இந்தியா
புரூனே- இந்தியா இடையேயான துாதரக உறவுக்க 40 ஆண்டுகள் – பிரதமர் மோடி புரூனேவுக்கு விஜயம்
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடான புரூனேவுடன் இந்தியா தூதரக உறவுகளை பேணி வருகின்ற நிலையில் இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 40-வது ஆண்டு தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி பிரதமர் மோடி அரசு முறை பயணமாக புரூனேவுக்கு விஜயம் செய்துள்ளார். எதிர்வரும் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் புரூனேயில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்திய பிரதமர் ஒருவர் புரூனேவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.புரூனே பயணத்தை முடித்து விட்டு 4ஆம் திகதி பிரதமர் மோடி சிங்கப்பூருக்கும் செல்கிறார்.
5-ஆம் திகதி வரை சிங்கப்பூரில் இருக்கும் பிரதமர் மோடி அந்த நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பல்வேறு துறை சார்ந்த உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.