கதைகள்

மிதவை பேருந்து…. யாழ்.,எஸ்.ராகவன்

கனமழை பொழிந்து கொண்டிருந்தது. கைகுழந்தையோடு, சாந்தியும் அவள் அம்மா பொன்னுத்தாயும் சாக்கடையாக மாறிவிட்டிருந்த பேருந்து நிலையத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பேருந்தாக பார்த்து விட்டு நாகப்பட்டினத்தில் இருந்து திருச்சி வருகின்ற பேருந்து இருக்கும் இடத்தை, பிளாட்பாரத்தை வெறித்து பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருந்தார்கள். நடத்துனர் ஓட்டுனர் ஆகியவருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். கை குழந்தையோடு சாந்தியும் அம்மா பொன்னுத்தாயும் அப்பா மாரப்பன் பேருந்தில் இருக்கிறாரா என்று பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

பொன்னுத்தாயி சாந்தியிடம் நான் பார்த்துட்டு வந்துடறேன் சொன்னா கேட்க மாட்டியா நீ எதுக்கு கைப்புள்ளைய தூக்கிக்கிட்டு இந்த மழையில

உங்கப்பன் இந்த வயசில் தண்ணிய போட்டுக்கிட்டு கொடுத்த காசை கரெக்டா கொண்டு வந்து சேர்க்காமல் நம்மள பாடா படுத்துகிறான் கைப்புள்ளைய வச்சிக்கிட்டு உன்னையும் கூட்டிக்கொண்டு அல்லாடுறேன்.

மெதுவாக பேசிக்கொண்டே திருச்சியில் இருந்து கோயமுத்தூர் செல்லும் பேருந்து நிற்கும் இடம் நோக்கி அவர்கள் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். மக்கள் அங்கு மழையை வசை பாடிக் கொண்டு சரியான வசதி செய்யப்படாத பல்வேறு இடங்களில் பற்றி குறைபட்டு கொண்டு தத்தளித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மெல்ல ஸ்டிபனும் வேலுவும் பேசிக் கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் வந்து நின்றார்கள்.

என்ன ஸ்டீபன் நேத்து கோயம்புத்தூர் நல்ல கலெக்க்ஷனா ரொம்ப டயர்டா இருக்க மாதிரி இருக்கு போங்க மாமு நாள்தோறும் இவங்களோட ஒரே அக்கப்போரா இருக்கு .. இவங்கள ஏத்தி இறக்கி அனுப்புறதுக்குள்ள உயிரே போய் வருது.

அப்பா போதும்டா சாமி. அதுலயும் நாளைக்கு ஒருத்தன் தண்ணிய போட்டு வண்டியில ஏறிட்டு இவங்க பண்ற சேட்டை தாங்க முடியல மாமா. டிக்கெட் எடுக்க மாட்டேங்கறாங்க எங்க ஏறனும் எங்கு இறங்கணும் எதுவுமே புரியல நிதானமே இல்லை. ஏதாவது பேசினா நம்ம கூட சண்டைக்கு வராங்க.

சரி வாயா டீ சாப்பிட்டு போலாம் உன் கூட டீ குடிச்சு எத்தனை நாள் ஆச்சு.

இப்ப கூட பாருங்க ஒருத்தன் ஃபுல்லா தண்ணிய போட்டு ஒரு கும்பலா நாலஞ்சு பேரு ஏறி பயங்கரமா லந்து குடுத்தாங்க
படியில நின்னுகிட்டு மேலே ஏறாம வம்பு இழுத்துகிட்டு இருந்தாங்க
அதுல ஒரு பெரிய மனுஷன் 60 வயசு இருக்கும் கைல ஒரு மஞ்சப்பை வச்சிருந்தாரு நிதானமே இல்லை.

மத்தவங்க எல்லாம் அவரையே பாத்துட்டு இருந்தாங்க ஒரு வழியா மத்தவங்கள இறக்கி விட்டேன்.

அந்த சேட்டை தாங்க முடியல. இப்படி அவன் வேதனையை சொல்லும்பொழுது பஸ்ல ஏறுறவங்க இப்படித்தான் இருக்கணும்னு ஒரு ரூல்ஸ் போடலாமா கண்டவனும் ஏறி கண்டத பேசி நமக்கு ரோதனை கொடுக்கிறார்கள். அந்தாள நம்ம வெயிட்டிங் ரூம்ல படுக்கவச்சிட்டு வந்தேன் புல் போதை நிறைய பணம் வச்சிருப்பான் போல போத தெளிஞ்ச பிறகு எந்திரிச்சு போகட்டும்.

