கதைகள்

முல்லை நகர் அண்ணாச்சி கடை… சிறுகதை…. யாழ்., எஸ்.ராகவன்

முல்லை நகரில் வசித்த அனைவருமே உறவினர்கள். பூர்வீக வீடுகள் எல்லாம் இன்று மாறிவிட்டது .எல்லோரும் வேலை நிமித்தமாக தொழில் நிமித்தமாக என்
பல்வேறு பெரு நகரங்களுக்கு சென்று விட்டார்கள் ஆனாலும் ஆண்டுதோடும் நடைபெறும் திருவிழாவிற்கு தவறாமல் எல்லோரும் வந்து விடுவது வாடிக்கை.

பூங்கா அருகில் உள்ள முருகன் கோயில் ஆண்டு ஒரு முறை நடக்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. வெவ்வேறு ஊர்களில் உள்ள சொந்த பந்தங்கள் எல்லாம் அந்த திருவிழா ஒரு வாரம் அங்கு குடியேறி திருவிழாவை சிறப்பாக கொண்டாடுவார்கள். அங்காளி பங்காளிகள் மாமன் மச்சான் குடும்பத்தோடு அனைவரையும் சந்தித்து பேசி உறவாடி கொண்டாடி மகிழ்ந்து ஒரு வாரத்துக்கு பின்பு ஊருக்கு செல்வது எப்பொழுதும் வாடிக்கை.
மேளதாளம் அன்னதானம் திருவிழா தேர் பவனி என்று ஒவ்வொன்றும் அழகாக நயமாக சிறப்பாக நடைபெறும்.

ரத்தினசாமி பெரியப்பா பரபரப்பாகவே இருந்தார். எப்பொழுதும் எல்லாவிதமான வேலைகளையும் இழுத்து போட்டு செய்து பழகியவர் 30 ஆண்டு காலத்திற்கு மேல் திருவிழாவின் அனைத்து பணிகளிலும் அவருடைய செயல்பாடு இல்லாமல் நடக்காது. ஆனால் எல்லோரும் சேர்ந்து இந்த முறை சிறியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் எல்லா பொறுப்புகளையும் அவர்களிடத்தில் ஒப்படைத்து விடுங்கள் என்று குமாரசாமி சித்தப்பாவையும் ரத்தினசாமி பெரியப்பா வையும் எந்த வேலையும் செய்யக்கூடாது என்று எல்லோரும் கட்டளையிட்டார்கள்.

முக்கியமான செயல்களை எல்லாம் சரியாக இவர்கள் செய்து விடுவார்களா? ஏதேனும் தெய்வ குத்தம் நேர்ந்துவிடுமா எது தேவையான செலவு எது தேவையற்ற செலவு என்று இளசுகளுக்கு தெரியுமா இவர்களை கலந்து ஆலோசிக்காமல் சிறுசுகள் செய்யும் விஷயங்கள் எல்லாம் சரியாக இருக்குமா என்ற ஒரு பரபரப்பு திருவிழா தொடங்கிய நாளிலிருந்து அவருக்கு இருந்தது.
ரத்தினசாமி பெரியப்பாவின் மகன்கள் குமாரசாமி சித்தப்பாவின் மகன்கள் மற்றும் அகிலா அக்காவின் உடைய பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து தான் இதனை ஒருங்கிணைத்தார்கள் இவர்கள் பெரியவர்கள் யாரிடமும் கலக்கவில்லை எல்லாவற்றிலும் புதுமை செய்கிறோம் என்ற பெயரில் நிறைய விஷயங்களை மாற்றினார்கள் அது பெருசுகளுக்கு பிடிக்கவில்லை இருந்தபொழுதும் வீட்டில் பெரியம்மா அத்தை சித்தி அவர்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருந்து விட்டார்கள் இருந்தாலும் ரத்தினசாமி பெரியப்பா ஆசுவாசமாகவே இல்லை .

