இந்தியா

ஈராக்கில் சிறுமிகளுக்கும் திருமணம்: சர்ச்சைக்குரிய சட்டமூலத்திற்கெதிராக பெண்கள் போராட்டம்

ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 09 ஆக குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்ட மூலம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தின் படி, ஆண்குழந்தைகளுக்கு 15 வயதிலும் , பெண் குழந்தைகள் 09 வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்க முடியும்.

ஈரானில் பெண்களின் திருமணத்துக்கான சட்டப்பூர்வ வயது 18 ஆக உள்ள நிலையில் தற்போது தற்போது முமொழியப்பட்டுள்ள சட்டமூலத்தின்படி, பெற்றோர் மற்றும் நீதித்துறையின் விருப்பத்துடன், 09 வயதில் பெண்களை திருமணம் செய்து கொடுக்கலாம்.

ஈராக்கில் 28 சதவீத பெண்களுக்கு 18 வயதை எட்டுவதற்கு முன்னரே திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளதாக ஐநாவின் குழந்தைகள் அமைப்பான UNICEF தெரிவித்துள்ளது.

தற்போதய இந்த வயது தளர்வு, ஈராக்கில் அதிகப்படியான குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆணாதிக்க நெறிமுறைகள உள்ள ஒரு சமூகத்தில் பெண்களின் உரிமைகளை கடுமையாகப் பின்னுக்குத் தள்ளுவதாக விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த சட்டமூலத்துக்கு எதிராக ஈராக் பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *