இலக்கியச்சோலை
சினிமாஸ் ” கே. குணரத்தினம் (K. Gunaratnam, KG) ) என அழைக்கப்பட்ட கனகசபை குணரத்தினம் பிறந்தநாள் !
சினிமாஸ் ” கே. குணரத்தினம் (K. Gunaratnam, KG) ) என அழைக்கப்பட்ட கனகசபை குணரத்தினம் பிறந்தநாள்!
இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளரும், விநியோகத்தவரும், தொழிலதிபரும் ஆவார். 1965ம் ஆண்டு எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் இலங்கைக்கு விஜயம் செய்தார்கள் அதன் போது எங்க வீட்டு பிள்ளை படத்தை இலங்கையில் திரையிட்டார் , கொழும்பு நகரின் பிரபலமான கால்பேஸ் ஓட்டலில் இருவரும் தங்கியிருந்தார்கள். பின்னர் கொழும்பில் இவரின் விருந்தாளிகளாகத் தங்கியிருந்தார்கள்.
பல சிங்களத் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.யாழ்ப்பாணம், அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் குணரத்தினம். இவரது மூதாதையர் நல்லூரைச் சேர்ந்தவர்கள். பல இந்தியத் திரைப்படங்களை சிங்களத்துக்கு மொழிமாற்றம் செய்து வெளியிட்டு வந்த குணரத்தினம், இந்தியாவில் சிங்களத் திரைப்படங்கள் தயாரிப்பது நிறுத்தப்பட்டவுடன், 1953 ஆம் ஆண்டில் இலங்கையில் சொந்தமாக ஒரு திரைப்படக் கலையகம் ஒன்றைத் தொடங்கி சிங்களப் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார்.
சுஜாதா என்ற இவரது முதலாவது சிங்களத் திரைப்படம் பெரு வெற்றி பெற்றது. ஆரம்பித்த சில ஆண்டுகளுக்குள் 25 இற்கும் அதிகமான திரைப்படங்களைத் தயாரித்தார். சினிமாஸ் தியேட்டர்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து நாடு முழுவதும் பல திரையரங்குகளை நிறுவினார். இதனால் இவர் பிரபலமாக “சினிமாஸ் குணரத்தினம்” என அழைக்கப்பட்டார்.
1983ம் ஆண்டில் நாட்டில் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறையின் போது, கொழும்பின் புறநகரான ஹென்தலையில் அமைந்திருந்த குணரத்தினத்தின் விஜயா ஸ்டூடியோவும் எரிக்கப்பட்டது. இங்கு ஏராளமான சிங்கள, தமிழ்ப் படங்களின் மூலப் பிரதிகள் வைக்கப்பட்டிருந்தன. அனைத்தும் எரிந்து சாம்பலாகியது
கொழும்பில் ஆமர் வீதிக்கு அருகாமையில் புதுச்செட்டித்தெருவில்தான் சினிமாஸ் லிமிட்டட் கம்பனி இயங்கியது.
கனகசபை குணரத்தினம் என்ற இயற்பெரைக்கொண்டிருந்த இவரை சினிமாஸ் குணரத்தினம் எனவும் கே.ஜீ. எனவும் அழைப்பார்கள். இவர் 1917 ஆம் ஆண்டு பிறந்து கொழும்பிலேயே நிரந்தரமாக தங்கியிருந்து, இந்தியாவிலிருந்து திரைப்படங்களை இறக்குமதி செய்து இலங்கை எங்கும் திரையிட்டவர்.
கொழும்பில் இவருடை திரையரங்குகளில் குறிப்பிடத்தகுந்தவை: கிங்ஸ்லி, கெப்பிட்டல், வெள்ளவத்தை பிளாஸா, பொரளை லிடோ. மருதானை காமினி. இவை தவிர வடக்கிலும் கிழக்கிலும் மலையகத்திலும் பல திரையரங்குகளையும் குத்தகை அடிப்படையில் எடுத்து நடத்தினார்.
வத்தளை ஹெந்தளையில் அமையப்பெற்ற விஜயா ஸ்ரூடியோவிலிருந்து பல சிங்களத்திரைப்படங்களை தயாரித்து திரையிட்டார். அதற்கு முன்னர் பல இந்தியத்திரைப்படங்களை சிங்களத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டுவந்திருக்கும் குணரத்தினம், 1953 ஆம் ஆண்டு இலங்கையிலேயே திரைப்படங்களை தயாரிப்பதற்காக குறிப்பிட்ட விஜயா ஸ்ரூடியோவை உருவாக்கினார்.
இங்குதான் பின்நாளில் ‘பைலட் பிரேம்நாத்’ படத்தின் படப்பிடிப்பும் நடந்தது.
