கலையின் புனிதத்தை உடைத்த “நீரூற்று”

1917இல் நியூயார்க்கில் தனிப்பட்ட ஓவியர்களின் சங்கம் ஒன்று கலை கண்காட்சி ஒன்றை நடத்தியது. அதில் மார்சல் டுஷாம்ப் தன் படைப்பு என்று சொல்லி ஒன்றைக் கொடுத்தார். ஹார்ட்வேர் ஷாப்பில் சிறுநீர் கழிக்கப் பயன்படுத்துவதற்காக விற்கப்பட்டுக் கொண்டிருந்த பீங்கானில் செய்யப்பட்ட அழகிய குழைமைத் தன்மையுடன் கூடிய ஒரு பீங்கான் கோப்பையை வாங்கினார்.

அதன் மீது வெறுமனே R.Mutt 1917 என்று தனது கையெழுத்தை இட்டார். அது தனது கலைப்படைப்பு என்று சொல்லி கண்காட்சியில் வைக்குமாறு கொடுத்தார். கண்காட்சிக்குப் பணம் கட்டியவர்கள கொடுக்கும் படைப்புகளை காட்சிப்படுத்த வேண்டும் எனும் நிபந்தனை இருந்ததால் அமைப்பாளர்கள அவர் கொடுத்ததை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் கண்காட்சி பகுதியில் அதை வைக்கவில்லை.

பிறகு அந்த படைப்பு Alfred Stieglitz’s studio என்பதால் புகைப்படம் எடுக்கப்பட்டு THE BLIND MAN எனும் டாயிசம் பேசும் பத்திரிகையில் வெளியிடப்பட்டது. அன்று முதல் இப்படைப்பு கலை வரலாற்றாசிரிய்ரகளால் 20 நூற்றாண்டின் ஒரு அதிரடி அழகியல் ( avant-garde ) படைப்பு என்று கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படைப்பின் மூலமாக . கலை என்பது புனிதமானது என்கிற பிம்பத்தை உடைத்து நொறுக்கினார் மார்சல் டுஷாம்ப்.

கலை என்பது புனிதமானது என்கிற பிம்பத்தை உடைத்து நொறுக்கியவர் மார்சல் டுஷாம்ப். 1950இல் நடந்த கண்காட்சியில் ஹார்ட்வேர் ஷாப்பில் விற்கப்பட்டுக் கொண்டிருந்த பீங்கானில் செய்யப்பட்ட அழகிய குழைமைத் தன்மையுடன் கூடிய சிறுநீர் கழிக்கப் பயன்படுத்தும் ஒரு கோப்பையை வாங்கி அதன் மீது வெறுமனே தனது கையெழுத்தை இட்டார்.

அது தனது கலைப்படைப்பு என்று சொல்லி கண்காட்சியில் வைக்குமாறு கொடுத்தார் மார்ஷல் டுஷாம்ப். 1950, 60களில் இதைப் போன்ற 16 படைப்புகளைச் செய்தார். டுஷாம்ப் .இதில் ஒரு படைப்பு இன்று Philadelphia Museum of Art இல் இடம்பெற்றுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button