இந்தியா

TVK கொடி அறிமுக விழாவுக்கு விஜய் மனைவி ஏன் வரவில்லை; பிரிந்து போன குடும்பம்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழாவில் நடிகர் விஜய்யின் மனைவி ஏன் கலந்து கொள்ள வில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா இன்று நடைபெற்றது. சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் உருவான அந்த கொடியில் இரு புறமும் யானைகள் இடம்பெற்றுள்ளன.

நடுவே உதய சூரியன் போல வாகை மலர் இடம்பெற்றுள்ளது.

கட்சி கொடியை நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ஏற்றி அறிமுகப்படுத்தினார். விஜய் கட்சிக் கொடியுடன் அதற்கான கொடி பாடலையும் உருவாக்கி விஷுவல் உடன் ஒளிபரப்பி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Oruvan

புறக்கணிக்கப்படும் விஜய் மனைவி

 

ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழாவில் நடிகர் விஜய்யின் குடும்பம் இல்லாதது குறையாக உள்ளதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

சமீப காலமாகவே விஜய் கலந்துக் கொள்ளும் எந்த நிகழ்ச்சியிலும் விஜய்யின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்கவே முடிவதில்லை.

விஜய்யின் வாழ்க்கை பற்றியும் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பார் விஜய் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இன்றைய நிகழ்விலும் மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா பங்கேற்கவில்லை.

இதனால், ஏன் என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

இதேவேளை, அட்லீ மனைவியின் வளைகாப்பு, சமீபத்தில் நடைபெற்ற பாடலாசிரியர் விவேக்கின் மனைவி வளைகாப்பு, கல்வி விருது விழா என எதிலுமே இவர்கள் மூவரும் பங்கேற்பதை தவிர்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *