ஹோட்டல் மேற்கூரையில் விழுந்த ஹெலிகொப்டர்; சம்பவ இடத்திலேயே விமானி பலி

அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் மீது ஹெலிகொப்டர் ஒன்று விழுந்ததில் விமானி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இன்று திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் விமானியுடன் சேர்த்து இருவர் பயணித்த ஹெலிகொப்டர் ஒன்று அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியிலுள்ள கெய்ர்ன்ஸ் நகரில் அமைந்துள்ள ஹில்டன் டபுள் ட்ரீ ஹோட்டலின் மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹெலிகொப்டர் விழுந்தவுடன் தீப்பற்றி எரிந்ததால் சம்பவ இடத்திலேயே விமானி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்குறித்த சம்பவத்தினால் ஹோட்டலில் இருந்தவர்களுக்கு எதுவித ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் சுமார் 100க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹெலிகொப்டரின் இரண்டு புரொபெல்லர்களும் (Propellers) செயலிழந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *