வங்குரோத்தில் வங்கதேசம்; பொருளாதார நெருக்கடியால்… கரையும் அந்நிய செலாவணி… ஐங்கரன் விக்கினேஸ்வரா
தென்னாசிய பொருளாதர வளர்ச்சியில் இந்தியாவுக்கு மேலாக உயர்ந்து வரும் நிலையில் இருந்த பங்களாதேஷ் மீண்டும் பாரிய பொருளாதர வீழ்ச்சியை அடைந்துள்ளது. ஆசியாவில் எழுச்சி பெறும் புலிப் பொருளாதாரமாக (Growing Tiger Economy) முன்பு கருதப்பட்டது.
இன்னமும் பங்களாதேஷில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் வங்கதேசம் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக பங்களாதேஷ் புள்ளியியல் திணைக்களம் (Department of Statistics) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
தென்னாசிய பொருளாதர வளர்ச்சியில் இந்தியாவுக்கு மேலாக உயர்ந்து வரும் நிலையில் இருந்த பங்களாதேஷ் மீண்டும் பாரிய பொருளாதர வீழ்ச்சியை அடைந்துள்ளது. வளர்ந்து வரும் அபிவிருத்தியில் 455 பில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட பங்களாதேஷ், தற்போதய மாபெரும் பிரச்சனையில் இருந்து வெளியேறுவது பெரும் சிக்கலாக இருக்கும் எனத் தோன்றுகிறது.
அதன்படி நுகர்வோர் விலை குறியீடு (Consumer Price Index) என்பது ஜூலை மாதம் 11.66 சதவீத பணவீக்கத்தை தொட்டுள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல் முறையாக அதிகமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக உணவு பணவீக்கம் என்பது 13 ஆண்டு இல்லாத அளவுக்கு 14 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது.
பாரிய பணவீக்கம்:
வளர்ந்து வரும் அபிவிருத்தியில் 455 பில்லியன் டொலர் பொருளாதாரம் கொண்ட பங்களாதேஷ், தற்போதய மாபெரும் பிரச்சனையில் இருந்து வெளியேறுவது பெரும் சிக்கலாக இருக்கும்.
மாணவர் போராட்டங்களால் தற்போது 40 பில்லியன் டொலர் வரையில் அந்நாட்டின் உற்பத்தித் திறன் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் பங்களாதேஷ் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து ஒரு ஆபத்தான நிலையில் உள்ள வேளையில் அந்நாட்டின் அரசியலில் ஏற்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அந்நாட்டு தொழிலதிபர்களுக்குக் கொடுத்துள்ளது.
இந்த பணவீக்கத்துக்கு பங்களாதேஷில் நிலவும் நிச்சயமற்ற தன்மை தான் காரணம். மாணவர்களின் தொடர் போராட்டம் என்பது வங்கதேசத்தை முழுமையாக பாதித்தது. மேலும் பங்களாதேஷ் மத்திய வங்கியின் தரவுப்படி ஜூலை 31ம் தேதி அந்நிய செலாவணி கையிருப்பு என்பது 20.48 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது.
இது முந்தைய மாதமாக ஜூன் மாதத்தில் 21.78 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. ஒரு மாதத்தில் சுமார் 1.3 பில்லியனுக்கும் அதிக அமெரிக்க டாலர் குறைந்து உள்ளது.
பங்களாதேஷில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதன்பிறகு இடைக்கால அரசு அமைக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் கூட பல இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் பங்களாதேஷ் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க தொடங்கி உள்ளது. பணவீக்கம் அதிகரிப்பதோடு, அந்நிய செலாவணி கையிருப்பு சரிய தொடங்கி உள்ளது. இந்த நிலை தொடரும் பட்சத்தில் விரைவில் அந்த நாடு வங்குரோத்து நிலைக்கு செல்லவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் என்பது கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. ஒரு மாதத்தை கடந்தும் போராட்டம் தொடர்ந்தது. இதையடுத்து ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து இந்திய நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இதையடுத்து இடைக்கால அரசு அமைந்துள்ளது.
இந்த அரசுக்கு தலைவராக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.
இந்துக்களின் அவலம் :
ஆனாலும் தொடர்ந்து ஆங்காங்கே போராட்டம் நடந்து வருகிறது. மாணவர்கள் போராட்டத்தை கைவிட்ட நிலையில் ஆங்காங்கே சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடங்கி உள்ளன.
இதனால் ஏழு லட்சம் இந்துக்கள் டாக்கா உள்பட இரு இடங்களில் கூடி பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். அதேபோல் இந்து கிறிஸ்தவர்கள், புத்த மதத்தை சேர்ந்தவர்கள் இடைக்கால தலைவர் முகமது யூனுஸை சந்தித்து பாதுகாப்பு கோரியுள்ளனர்.
ஏழு லட்சம் இந்துக்கள் குவிந்து போராட்டம் நடாத்தி உள்ளனர். இது இந்தியாவை மட்டுமின்றி உலகையே திரும்பி பார்க்க வைத்த சம்பவம் ஆகும். இந்துக்களால் அதிரும் வங்கதேசம் எனவும் சில இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.
ஆயினும் உண்மையில் இன்னமும் வங்கதேசத்தின் நிலைமை என்பது முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.
அந்நிய செலாவணி வீக்கம்:
நீண்ட காலமாக பங்காளதேஷ் ஒரு வீழ்ச்சியடைந்த நாடாக அனைவராலும் பார்க்கப்பட்டது. ஒரு ஏழை நாடாக இருந்தது. ஆனால் ஆசியாவில் எழுச்சி பெறும் புலிகளில் ஒன்றாக கருதப்பட்டது.
தென்னாசிய பொருளாதர வளர்ச்சியில் இந்தியாவுக்கு மேலாக உயர்ந்து வரும் நிலையில் இருந்த வங்க தேசம் மீண்டும் பாரிய பொருளாதர வீழ்ச்சியை அடைந்துள்ளது.
இது பங்களாதேஷுக்கு கூடுதல் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் அந்நிய செலாவணி போதிய அளவில் கையில் இருந்தால் தான் பிற நாடுகளில் இருந்து வர்த்தகத்துக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வது, பெட்ரோல், டீசலை பெற முடியும். இதனால் வங்கதேசத்தில் அந்திய செலாவணி கையிருப்பை மேற்கொண்டு சரிய விடாமல் தடுக்க வேண்டும்.
மேலும் பங்களாதேஷ் மத்திய வங்கியும் பணக்கட்டுப்பாட்டை விடுத்துள்ளது. மக்கள் தங்களின் வங்கி கணக்கில் இருந்து அதிகபட்ச பணத்தை எடுக்க முடியது. ஒரு நேரத்தில் பொதுமக்கள் 2 லட்சம் டாக்கா வரை மட்டுமே வங்கிகளில் இருந்து எடுக்க முடியும். இதனால் நாட்டின் வணிக துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பணப்புழக்கமின்றி வணிக துறை செயல்பட்டு வருகிறது. இதனால் இடைக்கால அரசுக்கு கடும் நெருக்கடி என்பது ஏற்பட்டுள்ளது. இடைக்கால அரசின் தலைவராக உள்ள முகம்மது யூனுஸ் நாட்டில் நிலவும் பொருளாதார சிக்கலை சரி செய்ய கவனம் செலுத்துவது முக்கியமாகும்.
ஏனென்றால் பங்களாதேஷ் நாட்டில் தற்போதைய நிலை நீண்டகாலம் தொடரும் பட்சத்தில் அந்த நாடு முழுமையான நிலைக்கு கூட செல்லலாம். மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்போதைய நிலையில் பொருட்களை கொண்டு செல்வதில் பிரச்சனை உள்ளதால் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பங்களாதேஷை பொருத்தவரை பருப்பு வகைகள், உலர் பழங்கள், மசாலா பொருட்கள் உள்பட பிற அத்தியாவசிய பொருட்கள் அண்டை நாடுகளில் இருந்து செல்கிறது. ஆனால் தற்போதைய போராட்டத்தால் இந்தியாவில் இருந்து அங்கு செல்லும் பொருட்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் சமையல் பொருட்களின் விலை என்பது அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பங்களாதேஷ் தற்போது இக்கட்டான சூழலில் சிக்கி உள்ளது.