பலதும் பத்தும்
கிரிக்கெட் விளையாடத் தடை; இத்தாலியில் புதிய சட்டம்!
இத்தாலியின் சிறிய நகரத்தில் ஒன்றான மோன்பால்கோனின் (Monfalcone) கிரிக்கெட் விளையாட்டை தடை செய்துள்ளது.
மோன்பால்கோனின் கலாச்சாரத்தை கிரிக்கெட் ஆபத்தில் ஆழ்த்துவதாக கூறி நகர மேயர் விளையாட்டை தடைசெய்துள்ளதாக பிபிசி செய்திச் சேவை கூறியுள்ளது.
மோன்பால்கோனில் வெறும் 30,000 மக்கள் வசிக்கின்றனர், அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வெளிநாட்டினர், அவர்களில் பெரும்பாலோர் பங்களாதேஷ் முஸ்லிம்கள். அவர்கள் 1990 களில் ராட்சத பயணக் கப்பல்களை உருவாக்க நகரத்தை அடைந்தனர்.
இந்த நிலையில் அலுக்கு வந்துள்ள புதிய சட்டத்தின் படி, நகரில் கிரிக்கெட் விளையாடி பிடிபட்டால், €100 ($111) வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.
மேயர் அன்னா மரியா சிசிண்ட் தனது நகரத்தையும் கிறிஸ்தவ விழுமியங்களையும் “பாதுகாக்க” வேண்டும் என்று கூறுகிறார்.