ஏ குமாரசாமி இவங்க செய்றது ஒண்ணுமே சரியில்லப்பா பத்திரிக்கை ஒழுங்கா அடிக்கல எல்லாரையும் முறையா கூப்பிடல கொட்டுகாரங்கள வந்து சரியா ஏற்பாடு பண்ணல பூசாரி ஐயா கிட்ட என்னவேணும் என்று தெளிவாக கேட்டு ஒரு வாரத்துக்கு முன்னாடியே எல்லாத்தையும் வாங்கி சரியான் பார்த்து ஏற்பாடு பண்ணலையா

அண்ணே விடுங்க அண்ணே எத்தனை நாளைக்கு நம்மளே செய்றது இந்த வட்டம் என்னதான் செய்கிறார்கள் என்று பார்ப்போம். அதுல்ல குமாரசாமி எதுக்கு செலவு செய்யணும் கணக்கு இருக்கு இல்லையா தேவை இல்லாம பிளக்ஸ் வைக்கிறது ஊர் பூரா 1000 2000வேட்டு போடுறதுஅது இதுன்னு உருப்படியா இல்லாத விஷயங்களுக்கு அதிகமா செலவு செய்றாங்க ஆனா நம்ம பாரம்பரியம் செய்ற சடங்கு சம்பிரதாயம் அதெல்லாம் ஒழுங்கா செய்யணும்யா.
ஒரே மாதிரி துணி எடுத்து போடுறது மைக் செட் பா சினிமா பாட்டு அதிகமா போடுறது இதுபக்தி திருவிழா மாதிரி இல்லையா செய்முறை விஷேசம் போலஆக்கிவிட்டார்கள்.

நம்ம காலத்துல எல்லாம் கரம்எடுக்கிறது முளைப்பாரி போடுவது பெரியவங்கள கூட்டிட்டு வந்து ஆன்மீக சொற்பொழிவு நடத்துவது ஒரு நாலு நல்ல வார்த்தை ராமாயணம் மகாபாரதம் பட்டிமன்றம் போடுவது அப்படியெல்லாம் செஞ்சிட்டு இருந்தோம் இவங்க ஆடலும் பாடலும் போடுறது மைக் செட் பாட்டு கச்சேரி போடுவது என்று பத்தி யஆடம்பரமா மாத்தி விட்டாங்க பேசிக் கொண்டிருக்கும் போது சின்னவன் ராமு வந்தான். என்னப்பா ராமு ஏற்பாடு எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு எதாவது கேட்க மாட்டீங்க கேட்டாலும் சொல்ல மாட்டீங்க கேட்கக்கூடாது என்று பார்க்கிறேன் இருந்தாலும் மனசு அலபாயுதே சொந்தக்காரங்க வரும்போது எந்த விதமான குற்றம் ஏற்பட்டு விடக்கூடாது நம்ம ரெண்டு பங்காளிங்க எடுத்து செய்றோம் இதுவரைக்கும் எந்த குறையை ஏற்பட்டதில்ல சொல்லுப்பா என்னென்ன செஞ்சு இருக்கீங்க என்ன என்ன செய்யணும். பெரியப்பா வணிக மேலாண்மை படிச்சிருக்கேன் எனக்கு தெரியாதா எப்படி பண்ணனும்.

அவர் மகன் கணேசன் வந்தான் அப்பா அமைதியா இருங்கப்பா எங்களுக்கு தெரியும்பா நாங்க பார்த்துக்கிறோம். இல்லடா மொத்தம் பதினெட்டு மாலை வாங்கணும் ஆனா பூசாரி ஐயா நிறைய பொருள் சரியா வந்து சேரல என்கிட்ட வந்து சொன்னாரு தேங்காய் 115 தேங்கா போடணும் மற்ற பூஜை சாமான்கள் எல்லாம் சரியா வந்து இறங்கியதா இதெல்லாம்விட முக்கியமா அன்னதானம் நடக்குது நிறையா மக்கள் வருவாங்க அதுக்கு ஏத்தாப்புல பொருள் மொத்தம்மா வாங்கி இறக்கணும் யார யாரு சமையலுக்கு சொல்லி இருக்கீங்க எங்க மளிகை வாங்க போறீங்க இதை மட்டும் எனக்கு சொல்லி ஆகணும் டா நீங்க
அது மாதிரி தேவையில்லாத இந்த பக்கட்டு செலவு முதல்ல குறைங்கடா கடைசில பணம் பத்தாம போயிரும் நம்ம கை நட்டமாயிரும் ஊர் பொது காசு வரி வாங்கி இருக்கோம்

