கட்டுரைகள்

அமெரிக்க செப் 11 இரட்டை கோபுர தாக்குதல்… வெளிவராத மர்மமும் உண்மைகளும் !… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(செப் 11 இரட்டை கோபுர தாக்குதலின் பின்னணி பற்றி ‘எரிக் ஹஃப்ஷ்மிட்’ என்ற புலனாய்வு பத்திரிகையாளர் எழுதிய Painful Questions : An analysis of the September 11th attack என்ற புத்தகமும், Confronting the Evidences: A call to reopen 9/11 Investigation என்ற குறுந்தகடும் பல உண்மைகளை வெளிக் காட்டியுள்ளன)

செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதல் குறித்து எண்ணற்ற பல புரளிகளும் வதந்திகள் இன்னமும் எழுந்து வருகின்றன. இஸ்ரேல் கூட இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ளது என்று எண்ணற்ற மர்மங்களும் ஊகங்களாக செய்திகளில் வெளிவந்தன.

ஆனால் இத்தகைய ஊகங்கள் அவை எந்த அளவுக்கு உண்மை என்பது பற்றியும் இந்த தாக்குதலின் பின்னணி பற்றி ‘எரிக் ஹஃப்ஷ்மிட்’ என்ற புலனாய்வு பத்திரிகையாளர் எழுதிய Painful Questions : An analysis of the September 11th attack என்ற புத்தகமும், Confronting the Evidences: A call to reopen 9/11 Investigation என்கிற பெயரில் ஒரு குறுந்தகடும் பல உண்மைகளை வெளிக் காட்டியுள்ளன.

2001 செப்டம்பர் 11 அன்று நடத்தப்பட்ட தாக்குதலானது எவரும் தொட முடியாது என்று இருந்த வல்லரசு அமெரிக்காவின் இதயத்துள் ஊடுருவி அடித்ததுடன், உலகின் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கியிருந்தது.

இதன் விசாரணையின் இறுதியில் இச்சம்பவத்தை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து ஆய்ந்து இதன் காரணகர்த்தாவான ஒசாமா பின்லேடன் என அமெரிக்க அரசு குற்றஞ்சாட்டி
அனைத்து குற்றவாளிகளையும் பகிரங்கமாக அறிவித்தது.

அதோடு அமெரிக்க அரசின் பாதுகாப்பு விஷயத்தில் இருந்த அலட்சியத்தைச் சொல்லி, அமெரிக்க விமான நிலையங்கள், அங்கிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், மற்றும் உளவு அமைப்புகளின் கையாலாகாத் தனத்தையும் சுட்டிக் காட்டி, தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா தொடங்கிய யுத்தத்துக்கு வழி வகுத்தது.

ஈராக் – ஆப்கான் போர்:

ஈராக் – ஆப்கானிஸ்தான் இரண்டையும் தாக்குவதற்கு அமெரிக்கா ஏற்கனவே முடிவு செய்திருந்தது. என்றைக்கிருந்தாலும் இவர்களால் அமெரிக்காவுக்கு தலைவலி என்பது அறிந்ததே. ஆனால் வலுவான காரணங்கள் இல்லாமல் இதைச் செய்ய இயலாது.

ஒசாமா பின்லேடனின் இரட்டை கோபுர தாக்குதல் திட்டம் அமெரிக்காவுக்கு சரியான காரணமாக இருந்தாலும் அமெரிக்கா மீது சர்வதேச அனுதாபம் முழுமையாக விழ வேண்டும் என்பதற்காக, தாக்குதல் மிகவும் அதிகமாக தெரிய வேண்டும் என்று அமெரிக்க அரசு முடிவு செய்திருக்க வேண்டும்.

அதன் விளைவு தான் இந்த ஈவு இரக்கமற்ற கொடூரமான சதிவேலை , என்று ‘எரிக் ஹஃப்ஷ்மிட்’ என்ற புலனாய்வு பத்திரிகையாளர் எழுதிய Painful Questions : An analysis of the September 11th attack
என்ற நூல் பல குற்றச் சாட்டுகளை முன்வைத்துள்ளது. இரட்டை கோபுர தாக்குதலை தடுத்திருக்க முடியுமா?

9/11 விசாரணை அறிக்கையில் கூட இத்தாக்குதலை அமெரிக்க உளவுத்துறை நினைத்திருந்தால் தவிர்த்திருக்க முடியும் என்று மறைமுகமாக சுட்டிக் காட்டியிருந்தது.
இவ்வாறு மிகப்பெரிய தாக்குதல் நடக்கக் கூடும் என்று தெரிந்தும், இது சம்பந்தமான அனைத்து விவரங்களும் கிடைத்தும் எப்படி கோட்டை விட முடியும் என்றும் வினவப்பட்டது.

