மலையகத்தின் 200 வருடங்களும் எதிர்காலம்… (2023 – 2028); இரா.சிவலிங்கம்
மலையகத்தின் வரலாறு 200 வருடங்களை கடந்து விட்டது. இந்த 200 வருடங்களில் மலையக மக்கள் சாதித்த விடயங்கள் சொல்லில் அடங்கா. 200 வருடங்களாக லயத்து வாழ்க்கையை அனுபவித்து வருவதே ஒரு சவாலான விடயம்தான். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் எவ்வித பயிற்சிகளும் இன்றி தோட்டத்தில் பெயர் பதிந்தவுடனேயே வேலை செய்வது என்பது ஒரு அதிசயமாக இருக்கின்றது.
உலகத்தில் உள்ள எல்லா தொழில்களுக்கும் ஒரு பயிற்;சி வழங்கப்படுவதை காணலாம் ஆனால் கொழுந்து பறிக்கவும், தேயிலை தொழிற்சாலையில் வேலை செய்வதற்கும், தேயிலை மலையில் வேலை செய்வதற்கும் எந்தவிதமான பயிற்சிகளும் வழங்கப்படாமலே வேலை வழங்கப்படுவதைக் காணலாம். தோட்டத் தொழிலாளர்கள் செய்கின்ற மிகக் கடுமையான வேலைகள் பல இருக்கின்றன. கவ்வாத்து வெட்டுதல். கிருமி நாசினி தெளித்தல். கொழுந்து பறித்தல். தேயிலை மலைகளை சுத்தம் செய்தல். உரம் போடுதல். கான் வெட்டுதல். முள்ளுக் குத்துதல். தேயிலைப் பிடுங்குதல். கல்லுடைத்தல். கான் வெட்டுதல். குழி குத்துதல். பாசான் துடைத்தல். புல் வெட்டுதல். புல் பிடுங்குதல். கட்டடம் கட்டுதல். அருகு எடுத்தல். நிலத்தை மட்டப்படுத்தல், சாக்கு வேலை போன்ற பல்வேறு வகையான வேலைகளை ஆண்கள் செய்கின்றார்கள். பெண்கள் கொழுந்துப் பறித்தல், தேயிலை தொழிற்சாலையில் வேலை செய்தல், பில் பிடுங்குதல் போன்ற வேலைகளைச் செய்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய வேலைகளை செய்யும் தொழிலாளர்களுக்கு எவ்விதமான தொழில் பாதுகாப்பும் இல்லை. தொழில் காப்புறுதி கிடையாது. வேலைத்தளங்களில் எவ்விதமான பாதுகாப்பும் இல்லை. அட்டைக் கடி, குழவி கொட்டுதல், எரிப் பூச்சு கடித்தல், பாம்புகள் தொல்லை. சிறுத்தைகளின் நடமாட்டம், தகாத காலநிலை, கடுமையான வெயில், மழை, பனி மிக உயரமான மலைகள், அதிகமான படிக்கட்டுகள் ( 200 – 300), தோட்டத்தில் உள்ள கரடு முரடான பாதைகள், ஆபத்தான பாதைகள், உணவு அருந்தவோ, இயற்கையான கடமைகளை செய்வதற்கோ எவ்விதமான வசதிகளோ தேயிலை மலைகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சகல விடயங்களும் இயற்கையிலும், வெளி இடங்களிலும் தான். நோய்வாய்பட்ட ஒரு தொழிலாளிக்கும் இதே கதிதான். துப்பரவு செய்யப்படாத தேயிலை மலைகள், தேயிலை மலைகள் காடுகளாக ஆக்கப்படுகின்றமை. தோட்ட நிறுவாகம் தேயிலை மலைகளையும், பாதைகளையும், தோட்டத் தொழிலாளர்களைம் பாதுகாப்பதில் அல்லது பராமரிப்பதில் காட்டும் அசமந்தப் போக்குகள்.