இவர் எடுத்த முதல் சிங்களப்படம் சுஜாதா. அதன் வெற்றியைத்தொடர்ந்து, இருபத்தியைந்திற்கும் மேற்பட்ட சிங்களத்திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு சிங்கள ரசிகர்களுக்கு விருந்துபடைத்தார். சினிமாஸ் உரிமையாளர் கே.குணரத்தினம் தனது மகள் விஜயாவின் பெயரில் ஹெந்தலயில் நடத்தி வந்த பிரபல விஜயா ஸ்டூடியோ சிங்களத் திரைப்படங்கள் பலவற்றை காட்சிப்படுத்திய தியேயட்டர் அதை தீயிட்டு அளித்தது மாத்திரமல்ல அங்கே இருந்த “சங்தேசய”, “தீவரயோ”, “சண்டியா”, “சூர சௌரயா” போன்ற ரீல்கள் அழிக்கப்பட்டு இன்றைய சந்ததிக்கு மீண்டும் அதனைக் காணும் வாய்ப்பை இல்லாமல் செய்தார்கள்.
இந்தக் கலவரத்தில். இந்தத் திரைப்படங்களில் நடித்த காமினி பொன்சேகா பின்னொருகாலத்தில் ஒரு நேர்காணலில் இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து கண்ணீர் விட்ட செய்தியையும் நாம் காண்கிறோம். சினிமாஸ் கே. குணரத்தினம் ஹொந்தய் நரகய் (நல்லது கெட்டது) என்ற பெயரில் படம் தயாரித்தார். இந்தப் படம் 73ம் ஆணடு ஒக்டோபர் மாதம் திரைக்கு வந்தது.
எந்த இயக்குனரை போட்டு படம் எடுத்தால் படம் வெற்றி பெறும் என்பதை துல்லியமாக கணித்து படங்களை தயாரித்து வசூலை வாரியவர் கே. குணரத்தினம். லெஸ்டர் Nஐம்ஸ் பீரிஸின் டைரக்ஷனில் சந்தேசிய, டைடஸ் தொட்டவத்தவின் இயக்கத்தில் சண்டியா, எம். மஸ்தான் இயக்கத்தில் சூரசௌரயா என்று படங்களை எடுத்து வெற்றி கண்டவர்.
1973ம் ஆண்டு லெனின்தான் ஜெயிக்கும் குதிரை என்பதை நன்கு உணர்ந்து அவரை டைரக்டராகப் போட்டு படத்தை வெளியிட்டு ஜெயித்தார்.விஜயா ஸ்டூடியோ எரிந்து கொண்டிருந்தபோது அங்கு விரைந்த சினிமாதுறையைச் சேர்ந்த விஜயகுமாரதுங்க, நீள் ரூபசிங்க, சரத் ரூபசிங்க, பெப்டிஸ் பெர்னாண்டோ, ரவீந்திர ரந்தெனிய போன்றோர் எஞ்சியவற்றை மீட்கப் போராடியிருக்கிறார்கள்.
என்னதான் அவர் சிங்களப்படங்கள் எடுத்திருந்தாலும், அவர் சிங்களவர் இல்லையே!? என்பதுதான் 1983 இல் இனவாத சங்காரத்தில் ஈடுபட்ட தீயசக்திகளின் எண்ணமாக இருந்திருக்கிறதுபோலும். அதன்விளைவு குறிப்பிட்ட விஜயா ஸ்ரூடியோ வன்முறை கும்பலினால் தீயிட்டு கொளுத்தப்பட்டது.
இச்சம்பவத்தை கேள்விப்பட்ட நடிகரும் ஶ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவரும் சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் காதல் கணவருமான விஜயகுமராணதுங்கா பதறியடித்துக்கொண்டு, தான் வீட்டில் அணிந்திருந்த சாரத்துடனேயே தனது காரை செலுத்திவந்து விஜயாவிலிருந்த சிங்கள திரைப்படச்சுருள்களை காப்பாற்ற போராடினார்.
இரண்டு வேறு வேறு சந்தர்ப்பங்களில் சினிமாஸ் குணரத்தினமும் விஜயகுமராணதுங்கவும் இனந்தெரியாத நபர்களினால் தலைநகரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கே.குணரத்தினம், தமிழ் வர்த்தகப்பிரமுகர். அவர் விரும்பியிருந்தால் தான் பிறந்த வடபுலத்தின் ஊரிலேயே தனது தொழில்துறைகளை தொடங்கி விருத்தி செய்து தனது இனத்து மக்களுக்ககாக மாத்திரம் ◌வாழ்ந்திருக்க முடியும். அவருக்கு இலங்கையின் தேசிய பொருளாதாரத்தை ஊக்குவிக்கவேண்டும் என்ற நல்லெண்ணமும் தீர்க்கதரிசனமும் இருந்தது.
அதனால் உள்நாட்டில் பெரும்பான்மை இனத்தவர்களுக்காக சிங்களப்படங்களை தயாரித்தார். அதன்மூலம் சிங்கள கலைஞர்களுக்கும் சினிமாத்துறை தொழில் நுட்பவியலாளர்களுக்கும் வேலை வாய்ப்பினை வழங்கினார். அவரது திரையரங்குகளில் மூவினத்தவர்களும் பணியாற்றினர்.
