உக்ரைன் போர் நிறுத்த திட்டம்: போரை ரஷ்யா நீடிக்க முயலுமா?… ஐங்கரன் விக்கினேஸ்வரா
(போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான திட்டம் குறித்து உக்ரைன் பேசியிருந்த நிலையில், அதை ரஷ்யா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வரும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ள ரஷ்யா, தனது சிறப்பு ராணுவ நடவடிக்கை தொடரும் என்று கூறி இருக்கிறது)
ரஷ்யாவுடனான போர் இறுதியில் பேச்சுவார்த்தையிலேயே முடிவடையும், ஆனால் இதன் போது, கீவ் ஒரு வலுவான நிலையில் இருக்க வேண்டும் என்றும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் கூர்ஸ்க் பிராந்தியத்தில் மூன்று வார கால ஊடுருவல் அந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம், தமது போர் நிறுத்த திட்டத்தை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது திட்டத்தை அமெரிக்க அதிபர் முன் எடுத்து வைப்பேன். விரைவில் அதிபர் வேட்பாளர்களிடமும் தனது திட்டத்தை கூறுவுள்ளார்.
ரஷ்யாவின் கூர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியது திட்டத்தின் ஒரு பகுதி.
அமெரிக்கா வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை பயன்படுத்தி ரஷ்யாவின் உள்பகுதிகளை தாக்க அமெரிக்காவிடம் அனுமதி கேட்பேன் எனவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் கூர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் ராணுவம் 3 வாரங்களுக்கு முன் நுழைந்தது. அங்குள்ள ஏராளமான குடியிருப்பு பகுதிகளை தங்கள் வசப்படுத்தியது. மேலும் ரஷ்ய ராணுவ வீரர்களையும் சிறை பிடித்து வைத்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை மேலும் வலு பெற்றுள்ளது.
இதன் மூலம் ரஷ்யாவை போர் முடிவுக்கான பேச்சுவார்த்தைக்கு தள்ள முடியும். இதுதான் என்னுடைய யோசனை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம், போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவை கட்டாயப்படுத்துவதாகும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவர் கமலா ஹாரிஸுடனும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்புடனும் தமது திட்டத்தைப் பற்றி விவாதிக்கவுள்ளதாக உக்ரைனின் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர் நிறுத்த திட்டம்:
இம்மாதம் செப்டம்பரில் நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்ல இருப்பதாகவும், அதன்போது, பைடனைச் சந்திக்கத் தயாராகி வருவதாகவும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையே இரு வருடங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முழுமையாக நடைபெறவில்லை.
ஆயினும் உக்ரைன் அதிபரின் போர் முடிவு திட்டத்தை நிராகரித்து, சண்டை நீடிக்கும் என ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் போர் முடிவு திட்டம் வெறும் சோடனை என ரஷ்யா புறந்தள்ளியுள்ளது. அத்துடன் சண்டை நீடிக்கும் என்ற அறிவிப்பால் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.
ஜெலன்ஸ்கி திட்டம் குறித்த கேள்விக்கு ரஷ்யா அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘எங்களது இலக்கை அடையும் வரை உக்ரைன் மீதான சண்டை தொடர்ந்து நடைபெறும். உக்ரைனின் பிரதிநிதிகளிடமிருந்து இதுபோன்ற அறிக்கைகளை கேட்பது இது முதல் முறை அல்ல.
இந்த கீவ் ஆட்சியின் போலி நாடக தன்மையை நாங்கள் அறிவோம் என்றார். தற்போது உக்ரைன் படைகளை கூர்ஸ்க் பிராந்தியத்தில் வெளியேற்றுவது ரஷ்யாவின் முதன்மையாக நோக்கமாகும். அதேவேளை உக்ரைன் ஊடுருவலை தொடர்ந்து ரஷ்யா தாக்குதலை அதிகரித்துள்ளது.
சிறப்பு ராணுவ நடவடிக்கை தொடரும்:
ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் இப்போது மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து சர்வதேச தலைவர்கள் பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.
இதற்கிடையே போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ள ரஷ்யா, உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கை திட்டமிட்டபடி தொடரும் என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
ரஷ்யாவின் சில பகுதிகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி இருந்த நிலையில், அதற்கு புட்டின் ராணுவம் மிகத் தீவிரமாகப் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் இப்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையேயான இந்த மோதலை போர் என்று ரஷ்யா கூறுவதில்லை. தனது நாட்டை பாதுகாக்க எடுக்கப்படும் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்றே கூறி வருகிறது. இப்போதும் கூட சிறப்பு ராணுவ நடவடிக்கை தொடரும் என்றே ரஷ்யா கூறியுள்ளது.
நீண்ட தூரம் ஊடுருவித் தாக்குதல்:
ரஷ்யாவின் கூர்ஸ்க் பிராந்தியத்தில் இப்போது உக்ரேன் ஊடுருவி இருக்கிறது. இது போர் நிறுத்தத்தின் ஒரு பகுதி திட்டம் தான். இது தவிரப் பொருளாதார மற்றும் தூதரக ஆலோசனை திட்டங்களும் இதில் இருக்கிறது என செய்தியாளர்களிடம் பேசிகையில் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
அத்துடன் ரஷ்யாவுக்குள் நீண்ட தூரம் ஊடுருவித் தாக்குதல் நடத்தும் ஆயுதங்களைப் பயன்படுத்த அமெரிக்கா எங்களை அனுமதிக்கவில்லை. இதற்கான அனுமதியை அமெரிக்கா அளித்தால் போரை முடிவுக்குக் கொண்டுவர எங்களால் ரஷ்யாவைக் கட்டாயப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் தற்போதைய சூழலில் சிறப்பு ராணுவ நடவடிக்கையை நிறுத்த எந்தவொரு திட்டமும் இல்லை. எங்கள் இலக்குகளை அடையும் வரை சிறப்பு ராணுவ நடவடிக்கை தொடரும். அதில் எந்தவொரு சந்தேகமும் வேண்டாம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதாவது ஒரு பக்கம் தாக்குதலை நடத்திவிட்டு, போர் நிறுத்தம் என்பதை ஏற்க முடியாது என்பதே ரஷ்யாவின் கருத்தாக இருக்கிறது.