கள் அசுரர்கள் எல்லாம் பூமியில்தான் இருந்திருப்பார்கள். தேவர்கள் பூமியில் இருந்திருப்பார்கள் என்பதற்கு வலுவான காரணத்தை சொல்லமுடியும்.

இனிமேல் தமிழ் சொல்லையும் அதில் புதைந்திருக்கும் பொருளையும் பார்ப்போம்.
தேவர்களுக்கு பணிபுரிவதற்கு அடியாட்கள் இருந்திருக்கிறார்கள். அவ்வாறு பணிபுரிபவர்கள் பெண்களாகவே இருந்திருக்கிறார்கள். அப்படி தேவர்களுக்கு அடியாட்களாக இருந்த பெண்களை தேவர் அடியாள் என்று ஒருமையில் சொன்னார்கள்.

இந்த தேவர் அடியாள் என்ற சொல்லே தேவரடியாள் என்ற ஒற்றைச் சொல்லாக மாறிஅகரமுதலி - ஏரியை அழிப்பவர்களுக்கு நரகம் -------------------------------------------------------------------------- திருவண்ணாமலை அருகே கண்டெடுக்கப்பட்ட சோழர்கால ... அதன்பின் தேவடியாள் என்று மருவியது. இச்சொல்லே தேய்ந்து தேவடியா ஆனது என எண்ணுகிறேன். இதை தமிழறிந்த பெரியோர்கள்தான் விளக்க வேண்டும்.

தேவடியா என்று இழிவாக பார்க்கப்படும் சொல்லில் புதைந்திருக்கும் பொருள்தான்
பணிப்பெண்ணுக்கு உண்டான தேவரடியாள் என்ற காரணப் பெயர். பண்பு கருதி இனி தேவரடியாள் என்றே இங்கு இனி குறிப்பிடுகிறேன்.

இந்த தேவரடியாள் மேலுலகத்தில் இருந்ததாக கூற சான்றுகள் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. மேலுலகத்தில் ஊர்வசி, ரம்பை மற்றும் திலோத்துமை என்ற நடனப் பெண்கள் மட்டும் இருந்ததாக பார்த்தவர்கள் சொல்வதை மட்டுமே கேட்டிருக்கிறோம்.

இந்த தேவரடியாள் பூமியில் இருப்பது மட்டும் நமக்கு தெரியும். இவர்கள் பூமியில் இருக்கும்போது இவர்கள் பணிபுரிந்த தேவர்களும் இங்குதான் இருந்திருக்க வேண்டும். அப்படியானால் இந்த தேவர்கள் யார்?

இப்பெண்கள் ஆலயங்களில் தங்கி பாடுதல், நடனமாடுதல், இறைப் பணிகளுக்கு தேவையானவற்றை செய்வதிலும் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். ஆகவே இறைநம்பிக்கை ஏற்பட்டு ஆலயங்கள் எழுப்பப்பட்ட பின்னரே இப்பெண்களை குறிக்கும் சொல் உருவாகி இருக்கவேண்டும்.

அப்படி உருவாகியிருந்தால் இறையடியாள் அல்லது கடவுளடியாள் என்றல்லவா சொல் உருவாகி இருக்கவேண்டும். அப்படியானால் இந்த கடவுளரே தேவர்களா? மனிதர்களை காப்பதாக சொல்லப்படும் கடவுளர் யாருடன் போர் புரிந்திருப்பார்கள். இந்த மனிதர்கள்தான் அசுரர்களா?

யாரோ ஒன்றிரண்டுபேர் கடவுளை எதிர்த்திருக்கலாம். அவர்களை எதிர்ப்பதற்கு படையும் படைத்தளபதியும் தேவைதானா?
கடவுளை எதிர்த்தவன் கொடுமையான அரசனாக இருப்பின் அவன் கொடுங்கோலன் என அறியப்படுவான். அவன் நாட்டு மக்கள் எப்படி கொடுங்கோலர்கள் ஆவார்கள்.

அரசன் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்கள் அரசன் கட்டளைப்படி போரிடுவார்கள். அசுரன் கட்டளைப்படி போரிடும் மக்கள் எப்படி அசுரர்கள் ஆவார்கள். எனவே அம்மக்கள் அசரர்கள் அல்ல. அசுரர்கள் ஆக்கப்பட்டனர். இந்த மக்களை எதிர்த்துத்தான் கடவுளர் போரிட்டுள்ளனர்.
அதாவது தேவர்கள் அசரர்களுடன் போரிட்டுள்ளனர் என்று புராணங்கள் சொல்கின்றன.

Excavations are untold | அகழாய்வு நடந்தும் அவிழாத முடிச்சுகள்

திரும்பவும் ஆலயத்தில் தங்கியிருந்து பணிபுரிந்த தேவரடியார்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். ஆலயங்களுக்கு மன்னர்கள் பெருமளவில் பணஉதவி செய்துள்ளார்கள். இதனால் இந்த தேவரடியாட்களும் நன்றாக இருந்துள்ளனர். மன்னராட்சி முடிந்தபின் ஆலயங்களுக்கு வருமானம் குறையவே இந்த பெண்களின் வாழ்க்கைத் தரமும் கேள்விக்குறியானது.

அந்நிலையில் மேல்தட்டு மக்கள் தம் ஆசைக்கு பயன்படுத்தி இவர்களை தங்கள் ஆசைநாயகிகளாக்கி ஆலயங்களில் இருந்து அப்புறப் படுத்தி இருக்கிறார்கள். இந்த மேல்தட்டு மக்களில் பலர் அடங்குவர். நாளடைவில் பணமிருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இவர்களின் வாழ்க்கை நிலைகுலைந்து போனது.

எனவே ஆலயங்களில் இறைவனுக்கு பணிபுரிந்து கௌரவமாக வாழ்ந்து மதிப்பாக பார்க்கப்பட்டவர்கள் மேல்தட்டு மக்களால் தேவரடியாளர்களாக பார்க்கப்பட்டவர்கள் மாறுபட்டு பார்க்கப்பட்டனர். எனவே இறைநம்பிக்கை வந்தபின்னரே ஆலயங்கள் எழுப்பப் பட்டஉள்ளன.

தமிழ்செங்கமலம்: ஆலய வழிபாடுஆலய வழிபாடு தோன்றியபின் இறைப்பணியாற்ற பெண்கள் வந்தபின்னரே தேவரடியாள் என்ற சொல் வந்திருக்க வேண்டும். தமிழர் பண்பாட்டில் இயற்கையோடு இயைந்த இயற்கை வழிபாடு இருந்தது. இயற்கை வழிபாடு நடுகல் வழிபாடானது. அதன்பின்னரே இறைவழிபாடு தோன்ற ஆரம்பித்தன.

இறைவழிபாட்டிற்கு பின்னரே தமிழில் தேவர், அசுரர், தேவரடியாள் போன்ற சொற்கள் தோன்றி இணைந்திருக்க வேண்டும். இதுதான் என் சிற்றறிவுக்கு உண்மையாக படுகிறது. கடவுள் விருப்போ வெறுப்போ இன்றி நடநிலை நின்றே இதனைக் கூறுகிறேன்.

தமிழ்கூறும் நல்லுலகில் தமிழாய்ந்த பெரியோர்கள் கருத்து வேறாக கூட இருக்கலாம். எனவே என் மனதில் தோன்றியவற்றை மனச்சான்றுக்கு மாறுபட்டு மறைக்கவில்லை. எனவே தமிழில் இவ்வாறு பலசொற்கள் இணைந்து அவற்றுள் பொருள் புதைந்துள்ளன என்பதை உறுதியாக கூறமுடியும்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.