இந்தியா
ஒடிசாவில் கண்டறியப்பட்ட பறவைக் காய்ச்சல்: 11,700 கோழிகள் அழிப்பு
இந்தியா, ஒடிசாவின் புரி மாவட்டம் பிபிலி பகுதியில் பறவைக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுகாதாரத்துறை சார்பாக எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக பிபிலி பகுதியிலுள்ள கோழிப்பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளை கொன்று அழிக்கும் பணிகள் நடநதுள்ளன.
இப் பணிகளில் 13 குழுக்கள் ஈடுபட்டு வருவதோடு, சில பண்ணைகளில் அதன் உரிமையாளர்களே இப் பணிகளை மேற்கொண்டனர்.
கடந்த 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப் பணிகள் நேற்று திங்கட்கிழமை மாலை நிறைவுற்றது.
இதில் மொத்தம் 11,700 கோழிகள் கொன்று அழிக்கப்பட்டுள்ளன என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதன் அடுத்தகட்டமாக அருகிலுள்ள வீடுகள், கிராமங்களில் கோழிகளை அழிக்கும் பணிகள் இன்று நடைபெறும் என கூறப்படுகிறது.