மேற்கூறிய அனைத்து விடயங்களையும் தாங்கிக் கொண்டு நான்கு பரம்பரையாகவும், இரண்டு நூற்றாண்டுகளாக வாழும் மக்களின் மன தைரியம் என்பது பாராட்ட வேண்டியது. தன்னைப் பற்றியும், தன்னுடைய நிலைப் பற்றியும், தன்னுடைய குடும்பத்தின், பிள்ளைகளின் எதிர்காலம் பற்றியும் இருபது தசாப்தங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கையில் எதிர்காலத்திலாவது ஒரு விடிவு வர வேண்டும். இதற்காக துரித வேலைத்திட்டங்களை மலையகம் முழுவதும் முன்னெடுக்க வேண்டும். துரித 5 ஆண்டு திட்டங்களை பல மட்டங்களிலும், பல்வேறு துறைகளிலும் முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக மலையகத்தின் கல்வி நிலையில் அதிக கவனம் எடுக்க வேண்டும். கல்விதான் ஒரு சமூகத்தின் முதலீடு என்பதை உணர்ந்து செய்ற்பட வேண்டும். மயைகத்திலுள்ள பாடசாலைகள் அர்ப்பணிப்போடு செயற்பட முயற்சிக்க வேண்டும். இதற்கான வேலைத்திட்டங்களை மலைகப் பாடசாலைகளை தயாரிக்க வேண்டும்.
மலையகத்திற்கு 30 வருடங்களின் பின்னர் கடைத்த கல்வி வாய்ப்பை மிக உச்சளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மலையகத்தை நோக்கி கல்வி நிறுவனங்கள் விஸ்தரிக்கப்பட வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்கள். உயர்தர கல்வி டிப்லோமா வழங்கும் நிறுவனங்கள். ஆங்கில மற்றும் கணித, விஞ்ஞான, தொழில் நுட்ப, கனணி போன்ற துறைகளுக்கு மேலும் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். கற்ற சமூகத்திற்குத்தான் மதிப்பும், மரியாதையும், கௌரவமும் அதிகம் என்பதை மலையகமும் எதிர்காலத்தில் உணர்ந்து செயற்பட வேண்டும்.
வருடத்திற்கு 500 மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புகின்ற வேலைத் திட்டங்களை மீண்டும் முன்னெடுக்க வேண்டும். மாணவர்களை உயர்தரத்தில் கணித, விஞ்ஞான தொழில் நுட்பத் துறைகளுக்கு அனுப்ப வேண்டும். இன்னும் 25 வருடங்களில் இந்த உலகத்திற்கு ஏற்றது போல் இன்றைய கல்வி கற்கும் முறைகளை மாற்ற வேண்டும். எதிர்கால வேலை உலகிற்கு மலையகம் இப்போதே தயாராக வேண்டும். அல்லது தயார்ப்படுத்தப்பட வேண்டும். எதிர்கால கல்வியின் தூர நோக்கு இல்லாமல் தொடர்ந்து கற்றுக் கொண்டிருப்பது நேரத்தையும், காலத்தையும், பணத்தையும் வீணடிக்கும் செலாகும் என்பதை இன்றையப் பெற்றோர்கள் உணர்ந்து செய்ற்பட வேண்டும். தொடர்ந்து இனி வரும் காலங்களிலும் லயத்து வாழ்க்கையை மட்டும் நம்பி வாழ முடியாது.
தோட்டத்திலுள்ள வேலைகளை மட்டும் நம்பி வாழ முடியாது. மாற்றுத் தொழில்களுக்கு வழிகாட்ட வேண்டும். தொழில் நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு ஆர்வம் காட்ட வேண்டும். மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். எதிர்கால மலையகம் எப்படி இருக்கப் போகின்றது என்பதை தீர்மானிப்பது அரசியல் வாதிகளோ, தொழிற் சங்கங்களோ, அரசியல் கட்சிகளோ, அரசார்பற்ற நிறுவனங்களோ இல்லை. மலையகத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு தனிமனிதனும் சிந்தித்து தன்னுடைய வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
கடந்த காலங்களில் மலையக மக்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும், துரோகமான செயற்பாடுகளும், இம் மக்கள் வஞ்சிக்கப்பட்ட, புறம் தள்ளப்பட்ட, புறக்கனிக்கப்பட்ட, ஏமாற்றப்பட்ட, விடயங்கள் பல இருக்கின்றன. குறிப்பாக 1948 ஆம் ஆண்டுகளில் இலங்கை சுதந்திரம் அடைந்தாலும், மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டது. சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் மலையக மக்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப் பட்டமை, இலங்கையில் ஏற்பட்ட சிறி குழப்த்தில் மலையகத் தமிழர்கள் பாதிக்கப்பட்டமை, 1983 ஆண்டு வன் செயலில் அதிக மக்கள் பாதிக்கப்பட்டமை. 1989 ஆம் ஆண்டு காலத்தில் ஏற்பட்டப் இனக் கலவரங்கள், தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகளில் தோட்ட மக்கள் பாதிக்கப்பட்டமை.
