மாயலோகம்…சிறுகதை…. யாழ்., எஸ்.ராகவன்
அப்படி ஒன்றும் பெரிதாக நடந்து விடவில்லை ஆனாலும் கௌரி அத்தையை யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை.
அந்தப் பெரிய கார் டோல்கேட் முன்பு நின்று கொண்டிருக்கும் பொழுது ஒரு பெண் கை நிறைய பூக்கள் ஓடும் கண்கள் நிறைய கனவுகளோடும். பூ வியாபாரம் செய்து
கொண்டிருந்தாள். டோல்கேட்டில் வண்டி நிற்கும் சிறிது நேரத்தில் ஓடியாடி எப்படி இவளாள்பூ விற்க முடிகிறது என்று கௌரியத்தை சற்று நிதானமாக தான் பார்த்தாள் .கௌரி அத்தையை பார்த்தவுடன் பூவுக்கும் பெண் அம்மா காலையிலிருந்து போனியே ஆகலாமா தயவுசெய்து வாங்கிக்கோங்க புள்ளைக்கு பால் வாங்க கூட காசு இல்லை என்று சொன்னதைப் பார்த்து கண்கலங்கி போனாள்.
வேண்டாம் என்று பலமுறை மறுத்தும் அவருடைய கெஞ்சல் பொறுக்க முடியாமல் கௌரியத்தை”15 ஆண்டுகள் ஆகிவிட்டது நான் பூ வச்சு”என்றாள். அம்மா சாமிக்காது போடுங்கம்மா இது பூவிற்கும் கண்ணியமா.
ஆனாலும் விடாப்படியான அவள் சாதுரியத்தையும் சாமத்திரியத்தையும் பார்த்து தன் பர்ஸை திறந்து 200 ரூபாய்க்கு பூக்கள் வாங்கி பின்னால் வரும் தம்பி
மனைவி மகள் மருமகள் தன்னுடைய வேலைக்காரி அத்தனை பேருக்கும் கொடுத்து பூ வைத்துக்கொள்ள சொன்னாள்.
வண்டி விழுப்புரத்தை தாண்டும் போது பழைய நினைவுகளில்மூழ்கியனாள் கௌரியத்தை .மாடுகள் கட்டப்பட்ட வீடு பெரிய தின்னை எல்லோரும் அமர்ந்து கொள்ளும் இடம் வீட்டின் பின்புறம் மல்லிகை முல்லை கனகாம்பரம் செம்பருத்தி ரோஜா என்று எத்தனை விதமான மலர்கள்.
அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து வீட்டு வாசலில் சாணம் கரைத்து மெழுகி அணில் ஓடி விளையாடு கோழி கொக்கரித்து ஆடுகள் அங்குமிங்கும் ஆடியும் ஓடியும் திரிந்த பண்ணை வீடு.
எத்தனை பேர் அந்த திண்ணை வீட்டில் அமர்ந்திருப்பார்கள் குடை ரிப்பேர் செய்யும் காதர் பாய் பழைய பாத்திரங்களை எடுத்துக் கொள்ளும் பீட்டர் அண்ணன். பழைய கிறிஸ்தவ துளிகளை தெய்த்துக் கொடுக்க வரும் மாடசாமி.
இவர்களெல்லாம் வேலைகள் செய்து முடித்த பின்பு ஒரு செம்பு நிறைய நீச்ச தண்ணியை குடித்து காலை உணவை அங்கே முடித்துக் கொள்வார்கள். காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை அத்தனை வேலைகள் எல்லோருக்கும் இருந்தது ஆனாலும் மனது சுத்தமாய் இருந்தது.
கௌரியத்தை வாக்கப்பட்டு வந்த நாள் முதல் பம்பரம் போல செயல்படுவார் அவர் சாணம் தெளிக்கும் அழகை பார்த்து எல்லா ஜீவராசிகளும் வந்து வீட்டு வாசலில் நிற்கும்.
மாமாவிற்கு ரயில்வேயில் உத்தியோகம் எப்பொழுதும் வெற்றிலை சீவல் சங்கீதம் என இருப்பார். எல்லா சாமியை கும்பிட்டும் குழந்தை வரம் மட்டும் கிடைக்கவில்லை. தம்பி ரகுவின் மேல் தான் ஒட்டுமொத்த பாசத்தையும் வைத்திருந்தார் கௌரியத்தை அவனுக்கு திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் பிறந்தன. எல்லா பேர்காலமும் இந்த பழமையான வீட்டில் தான் நடந்தது.
இரண்டு பெண் குழந்தை இரண்டு ஆண் குழந்தை ஓடியும் ஆடியும் விளையாடும் அளவிற்கு பெரிய பட்டாசாக இருக்கும் வீடாக இருப்பது கௌரி அத்தை என் மனதிற்கு எவ்வளவு குதூகுலத்தை கொடுத்திருக்கும். பின்பக்கம் உள்ள கிணறு தண்ணீரைத்துக் கொண்டு அந்த கல்லில் துவைக்கும் போது கேட்கும் இடி ஓசை மரங்கள் நிலம் வந்திருக்கும் பறவைகளின் ஓசை இது எல்லாம் தான் அந்த வீட்டுக்கு அழகு என் நினைத்தாள்.
மாமா போன அப்புறம் எவ்வளவோ வற்புறுத்தியும் அவள் சந்தடி மிகுந்த மாயலோகமான பெருநகர சுடுகாட்டிற்கு வர விரும்பவில்லை.
தொழிற்சாலை சத்தமும் நெருக்கடியான தெருக்கள் எந்த விதமான பயிர்களையும் எந்தவிதமான ஜீவராசிகளையும் இல்லாத அந்த மாயோலோகத்தை அறவே வெறுத்தால் கௌரி அத்தை.
ரகுவின் மூத்த பையன் அத்தையிடம் பொய் சொல்லி சென்னைக்கு அழைத்து வருகிறான்.
கார் பெங்களூர் சாலையில் பூந்தமல்லி அருகே திரும்பும்போது அத்தை கேட்டாள் என்னடா சென்னைக்கு மிக அருகில் என்று சொல்கிறார் கிட்டத்தட்ட பெங்களூர் பக்கத்திலேயே போயிருவீங்க போலயே இல்ல அத்தை இங்கதான் பக்கத்துல என்று சிவா சொல்லி கூட்டி வந்த இந்த பெரிய மைதானம் போன்ற இடத்தில் ராட்சசன் பேருரு எடுத்திருக்கும் அளவிற்கு 14 அடுக்கடும் இருந்தது ஒவ்வொரு அடுக்களத்திலும் 28 வீடுகள் ஒருமுறை அனாந்து பார்த்தால் கழுத்து வலிப்பது மட்டுமல்லாமல் பயந்து வரும்.
சுத்தி கொஞ்சம் பகுதியில் பெயருக்கு பூங்கா என்று கொஞ்சம் சேர்க்கை பூக்களும் செயற்கை கற்களையும் கொண்டு அமைத்திருக்கிறார்கள் குழந்தைகள் விளையாடுவதற்கு சில பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன.
சிவாவிற்கு எட்டாவது மாடியில் வீடு ஆனால் அவன் அத்தையிடம் பொய் சொல்லி இருந்தான் ஊரில் நம்ம கிராமத்தில் இருப்பது போலவே வீடு என்ன பொய் சொல்லி அத்தியை ஏமாற்றி பணம் வாங்கி இந்த மாயலோகத்தில் ஒரு கூடு வாங்கி இருக்கிறான்.
அந்த மாயலோகத்தில் சுத்தமாக அத்தைக்கு பிடிக்கவில்லை ஆனாலும் எவ்வளவோ காரணங்கள் சொன்ன போதும் அவள் மனது அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
மருமகன் சிவா தனது குழந்தை போல எண்ணினால் அவனுக்காக தன் சொத்தை கொடுப்பது ஒன்றும் அவளுக்கு பெரிய விஷயம் இல்லை. ஆனாலும் நான் வாழ்ந்த அந்த சொர்கலோகத்தை விட்டு விட்டு இந்த மாயலோகத்தில் தன்னால் வசிக்க முடியாது. என்னிடம் பொய் சொல்லி ஏமாற்றி விட்டான் என்று யாரிடமும் பேசாமல் கார் பார்க்கிங் தனியாக அமர்ந்து கொண்டிருந்தாள் எவ்வளவு பேசியும் அவள் கோலம் போடும் அழகை ஒரே மிச்சியது ஆனால் இங்கே ஸ்டிக்கர் ஒட்டி இருப்பதை பார்த்து அவனுக்கு அழுகை பெற்றுக் கொண்டு வந்தது.
பிரம்மாண்டமான பேரூர் கொண்ட அந்த காங்கிரீட் காட்டுக்குள் கௌரியை இருக்க முடியவில்லை. இவர்களுக்கு இது பெரிய விஷயமாக தெரியவில்லை காலம் மாற்றத்தை பொறுத்துக் கொண்டுதானே ஆக வேண்டும் என்று எவ்வளவோ வாதாடி பார்க்கிறார்கள் அவர்களுக்கு அது பெரிய விஷயம் இல்லை. அவள் வந்த வண்டி மீண்டும் அந்த இடத்தை விட்டு புறப்பட்டது.