மத்தவங்கள பூராவும் விரட்டி விட்டுட்டேன் மாமா. அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பொன்னுத்தாயி சாந்தி கை குழந்தையோடு அங்கே வந்து கணவனைப் பற்றி விசாரித்தார்கள். எங்க வீட்டுக்காரர் உங்க பஸ்ல தான் வந்ததா சொல்றாங்க நல்லா குடிப்பாரு எங்கேயாவது விழுந்துட்டாரா என்று அழுது கொண்டே கேட்ட அவர்கள் இருவரையும் பார்த்து மனம் புழுகினான்.

பொன்னுத்தாய் ஓவென்று கதறி எங்க ஊர்ல நிலத்தை வித்து பணம் வாங்கி வந்து மகளிடம் கொடுக்கணும் மனுஷன் கிட்ட நானும் வரேன்னு சொன்னேன் கேட்கவே இல்லை. அவரை எங்கேயாச்சும் பாத்தீங்களா பஸ்ல வந்தாரா என்று பொங்கிய அழுகையோடு பொன்னுத்தாயி சொன்னாள்.

அவன் பயணிகள் தங்கும் அறைக்கு சென்று குடிபோதையில் தடுமாறி கடந்த அந்த பெரியவரா என்று பொன்னுத்தாயே அழைத்துச் சென்று காட்டினான் ஐயோ என் வீட்டுக்காரர் தங்க நிலைகுலைந்து கிடந்த அந்த பெரியவரை த்தூக்கி நிறுத்தி அவன் கையில் வைத்திருந்த மஞ்சள் பையில் கவனமாக வாங்கினார்கள்.

ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கி அவன் முகத்தில் அடித்து ஒட்டி வாங்கி கொடுத்து அவனை ப்பேச வைத்தார்கள். பொன்னுத்தாயே என்னை மன்னிச்சிருமா பத்திரம் முடித்து கையில தொட்ட கொடுத்துட்டா இங்க வம்படியா என்னை கூட்டிட்டுப் போய் ஊத்தி விட்டாய்ங்க நான் வேண்டாம் என்று தான் சொன்னேன் எப்படியோ கெட்டியா பணத்தைக் கொண்டு வந்து சேர்த்துட்டேன்.

என்னையா மனுஷன் நீ இவ்வளவு முக்கியமான விஷயத்தை செய்யும்போது இப்படி குடிப்பாங்களா என்று ஸ்டீபன் அவனை பரிதாபத்தோடு பார்த்தான் ஏதோ உன்ன கட்னவ செஞ்ச புண்ணியத்தினால இந்தப் பணம் தொலையாம இருக்கு பத்திரமாக கொண்டு போய் வீடு சேருங்க. ஏமா கைக்குழந்தை எல்லாம் தூக்கிட்டு என்று சாந்தியைப் பார்த்து கரிசனத்தோடு அனுப்பி வைத்தார் ஸடிபன்..

பொன்னுத்தாயின் புருஷன் மாரப்பன் கையெடுத்து கொண்டு மூவரும் குழந்தையோடு அந்த இடத்தை விட்டு பத்திரமாக சென்றார்கள். வேலூர் இந்த க்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார் பரவாயில்லை. ஸ்டிபா வேற ஆளு கையில் நேரம் என்ன ஆயிருக்கும். நாள்தோறும் இந்த குடிகாரர்களை ச்சமாளிப்பது பெரிய வேலையா இருக்கு

ஆளு இல்ல மாமா அடுத்தடுத்து ரெஸ்ட் எல்லாம் ஓடிக்கிட்டு இருக்கோம்சரி சரி பாசமா கூப்பிடுறீங்க வாங்க டீ போட்டிட்டு போவோம்.

வேலை சேர்ந்து 28 வருஷம் முடிஞ்சு போச்சு மாமா இன்னும் ரெண்டு வருஷம் தான் நல்லபடியா முடிச்சுட்டு ஓய்வெடுக்கணும்

ஆமாம் மாப்பிள்ளை எனக்கு ஒரு வருஷம் தான் இருக்கு நேத்து தான் வேலைக்கு சேர்ந்த மாதிரி இருக்கு ஓடிக்கிட்டு இருக்கு என்ன ஒன்னு உன்னை மாதிரி நல்ல மாப்பிள்ளை கிடைச்சது. எனக்கு சந்தோசம்
வேலு மாமா எவ்வளவு உதவி செஞ்சிருக்கீங்க எத்தனை பேர் வாழ வச்சிருக்கீங்க .

