இந்தியா

சிறுமியின் உயிர்காக்க தன் எலும்பு மச்சையை தானம் செய்த முதல் இந்திய நடிகர்

பொலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். இவர் சினிமாவைத் தாண்டி பல பொதுமக்களுக்கு உதவிகளும் செய்து வருகிறார்.

அந்த வகையில் கடந்த 2010ஆம் ஆண்டில் சிறுமியொருவருக்கு எலும்பு மச்சை அறுவை சிகிச்சைக்காக எலும்பு மச்சை தேவைப்பட்டுள்ளது.

அப்போது சல்மான் கானும் அவரது சகோதரரான அர்பாஸ் கானும் இணைந்து எலும்பு மச்சை தானம் செய்துள்ளனர்.

இதன் காரணமாக அறுவை சிகிச்சைக்காக முதன் முதலில் எலும்பு மச்சை தானம் செய்த இந்திய நடிகர் சல்மான் கான் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இவர் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான உதவிகள், மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு நிதியுதவி செய்தல் போன்ற சமூக நற்பணிகளை செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *