பலதும் பத்தும்

பெண்ணின் வயிற்றில் குழந்தையின் எலும்புக்கூடு!

மூன்று வருடங்களாக குழந்தையின் எலும்புக் கூட்டினை வயிற்றில் சுமந்த பெண் தொடர்பான சம்பவமொன்று இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பதிவாகியுள்ளது.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், அனக்கா பள்ளியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர்.

இளம்பெண் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பம் தரித்தார். ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளதால் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ள இளம் பெண்ணிற்கு விருப்பம் இல்லை.

இதனால் மருந்து கடைக்கு சென்று கருக்கலைப்பு மாத்திரை வாங்கி அருந்தியுள்ளார். கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதால் இளம்பெண்ணுக்கு பாதி அளவு கரு கலைந்தது.

இதனால் கடந்த 3 வருடங்களாக இளம் பெண் வயிற்று வலியால் அவதி அடைந்து வந்துள்ளார். கடந்த வாரம் விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு வைத்தியசாலையில் இளம் பெண்ணிற்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் குழந்தையின் எலும்புக்கூடு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வைத்தியர்கள் குழுவினர் சத்திர சிகிச்சை செய்து இளம் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையின் எலும்புக்கூடை அகற்றினர்.

தற்போது இளம் பெண் நலமுடன் இருப்பதாகவும் ஒரு வார சிகிச்சைக்கு பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.