வரியை கரெக்டா கணக்கு கொடுக்கணும் எல்லாருக்கும் தாம்பூல பை சரியா போய் சேரனும் இவ்வளவு விஷயம் இருக்கு ஆனா அதிக நேரத்தை தேவையில்லாமசெலவழிக்கிறீங்க இந்த
என்ன பெரியப்பா இன்னும் அந்த காலத்துல இருக்கீங்க இது கம்ப்யூட்டர் யுகம் எல்லாத்துக்குமே ஆப் இருக்கு போன்ல தட்டுனா ஒவ்வொரு சாமானும் வந்து இறங்கிட்டு போகுது. பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் பல்பொருள் அங்காடி இருக்கு அங்க நம்ம போன் பண்ணிட்டோம்னா எல்லாம் சாமான்களும் கரெக்டா வந்து கொண்டு வந்துடுவாங்க ஒவ்வொன்னுக்கு போன் நம்பர் இருக்கு போன் அடிச்சா கரெக்டா வந்து சேருது இதுல என்ன பெரியப்பா பிரச்சனை.

டேய் அந்த ஆப்பு கதையெல்லாம் என்கிட்ட சொல்லாத காலம் காலமா நம்ம முல்லை நகர் விசேஷத்திற்கு அண்ணாச்சி கடையில தான் மளிகை வாங்குவோம் மனுஷன் தகுதியானவரு தராதரம் தெரிஞ்சவரு என்ன சிட்டை கொடுத்தாலும் அதை சரியா பார்த்து தேவையான பொருள்ல கரெக்டா எடுத்து கொடுப்பாரு கொடுக்கிற காச விட பொருள் நிறைய இருக்கும் கொஞ்சம் அதிகமா பொருள் செலவழித்தாலும் உடனே கொடுக்கணும்னு அவசியம் இல்ல கொஞ்சம் நாள் கழிச்சு கடனா கூட கொடுப்பாரு தரமான பொருள் கொடுப்பாரு
நீ சொல்ற கடையில விலை அதிகமா இருக்கும் தரம் குறைவா இருக்கும் இரண்டாவது காசு கொடுக்கவில்லை என்றால் உடனே சிட்டையைக்கொடுத்து திருப்பி கொடுத்துவிடுவார்கள். அதே மாதிரி வார சநதையில போய் தான் காய்கறி எடுக்கறது வழக்கம். அங்க பல காலமா வாங்குற கடையில அதிகமா காய் தருவாங்க விலை கம்மியா இருக்கும் இத விட்டுட்டு நீ ஆர்டர் பண்ற ஆப் நல்லா இருக்குமா.

பூசாரி ஐயாவ கூட்டிட்டு போய் தான் பூஜை சாமான் வாங்குவது வழக்கம். அவரு ஆசைப்பட்டபடி சொல்றது மாதிரி பொருளை வாங்கி கொடுத்தா தான் திருவிழாவுல எல்லாம் ஏற்பாடும் நல்லபடியா நடக்கும் சில விஷயங்களை மாற்ற முடியாது.
ரத்தினசாமி பெரியப்பா சொல்லி முடித்ததும் மூச்சு வாங்கியது அவர் பழைய நோட்டுகளை எடுத்து காண்பித்தார்.

