“பாராட்டுக்கு பாராட்டு” …. கவிதை …. சங்கர சுப்பிரமணியன்.
அன்பிற்கினியவராம் நம் முருகபூபதியும்
என்பையும் உரியர் நம் செந்தமிழுக்கும்
துன்பம் நேர்கையில் யாழெடு என்றால்
இன்பம் சேர்க்க பூபதி நூலெடு என்பேன்
இப்ப ஜெர்மன் தமிழ் வான் அவை பாராட்டு
எப்பவும் உயி்ர்மூச்சான தமிழ்த்தாய் சீராட்டு
முப்பது நூல்களை தந்தார் நம் முருகபூபதி
தப்பாது பாராட்டிய செய்கையே நற்செய்தி
வாழ்த்துரை வழங்கி நின்றவரும் வல்லவர்
தாழ்த்தி எவரையும் சொல்லா பண்புள்ளவர்
நயனத்தில் நலமின்றி சிகிச்சை செய்தாலும்
பயமின்றி ஒளிக்கு திரையிட்டு வாழ்த்தினார்
இன்னும் பூபதி தமிழ்த் தொண்டாற்றுவார்
தன்னுள் தகித்திடும் தமிழை தந்து ஏற்றுவார்
மின்னும் பொன்போல தமிழால் மின்னுவார்
முன்னத்தை வண்ணமாய் நூலில் சமைப்பார்
கருத்தினில் முரண்பாடு கொண்ட போதும்
பொருத்துமே புன்னகையால் புறந்தள்ளுவார்
இருத்திடுவார் நட்பினை மனதில் எந்நாளும்
கருத்தினை கழனி நட்டு அறுவடை செய்பவர்
-சங்கர சுப்பிரமணியன்.