இவை தவிர ஆமர்வீதியில் கே.ஜீ. இண்டஸ்றீஸ் நிறுவனத்தை உருவாக்கி பலருக்கு வேலைவாய்ப்பினை வழங்கினார். அத்துடன் அஸ்பெஸ்டாஸ் உற்பத்திகள், குமுழ் முனைப்பேனா தயாரிப்பு முதலான தொழில் துறைகளிலும் முதலிட்டு உள்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தார்.
1983 இல் போர்க்கால நெருக்கடி தொடங்கியதும் வடக்கிற்கான ரயில்சேவையும் சீர்குலைந்ததை அறிவீர்கள். மக்களின் வடக்கு – தெற்கிற்கான போக்குவரத்து வசதியை கவனத்தில் கொண்டு கே.ஜீ. பஸ் சேவையையும் ஆரம்பித்து. பல பஸ்வண்டிகளை இறக்குமதி செய்து சேவையில் ஈடுபடுத்தினார்.
அதில் பயணிக்கும் பயணிகளின் வசதி கருதி யாழ்ப்பாணம் சென்று திரும்பும் மார்க்கத்தில் நீர்கொழும்பில் அவரது ராஜ் சினிமா என்ற திரையரங்கின் வளாகத்தில் ஒரு சிற்றுண்டிச்சாலையையும் பயணிகள் ஓய்வெடுக்கும் மண்டபத்தையும் அமைத்தார்.
அத்துடன் ஏ 9 பதையில் முறிகண்டி கோயிலுக்கு அருகிலும் சிற்றுண்டிச்சாலையும் பயணிகள் ஓய்வெடுக்கும் மண்டபத்தையும் அமைத்தார்.
அவருடை நிறுவனங்கள் தனியார் துறை சார்ந்திருப்பினும் அவற்றினால் பயனடைந்தவர்கள் இலங்கையின் மூவின மக்களும்தான். ஆனால், அவருடை அருமை பெருமை தெரியாத தீய சக்திகள் அவருடைய நிறுவனங்களை தீயிட்டுக்கொளுத்தி அழித்து நிர்மூலம் செய்தன. இறுதியில் அவரையும் சுட்டுக்கொன்றன.
இதனால் யாருக்கு நட்டம்?
எல்லோரும் பிறக்கிறார்கள். இறுதியில் மறைகிறார்கள். அவர் என்றாவது ஒருநாள் இயற்கையின் தீர்ப்பின் பிரகாரம் மறைந்திருப்பார். ஆனால், அந்த இயற்கையை முந்திக்கொண்டு அவருக்கு படுகொலைத்தீர்ப்பு வழங்கியவர்களுக்கு காலம் பதில் சொல்லும். அவரைக்கொன்றவர்கள், எங்கள் தேசத்தின் பொருளாதாரத்தையும் கொன்றவர்கள்தான்.
அவர் தயாரித்து சிங்கள மக்களுக்காக வழங்கிய திரைப்படங்களின் பட்டியலைப்பாருங்கள்:
சுஜாதா ( 1953) – வரத காகெத? -(1954) ரதல பிலிருவ ( 1956) -தொஸ்தர 1956) – துப்பதாகே துக்க (1956) சந்தேசய ( 1960) – வீர விஜயா (1960) அதட்ட வெடிய ஹெட்ட ஹொந்தாய் – (1963) – உடரட்ட மெனிக்கே (1963) – தீவரயோ – ( 1964) சண்டியா – ( 1965) – அல்லப்பு கெதர ( 1965) ஒப துட்டு தா ( 1966) – சூர சௌரயா (1967) – தென் மதக்கத ( 1972)
சினிமாஸ் குணரத்தினம் அவரது சிக்கனமான வாழ்க்கை முறை எளிமையானது. அவர் தனது தொழில் நிறுவனங்களை விருட்சமாக்கி பலருக்கும் நிழல் பரப்பியவர்.
மாணவர்களுக்கும் அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்காகவும் சகாய விலையில் போல்ட் பொயின்ட் பேனைகளை அறிமுகப்படுத்தியவர்.இவர் தலைவராக இருந்த நிறுவனங்கள்:
- சினிமாஸ் லிமிட்டெட்
- கேஜி கூட்டு நிறுவனங்கள்
- ஃபூஜி கிராபிக்சு சிலோன் லிமிட்டெட்
- ஃபோட்டோ கினா லிமிட்டெட்
அத்தகைய பெருந்தகையை தீயசக்திகள் வாழவிடவில்லை. 1979ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை ஜனாதிபதி விருதுகள் வழங்கும் விழாவில் முதன்முதலாக கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இலங்கை திரைப்பட துறையில் சிறப்பாக சேவை ஆற்றியவர்களுக்கான ” யுஹபிமாணி ”விருது அவரது புதல்விகள் ப்ரியா கிங் குணரத்தினம் – விஜயா குணரத்தினம் இருவரிடம் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா வழங்கினார் .
Sukumar Shan