கணேசன் என்னப்பா பெரிய அண்ணாச்சி கடை எல்லா கடையிலும் ஒரே பொருள் தான் பா காசு கொடுத்தா பொருள் கொடுக்கிறேன் இதுல என்ன பெரிய விஷயம்.

டேய் இந்த முல்லைநகர்ல அத்தனை மனிதர்களையும் தெரிந்தவர் தான் நம்ம அண்ணாச்சி என்னமோ பெருசா பேச வந்துட்டேன் அக்கா கல்யாணத்துல பொருள் பூரா அவர்களிடம் வாங்குனதுடா கடைசில ஐயாயிரம் ரூபாய் பத்தல மனுஷன் கொஞ்சம் கூட யோசிக்காமல் கொடுத்துவிட்டார் ஒரு மாசம் கழிச்சு தான் நான் திருப்பி கொடுத்தேன்.

நீ சொல்ற பெரிய மால் இருக்குல அங்க பொருள் மிஞ்சினால் திருப்பி வாங்குவாங்களா போன திருவிழாவுல 3000 ரூபாய்க்கு பொருள் மிஞ்சிருச்சு அந்த பொருளை ரிட்டன் எடுத்துக்கிட்டு காசு திருப்பி கொடுத்தவரா அண்ணாச்சி என்னமோ வணிகம் மேலாண்மை படிச்சிருக்கியா காய்கறி கடையில் சரி மளிகை கடைகளில் சரி அந்த காலத்து மனுஷங்க மனுசன பார்த்து மனுஷனை தராதரம் தெரிஞ்சு வியாபாரம் பண்ணாங்க ஆனா இன்னைக்கு பணத்தை பார்த்து வியாபாரம் பண்ற காலம் ஆயிடுச்சு. புதுசா பண்ணுங்க வேணா சொல்லல புதுமை புகுத்துங்க வேணாம்னு சொல்லல ஆனா மனுசன மதிங்கடா இன்னொன்னு ஒவ்வொரு வேலையும் நம்மதான் பார்த்து பார்த்து செய்யணும் அதுக்கு ஆள் இருக்காங்க இதுக்கு ஆள் இருக்காங்க அது அவங்க பாத்துக்குவாங்க இதை இவங்க பாத்துக்குவாங்க அப்படின்னு விட்டுட்டா கடைசியில் ஏதாவது தப்பாயிரும்.

அதனால நீ அண்ணாச்சி கடையில போயி சிட்டையை கொடுத்து நான் சொன்னேன்னு இதெல்லாம் வாங்கிட்டு வா கூட குறயஇருந்தாலும் அவர் சரி பண்ணிடுவாரு நீ சொன்ன ஆப் எல்லாம் இந்த கோயிலுக்கு ஒத்து வராது.

சற்று கோபமாக தான் பேசினார் பெரியப்பா. இங்கே இந்த பேச்சு நடந்து கொண்டிருக்கும்போது கணேசா நம்ம புக் பண்ண பொருள் சரியா வந்து சேரல காசு மட்டும் வாங்கிட்டாங்க நிறைய பொருள் மிஸ்டேக் ஆயிருக்கு என்று ராமு சொல்லிக் கொண்டே வந்தான்.
நல்ல வேளை நாளைக்கு காலைல தான் திருவிழா இப்பவே எல்லாத்தையும் பாத்துட்டோம் பாத்தியா உங்க நாகரீக காலத்தில் உள்ள விஷயங்களை களத்துல நாம தான்டா இறங்கணும் என்று ரத்தினசாமி பெரியப்பா வேட்டியை மடித்து கட்டி மீண்டும் மஞ்சப்பை நோட்டையும் எடுத்தார்.

முல்லை நகர் அண்ணாச்சி கடை மனிதர்களுக்காக வாணிபம் செய்யக்கூடியது என்பதை திருவிழாவிற்கு வந்த அனைவரும் உண்டு மகிழ்ந்த போது நினைத்து பார்த்தார்ரத்னசாமி பெரியப்பா.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.