ஐசிசி தலைவராகும் ஜெய்ஷா; பிசிசிஐயின் புதிய செயலாளராக ரோகன் ஜெட்லி
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அடுத்த செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லி நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் தற்போதைய செயலாளர் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) புதிய தலைவராக நியமிக்கப்பட்டால் ரோகன் ஜெட்லிக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், ஐசிசி தலைவர் பதவிக்கு ஜெய் ஷா இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் பேரவையின் தற்போதைய செயலாளராக இருக்கும் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் பதவிக்கு போட்டியிடத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து இந்திய ஊடகங்கள் உட்பட பல வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இயக்குநர் குழுவில் பெரும்பான்மையானோர் அவருக்கு ஆதரவாக இருப்பதால் அவர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டால் அவருக்கு அந்த பதவி நிச்சயம் கிடைக்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் ஐசிசியின் புதிய தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்பட்டால், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அடுத்த செயலாளராக மறைந்த அரசியல்வாதி அருண் ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லியை நியமிக்க ஆயத்தம் நடந்து வருகிறது.
இதன்படி இரண்டு வருட காலத்திற்கு செயலாளர் பதவிக்கு ரோகன் ஜெட்லி நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.