பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு இளைஞனின் ஆணுறுப்பை வெட்டிய திருநங்கைகள்
பெங்களூருவில் 18 வயது இளைஞனின் ஆணுறுப்பை வெட்டிய 5 திருநங்கைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.
பெங்களூருவில் உள்ள டிஜி ஹல்லி பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது இளைஞன் தேநீர் கடையில் வேலை செய்து வந்த நிலையில், தேநீர் அருந்த வந்தபோது சில திருநங்கைகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஐந்து திருநங்கைகள் அந்த நபரிடம், அதிக வருமானம் ஈட்டுவதற்கான வேலை தங்களிடம் இருப்பதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர். அதற்கு அந்த இளைஞன் மறுப்பு தெரிவிக்க, திருநங்கைகள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர்.
மேலும், தெருக்களில் பிச்சை எடுக்க வைத்துள்ளனர். கடந்த மாதம் 12-ஆம் திகதி இரவு திருநங்கைகள் குறித்த இளைஞன் வசிக்கும் இடத்திற்கு சென்று, ஒரு ஆண் பிச்சைக்காரராக நீ ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துள்ளாய். பெண் பிச்சைக்காரராக இருந்தால் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என எண்ணிப்பார் என்று தெரிவித்துள்ளனர்.
இளைஞன் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, வலுக்கட்டாயமாக ஐந்து திருநங்ககைள் அந்த இளைஞனுக்கு சில ஊசிகளை செலுத்தியுள்ளனர். இதனால் அந்த நபர் மயக்கம் அடைந்துள்ளார். மயக்கம் தெளிந்த பின்னர் அவரது ஆணுறுப்பை கத்தியால் வெட்டியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஆகஸ்ட் 3 ஆம் திகதி வீட்டிற்குள் அடைக்கப்பட்டிருந்த அந்த இளைஞனை பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
எப்படியோ அங்கிருந்து தப்பித்த இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடளித்துள்ளார்.. அதன் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து அந்த ஐந்து திருநங்கைகளையும் கைது செய்துள்ளனர்.