இன்று வரையும் சகல மக்களுக்கும் கானி உரிமையோ, உழைப்புக்கு ஏற்ற வேதனமோ வழங்கப்படுவதில்லை. தோட்டங்கள் இன்று வரையும் தேசிய நீரோட்டத்தில் சுகாதாரம், சௌக்கியம், பிரதேச சபைகள் இணைத்துக் கொள்ளப்பட வில்லை.
குறிப்பாக 200 வருடங்கள்hக பல போராட்டங்களையும், Nலை நிறுத்தங்களையும், சத்தியா கிரகங்களையும், பாதை யாத்திரைகளையும் செய்தே பல விடயங்களில் ஒரு சில வெற்றிகளைப் பெற்றுக் கொண்டனர்.
விசேடமாக பிரஜா உரிமையைப் பெற்றுக் கொண்டமை, அரச தொழில் வாய்ப்புக்களைப் ( ஆசிரியர் தொழில், பொலிஸ் உத்தியோகம், ஏனையத் துறைகள்) பெற்றுக்கொண்டமை, இன்று 13000 ஆசிரியர்கள் மலையகத்தில் ந்த சமூகம் முன்னேற்றமடையத் தொடங்கி விட்டது என்று அர்த்தமஇருக்கின்றார்கள். பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களாக பலர் வேலை செய்கின்றார்கள். ஒரு சில அரசாங்கத் தொழில்களில் இன்று இணைந்து வேலை செய்கின்றார்கள். பிரதேச சபை, மாகாண சபை, பாராளுமன்றத்தில் பலர் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்கால மலையகம் எப்படி இருக்க வேண்டும் என ஒவ்வொரு மலையகத்தவரும் சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை சுயமாக முன்னேற்றிக் கொள்ள வேண்டும். சுய முன்னேற்றம் ஒரு சமூகத்திற்கு வந்து விட்டாலே அர்த்தம் கொள்ளப்படும்.
100 சதவீதமாக இருந்த மலையகப் பகுதிகளை தன்னுடைய உடல் உழைப்பாலும். உள ரீதியான உழைப்பாலும் இன்று சொர்க்கா புரியாக மாற்றிய மலையக மக்களின் வாi;க்கையானது இன்றும் வறுமை, கடன் தொல்லை, பசி நோய், பினி, துன்பம் நிறைந்ததாகக் காணப்படுவதை அவதானிக்கலாம். மலையக மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் வர வேண்டும் என்றால். மதுபாவனையைக் குறைக்க வேண்டும்.