ஆரம்பத்துல எங்களுக்கு தொழில் எல்லாம் கத்து கொடுத்து இருக்கீங்க எப்ப சோர்ந்து போய் இருந்தாலும் தட்டி நிமிர்த்தி தொழிலை தெளிவா சொல்லி கொடுத்து வாழ்க்கை மேல பிடிப்பு வர வைத்து நான் இந்த அளவுக்கு வேலை பார்த்தேன் என்றால் அதுக்கு நீங்க ஒரு முக்கிய காரணம் விடு யா மாப்பிள்ளை எங்கேயோ பிறக்கிறோம் எங்கேயோ வளருகிறோம்.ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செஞ்சா தான்யா வாழ்றதுல ஒரு அர்த்தம் இருக்கும்.

அப்புறம் பிள்ளைகள் எல்லாம் படிச்சு முடிச்சிடுச்சா கடன் எல்லாம் தீர்ந்துவிட்டதா.நம்ம சந்தித்து ரொம்ப நாள் இருக்கும் இல்ல என்றால் அக்கறையோடு வேலுமாமா

எங்க மாமா பெரியவன் இப்பதான் இன்ஜினியரிங் காலேஜ் சேர்ந்து இருக்கான் உங்க தங்கச்சி ஸ்டெல்லாவிற்கு இன்னும் உடம்பு சரியாகல வைத்தியத்திலயே பாதி காசு போகுது.

சின்னவன் டேவிட் 12 படிக்கிறேன் இதெல்லாம் ஒரு வழி பண்ணி ரிட்டயர் ஆகும்போது கடன் எல்லாம் முடிச்சிட்டு ஆசுவாசமா உக்காரனும் மாமா

எல்லாம் சமாளித்துவிடலாம் ஒரு மூணு லட்சம் மட்டும் இடிக்குது என்ன செய்றது ஆண்டவர் விட்ட வழி இயேசப்பா.

கவலைப்படாத மாப்பிள நான் கும்பிடும் போது உனக்காகவும் வேண்டுகிறேன் நான் கும்பிடுகிற எங்க குலசாமி உன்னையும் காப்பாத்துவான் நீ நல்லவன் உழைப்பாளி நேர்மையானவன்.

பீடி சிகரெட் குடி என்று எந்த விதமாமான பழக்கமும் உனக்கு இல்லை. நடத்துனர் பணியை எப்படி சிறப்பாக செய்ய வேண்டும் என்பதை வேலூர் மாமாவுடன் தான் பார்க்க வேண்டும் சில்லறை பஞ்சாயத்து எப்பொழுதும் அவரிடம் வந்தது இல்லை ஒரு பட்டப்பாவில் பஞ்சு நனைத்து டிக்கெட் களைப்பதற்கு ஆதாரமாக வைத்துக் கொள்வார் நகத்தை வளர்ப்பது எவ்வளவு முக்கியம் என்பது அவருக்கு தெரியும்

எவ்வளவு பிரச்சனை வந்தாலும் எப்பேர்ப்பட்ட சிக்கல் வந்தாலும் நிதானம் தவறாமல் வார்த்தையில் தடுமாற்றம் இல்லாமல் அந்த சிக்கலை அவர் சரி செய்யும் அழகே தனி நிறைய பாடம் நான் அவரிடம் கற்று இருக்கிறேன். எந்த சூழலிலும் நேர்மையில் உண்மையும் தவறவிகூடாது கடவுள் மேல பாத்துக்கிட்டே இருக்கான் மாப்பிள்ளை அவனுக்கு பயப்படனுமா போல என்ற ஒரு சொன்னதுதான் இன்னும் அல்லது ஓடிக்கொண்டே இருக்கிறது.

அன்பான கைகுலுக்கலில் அந்த தேனீ கடையில் நம்பிக்கையை பெற்று விட்டு எழுந்து சென்றான் ஸ்டிபன். மழை ஆரம்பித்தது. சற்று நேரத்தில் ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கியது.
மழை நேரத்தில் பேருந்து ஒரு ஏழையின் குடிசை வீடு போல ஆகிவிடும் நடந்தும்.

ஒவ்வொரு நிறுத்தத்திலும் பயணிகளை ஏற்றி இறக்கி சரியான சில்லறை கொடுத்து வாங்கி அனுப்புவது என்பது பெரிய அனுப்பட்டும் செயலாக இப்பொழுதெல்லாம் மாறிவிட்டது.

ஒரு நாளில் 54 கிலோ மீட்டர் ஒரு நடத்துனர் பேருந்துகள் பயணம் செய்கிறார் என்று யாரோ ஒருவர் செய்தித்தாளில் இருந்தது ஸ்டிபனுக்கு சிரிப்பை வரவழைத்தது.

 

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.