அதுவும் உலகின் பலம் பொருந்திய அமெரிக்கா, நினைத்தால் தடுத்திருக்க முடியும். ஆனால் இது கோட்டை விடப் பட்டதா? அல்லது நடக்கட்டும் என்று வேண்டும் என்றே விடப்பட்டதா? என்ற கேள்வியை முன்னிறுத்தி முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை மிகவும் இந்நூல் சாடியுள்ளது.

தாக்குதலுக்கு முன்பாக சந்தேகப்படும் படியான அல்காய்தா ஆட்களை கூட உளவுத்துறை மிக எளிதாக கைநழுவியிருக்கிறது. நான்கு விமானங்கள் அடுத்தடுத்து கடத்தப்படுவது தெரிகிறது. அமெரிக்காவிடம் இத்தகைய சந்தர்ப்பங்களில் இவற்றை பின் தொடர்ந்து தாக்கவல்ல அத்தனை எஃப் 16 ரக போர் விமானங்களை கனடாவுக்கும் அலாஸ்காவுக்கும் அனுப்பி வைத்திருந்தது எனவும் அந்நூல் விவரிக்கிறது.

பெண்டகன் தாக்குதல்:

தாக்குதலின் பின்னர் எடுக்கப்பட்ட பெண்டகன் படங்கள் பல மார்ச் 2017இல் எஃப் பி ஐ வெளியிட்டு பின் ஏதோ காரணங்களால் அழிக்கப்பட்டு விட்டன. இதற்கு முன்பாக
அரசு ராணுவ தலைமையகமான பெண்டகன் தாக்கப்பட்ட படங்களை வெளியிட்டிருந்தது. இப்படங்கள் குறித்தும் இந்த ஆவண நூல் பல கேள்விகளை எழுப்புகிறது.
இதேவேளை இந்த போட்டோக்கள் உண்மை எனில் மோதியது போயிங் 757 இல்லை. புகைப் படங்களில் விமானம் மோதி சேதமடைந்த பகுதிகளின் நீள , அகல , உயரங்களைப் பார்க்கும் போது சேதம் குறைவாகவே தெரிகிறது. மோதியது போயிங் என்றால் சேதம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

அல்லது கடத்தப் பட்ட விமானம் வேறெங்கோ சென்று விட , வேறு விமானம் கொண்டு வேண்டும் என்றே மோதியிருக்க வேண்டும். அதோடு பெண்டகன் இருக்கும் இடத்திற்கு அத்தனை சுலபமாக எந்த விமானமும் வந்து விட முடியாது. அத்துமீறி அப்படி நுழைந்தால் தானியங்கி விமான எதிர்ப்பு ஏவுகணைகள் தாக்கி அழித்துவிடும். ஆனால் அன்று அவை என்ன ஆயின என்று கேள்வி எழுப்புகிறது.

முற்றிலும் சிதைந்து இரட்டை கோபுரங்கள். விமானம் மோதினால் ஒரு கட்டிடம் தள்ளாடி சாய்ந்து விழ வேண்டும். ஆனால் இச்சம்பவத்தின் போது கட்டிடம் எப்படி அப்படியே நொறுங்கி விழுந்தது எனவும், கட்டிடம் நொறுங்கிய விதம் கண்டிப்பாக விமானம் மோதியதால் இருக்க முடியாது.

வர்த்தக மைய கட்டிடங்கள் இரண்டிலும் ஒவ்வொரு தளத்திலும், ஒவ்வொரு மூலையிலும் குண்டு வைத்து, ஒரே சமயத்தில் வெடிக்கச் செய்தால் மட்டுமே இவ்வாறு நொறுங்கி அதே இடத்தில் விழுவது சாத்தியம். விபத்தின் போது எழுந்த கரும்புகை , விமானம் மோதிய வினாடிக்கு முன்பாகவே கட்டிடத்தில் தெரிந்த தீப்பிழம்பை சாட்சியாக வைத்து
அவ்வளவு துல்லியமாக ஆராய்ந்து பார்த்திருக்கிறார்கள்.

வர்த்தக மைய கட்டிடங்களுக்குள் குறைந்தது 14 தொன் வெடிபொருட்கள் வைத்திருந்தால் மட்டுமே இவ்வாறு வெடித்து சிதற முடியும் என்கிறார் இயற்பியல் விஞ்ஞானி ஜெஃப் கிங் என்பவர்.

ஆயிரக்கணக்கானோர் நடமாடும் இடத்தில் இவ்வாறு மூலைக்கு மூலை வெடி குண்டுகள் எப்படி வைக்க முடியும்? என்ற கேள்விக்கும் தயாராக பதில் வைத்திருக்கிறார்கள்.
செப்டம்பர் 11 க்கு ஒரு வாரம் அல்லது எட்டு நாட்கள் முன்பிருந்தே அடிக்கடி கட்டிடத்தில் மின்சாரம் தொடர்பான பிரச்சனைகள் இருந்ததாகவும், இதனால் அவ்வப்போது கட்டிடத்தில் இருள் சூழ்ந்தததாகவும் , எப்போதும் இல்லாத அளவுக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மேற்கோள் காட்டுகின்றனர்.

விசாரணையில் முட்டுக்கட்டை:

தாக்குதல் நடந்த மறுநாளே ஆரம்பித்த விசாரணைகளுக்கு அமெரிக்க அரசு ஆரம்பம் முதலே பிரச்சனைகள் பல தந்தது. விசாரணைக்கு அதிபர் புஷ் உடன்பட மறுத்ததுடன், சம்பவ இடத்திலிருந்து வெறும் 200 மாதிரிகளை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துச் செல்ல அனுமதித்தது.

மிச்சமிருந்த மலையளவு கட்டிட மற்றும் இரும்பு கழிவுகளை நம்ப முடியாத வேகத்தில் அப்புறப்படுத்தப்பட்டது. இவ்வாறு அலை அலையாக கேள்விக்கணைகளை தொடுக்கிறது இந்த நூலும் ஆவணப்படமும்.

செப்டம்பர் 11 தாக்குதல் பின்னணி

ஒசாமாவின் அல்கொய்தா இயக்கம் தான் என்பதில் சந்தேகமும் இல்லை. ஆனால் தாக்குதல் நடத்தப் போவது தெரிந்தும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல், அந்த தாக்குதலை பல்வேறு அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தி கொள்ள அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் முடிவு செய்தார்.

அதன் தொடர்ச்சியாகவே விமானம் மோதவுள்ள கட்டிடங்களில் குண்டுகளை முன்கூட்டியே வைத்து கட்டிடம் துளி கூட மிச்சம் வைக்காமல் உருக்குலைய வழிசெய்தார்கள்.

அல்கொய்தா தீவிரவாதிகள் இலக்கு ஒரு வேளை பெண்டகனாக இருக்கலாம் என்று சந்தேகம் அமெரிக்க அரசுக்கு இருந்திருக்கிறது. ஆனால் கடத்தப்பட்ட நான்கு விமானங்களில் எதுவுமே அந்தப் பக்கம் வரவேயில்லை. இரண்டு வர்த்தக மைய கட்டிடங்களில் மோதின.

ஒன்று பென்சில்வேனியாவில் மோதி நொறுங்கியது. இன்னொரு விமானம் எங்கே சென்றது என்பதே தெரியவில்லை என்று இந்த ஆவண நூல் பாரிய சந்தேகம் எழுப்புகிறது.
அந்த விமானம் எங்கே சென்றது என்று கண்டுபிடிப்பது ஒரு புறம் இருக்க, பெண்டகனை தாக்கிவிட்டார்கள் என்று தெரிந்தால் உலகமே அதிர்ச்சி அடையும் என்பதால், தானே ஏற்பாடு செய்து ஒரு விமானத்தை கொண்டு வந்து, பெண்டகன் மீது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திவிட்டார்கள் என்று நம்பச் செய்து விட்டார்கள்.

அமெரிக்க அரசு பெண்டகன் தாக்கப்பட்டது தொடர்பாக வெளியிட்ட சில புகைப்படங்களில் செப்டம்பர் 12 என்ற தேதி பதிவாகி இருந்தது பின்னர் அறியப்பட்டது. அதாவது தாக்குதல் நடந்த மறுநாள் எடுக்கப்பட்ட படங்களாகும். அமெரிக்கா தன் விரல்களால் தன் கண்களைக் குத்திக் கொள்ள முயன்றது போல பல ஆதாரங்களை மறுப்பதற்கிடமின்றி் இந்நூலில்
எரிக் ஹஃப்ஷ்மிட் தெரிவித்துள்ளார்.

புலனாய்வு பத்திரிகையாளரான எரிக் ஹஃப்ஷ்மிட் எழுதிய Painful Questions : An analysis of the September 11th attack என்ற புத்தகமும், Confronting the Evidences: A call to reopen 9/11 Investigation என்கிற குறுந்தகடு அமெரிக்க அரசுக்கு பல சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.