நுண் கடன்கள் பெறுவதை குறைக்க வேண்டும். அதிக வட்டிக்கு கடன் பெறுவதையும், ஆடம்பர செலவுகளையும் குறைக்க வேண்டும். கேபில் டிவி பாவனையைக் குறைக்க வேண்டும். வாழ்க்கையைத் திட்டமிட வேண்டும். பிள்ளைகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சுய தொழில் ஈடுபட வேண்டும். மறக்கறித் தோட்டங்களை செய்யத் தொடங்க வேண்டும். ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மாடு வளர்ப்பு போன்றவற்றில் ஈடுபட வேண்டும். இன்னும் அதிகமான நேரம் உழைப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
2028 ஆம் ஆண்டு அதாவது இன்னும் 5 வருடங்களில் ஒரு மாதிரி திட்டத்தை புத்தி ஜீவிகளும், தொழிற் சங்கங்களும், அரசியல் கட்சிகளும், அரசியல் வாதிகளும், சமூக ஆர்வலர்களும், அரசசார்பற்ற நிறுவனங்களும் இணைந்து ஒரு முன் மொழிவைத் தயாரித்து மலையக மக்களுக்கான ஆலோசனை வழிகாட்டலை செய்யத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு தோட்டங்களிலும் கல்வி அபிவிருத்திக் குழுக்களை உருவாக்க வேண்டும். இளைஞ்சரகளுக்கு தொழில் வழிகாட்டல் விழிப்புணர்வை கொடுக்க வேண்டும். ஏன். வி. க்யூ பாட நெறியை தொடர்வதற்கு வழிகாட்ட வேண்டும். புதிய சுய தொழில் வாய்ப்புக்களை அறிமுகப்படுத்த வேண்டும். பெண்களின் முன்னேற்றத்திற்காக பெண்கள் குழுக்களை ஸ்தீரப்படுத்த வேண்டும். பெண்கள் கழகங்களை தோட்டங்கள் தோறும் உருவாக்க வேண்டும். கலை கலாசாரம், விளையாட்டுத் துறைகளை ஊக்குவிக்க வேண்டும். பெற்றோரின் பென்சன் பணத்தில் ஆட்டோ வாங்குவதையும், வீடுகளைத் திருத்துவதிலும், கலியாணம், சடங்கு,பிறந்த நாள் விழாக்களை க் கொண்டாடுவதையும் குறைக்க வேண்டும்.
தோட்டங்கள் தோறும் பட்டதாரிகள் உருவாக வேண்டும். தோட்டப்புற மாணவர்களும் வக்கீல்களாக, வைத்தியர்களாக, பொறியலாளர்களாக, விரிவுரையாளர்களாக, அரச உயர் உத்தியோககங்களைப் பெறுபவர்களாக மலயகச் சமூகம் மாற வேண்டும். மலையகப் பிரதேசங்களில் உள்ள பிரச்சினைகளை ஆய்வு செய்து அறிக்ககைப்படுத்த வேண்டும். மலையக எழுச்சிக்கான மகாநாடுகளையும், கலந்துரையாடல்களையும், கருத்தரங்குகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும். புலம் பெயர் மலையகத்தைச் சார்ந்தவர்களின் உதவிகளையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும். மலையக அபிவிருத்தி குழு ஒன்றை மாவட்ட ரீதியாக உருவாக்க வேண்டும்.
மலையக அபிவிருத்தி குழுவில் பல்வேறு தரப்பினர்களையும் சேர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். தோட்டங்கள் தோறும் ஒவ்வொரு துறைக்குமான அபிவிருத்திக் குழுக்களை தயார்படுத்த வேண்டும். தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளை தோட்டத் தொழிலாளர்களாகவே இருக்க வேண்டும் என்பது இல்லை. அவர்களும் படிக்க வேண்டும். உயர் கல்விப் பெற வேண்டும். நல்ல உத்தியோகம் பார்க்க வேண்டும். கை நிறைய சம்பாதிக்க வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்கள் என்ற நிலைப்பாட்டை னிவரும் இளைஞர் சமுதாயமாவது மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும். தங்கி வாழும் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும். லயத்து வாழ்க்கை முறையை ஒழிக்க வேண்டும். பததாம் திகதி சம்பளத்தையும், தீபாவளி அட்வான்சையும் எதிர்பார்க்கும் நிலை மாற வேண்டும். வெளி மாவட்டங்களுக்கு வீட்டு வேலைகளுக்கு மலையகத்தவர்கள்தான் என்ற நிலை மாற வேண்டும்.
தேசியப் பருPட்சைகளான தரம் 5 புலமைப் பரிசில், க.பொ.த சாதாரணத் தரம், க.பொ.த உயர் தரம் போனறப் பரீட்சைகளில் மலையக மாணவர்கள் அதி கூடிய பெறுபேறுகளைப் பெற வேண்டும். பல்கலைக்கழகத்திற்கு செல்லுகின்ற மாணவர்களின் தொகை அளவு ரீதியாகவும், தர ரீதியாகவும் அதிகரிக்க வேண்டும். தேயிலைத் தோட்டங்களின் செழிப்பு nபுhல் மலையக மக்களின் வாழ்க்கையும் எதிர்காலததில் செழிக்க வேண்டும்.
தேசபந்து. இரா.சிவலிங்கம்