பசிபிக் தீவுகள் பேரவை மாநாடு; சீனாவை புறந்தள்ளிய அவுஸ்திரேலியா ஒப்பந்தம்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா
(பசிபிக் பிராந்தியத்தில் அவுஸ்திரேலியாவை பிராந்தியத்தின் முதன்மைப் பாதுகாப்புப் பங்காளியாக மாற்றும் முயற்சியை சீனா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஆயினும் தொலைநோக்குப் பார்வையில் பசிபிக் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சீனாவை ஓரங்கட்ட அவுஸ்திரேலியா முனைகிறது)
18 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட “53வது பசிபிக் தீவுகள் பேரவை” (53rd Pacific Islands Forum) தலைவர்கள் கூட்டம் டோங்கா நாட்டில் உள்ள நுகுஅலோவாவில் (Nuku’alofa, Tonga) ஆகஸ்ட் 26இல் தொடங்கியது.
இக் கூட்டத்திற்கு டோங்காவில் உள்ள உயர்மட்ட பிரதிநிதிகளுடன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கலந்து கொண்டார். இக் கூட்ட கலந்துரையாடலுக்கான நிகழ்ச்சி நிரலில் காலநிலை, பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தின் பொருளாதார நிலைமை ஆகியவற்றை உள்ளடக்கியது.
பசிபிக் தீவுத் தலைவர்களுக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸுக்கும் இடையிலான சந்திப்பே மிக முக்கியமான சந்திப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பசிபிக் தீவு நாடுகளின் நிலையான வளர்ச்சிக்கான இந்த மாநாட்டில் அவுஸ்திரேலியாவின்
வளர்ந்து வரும் உறவுகளை அடிப்படையாக வைத்து பல பொருளாதார உதவிகள் நாட்டப்படும் என கருதப்படுகிறது.
இந்த மாநாட்டில் சிறிய தீவுகள், மற்றும் வளரும் மாநிலங்கள் எதிர்கொள்ளும் சுற்றுச் சூழல் சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மீது கவனம் செலுத்தப்படுகிறது.
காலநிலை மாற்றத்தை புரிந்து கொள்ளுதல், ஒத்துளைப்பு மற்றும் கூட்டு நடவடிக்ளக ஆகியவற்றை வளர்க்கும் ஒரு சூழலை ஊக்குவிக்க இந்த மாநாடு வழி வகுக்கும்.
அத்துடன் பூமியின் தட்பவெப்ப நிலை மாற்றத்தை தணிக்கவும், பிராந்திய ஒத்துளைப்பு மற்றும் நிபுணத்துவ பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும், காலநிலை பின்னைடவை கட்டுப்படுத்த
நடவடிக்களை மேம்படுத்தவும் இந்த மாநாடு உதவும் என கருதப்படுகிறது.
பசிபிக்கில் சீன ஆதிக்கம்:
பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் இருப்பை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்ட 400 மில்லியன் டாலர் அளவிலான பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு பசிபிக் தலைவர்களின் ஆதரவைப் பெற்று, அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குறிப்பிடத்தக்க இராஜதந்திர வெற்றியைப் பெற்றுள்ளார்.
ஆயினும் சில பசிபிக் நாட்டு தலைவர்களின் அழுத்தம் இருந்தபோதிலும், அவர்கள் இந்த ஒப்பந்தம் “மறைவானது” என்றும், அமெரிக்கா தலைமையிலான சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான வல்லரசு போட்டியில் பசிபிக் சிக்க வைக்கும் அபாயம் இருப்பதாககவும் கூறினர்.
டோங்கா நாட்டில் பசிபிக் தீவுகள் மாநாட்டில் அல்பானீஸ் மற்றும் மூன்று சக தலைவர்கள் இந்த ஒப்பந்தம் மன்றத் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்டதாக அறிவித்தனர்.
இந்த பாதுகாப்பு முயற்சி “பசிபிக் தலைமையில்” இருக்கும் என்று வலியுறுத்தும் அதே வேளையில், இந்த முயற்சிக்கு அவுஸ்திரேலியா முக்கிய நிதியளிப்பதாக இருக்கும். ஒப்பந்தத்திற்காக ஐந்து ஆண்டுகளில் $400 மில்லியன் செலவழித்து, பிரிஸ்பேனில் உள்ள அவுஸ்திரேலிய மத்திய போலீஸ் வசதிகளில் ஒரு புதிய ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்கும்.
இந்த முயற்சியானது பப்புவா நியூ கினியாவில் தொடங்கி பசிபிக் முழுவதும் நான்கு பிராந்திய பயிற்சி மையங்கள் நிறுவப்படும். மேலும் இயற்கை பேரழிவுகள் அல்லது பிற நெருக்கடிகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு புதிய பன்னாட்டு நிலைப் பொலிஸ் பிரிவு உருவாக்கப்படும் என அறியப்படுகிறது.
பசிபிக் இராஜதந்திரம்:
தொலைநோக்குப் பார்வையில் பசிபிக் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சீனாவை ஓரங்கட்ட அவுஸ்திரேலியா முனைகிறது.
பசிபிக் பகுதியில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த பெய்ஜிங்கின் ஆற்றல் மிக்க முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், கடந்த வாரம் புதன்கிழமையன்று தலைவர்களின் கூட்டம் சீனாவால் நிதியளிக்கப்பட்ட ஒரு உயர்நிலைப் பள்ளி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
அதனை டோங்காவுக்கான சீனத் தூதுவர் மற்றும் டோங்காவின் பட்டத்து இளவரசரால் கடந்த வாரம் திறக்கப்பட்டது. தற்போது புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் முன்னேற்றம் பெய்ஜிங்கைத் புறந்தள்ளி கீழ் வரிசைப்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம் சர்வதேச உறவுகளில் பொதுவான கொள்கைகளை மீறுவது மட்டுமல்லாமல், பசிபிக் நாடுகளின் பங்காளிகளை சுயாதீனமாகத் தேர்ந்தெடுக்கும் இறையாண்மையை மீறுகிறது என சீனா விமர்சித்துள்ளது.
சீனா கடும் விமர்சினம்:
பசிபிக் தலைவர்கள் அவுஸ்திரேலியாவை பிராந்தியத்தின் முதன்மைப் பாதுகாப்புப் பங்காளியாக மாற்றும் முயற்சியை சீனா ஒருபோதுத் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. சீனாவின் காவல்துறை முன்பு பிஜி மற்றும் கிரிபாட்டி போன்ற பசிபிக் நாடுகளுக்குள் நுழைந்து பணியாற்றியது. தற்போதும் பப்புவா நியூ கினியா போன்ற நாடுகளுடன் காவல் ஒப்பந்தங்களை தக்க வைக்க முயல்கிறது.
இந்த பாதுகாப்பு முயற்சியானது பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தவும், தேவைப்படும் நேரங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கவும் இணைந்து செயல்படும் என ஆஸி பிரதமர் அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில், அவுஸ்திரேலியா தங்கள் பாதுகாப்பு பங்காளியாக உள்ளமை, குறிப்பாக புவிசார் மூலோபாய நலன்கள் மற்றும் புவிசார் மூலோபாய பாதுகாப்புக்கு ஏற்றதாக உருவாக்கப்பட்டுள்ளது என்று பசுபிக் தலைவர்கள் கூறினர்.
பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற சிக்கலான மற்றும் உணர்திறன் வாய்ந்த ஒன்றை ஒப்புக்கொள்வதற்கு பல வேறுபட்ட நாடுகள் ஒன்றிணைவது எளிதான விஷயம் அல்ல என்றும் கூறினர்.
புதிய அமெரிக்க தூதரகம் :
அவுஸ்திரேலியா இதை பிராந்தியத்திற்கான வெற்றியாகவும், பசிபிக் தீவு நாடுகளுக்கான முக்கிய பாதுகாப்பு பங்காளியாக அவுஸ்திரேலியாவின் பங்கை அங்கீகரிப்பதாகவும் அமையும்.
இதேவேளை அமெரிக்காவின் மிக முக்கியமான வெளிநாட்டு காவல்துறை அதிகாரிகளில் ஒருவரான, வெளியுறவுத்துறை துணைச் செயலர் கர்ட் கேம்ப்பெல், இந்த மாநாட்டிற்காக டோங்காவில் தங்கி இருக்கிறார். பிராந்தியத்தில் அமெரிக்காவின் புதுப்பிக்கப்பட்ட கவனத்தை இவரின் வருகை பிரதிபலிக்கிறது.
அத்துடன் அவர் தனது பயணத்தின் போது, காம்ப்பெல் வனுவாட்டுவில் ஒரு புதிய அமெரிக்க தூதரகத்தையும் திறப்பார் என கூறப்பட்டுள்ளது.