அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு…. ஏலையா க.முருகதாசன்
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்களே அது போன்றதுதான் விஞ்ஞானத்தின் அதீத வளர்ச்சியும்.மனிதர்கள் இப்பொழுதே தன்னலையில் இல்லை. மனிதர்கள் எந்த நாடாகவோ எந்த இனமாகவோ இருந்தாலும் அவரவர் சார்ந்தவர்களுடனும் பொதுநிலையிலும் மனிதர்கள் என்ற கட்டுத்தளை இருந்தது.அனைததிலும் நவீன விஞ்ஞானம் தனது ஆதிக்கத்தைச் செலுத்தும் போது இயந்திரமயப்படுத்தப்படும் மனிதர்கள் அதீத விஞ்ஞான சக்திகளின் ஊடுருவலால் நடமாடும் மனித இயந்திரங்களாக மாற்றப்படுவார்கள்.
ஒரு விடயத்தைப் பற்றி ஒவ்வொருவரும் சிந்தித்தல் மூலமாக தன்னிச்சையாக மூளை வளத்தைக் கொண்டு எடுக்கும் முடிவுகள் நிராகரிக்கப்பட்டு ஒரே வழிப் பயணமாக மாற்றப்படும் சாத்தியம் உண்டு.
உதாரணமாக ஒரு போர் நடக்கும் போது அந்தப் போருக்கு எதிராகவும் ஆதரவாகவும் தனிமனிதர்கள் தொட்டு நாடுகள் வரை சொல்லும் அபிப்பராயங்களும் கருத்துக்களும் இல்லாமல் ஆக்கப்பட்டு ஒற்றைக் கருத்தே எல்லாரின் கருத்து என்ற நிலைக்கு உலகம் தவிர்க்க முடியாமல் தள்ளப்படும்.
இதைவிட இது எல்லாவற்றையும்விட குடும்ப உறவுகளால் கட்டியமைக்கப்பட்ட பற்றுதி பாசம் கொண்ட வாழஇவு நீர்த்துப் போகும் அபாயம் உண்டு.
இன்றைய உலகின் போக்கை அவதானிப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்வார்கள்.மனிதகுலம் மெதுமெதுவாக ஒரு புள்ளியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதை.மனிதகுலம் அனைத்துத்துறையின் நெட்வேர்க் என்ற வலைத்தளத்தால் இணைக்கப்பட்டள்ளார்கள் .இன்னும் சொல்லப் போனால் வலைக்குள் அகப்பட்ட மீன்களாக கணிணி வலைத்தளத்திற்குள் மனிதகுலம் மீட்சிபெற முடியாத அளவுக்கு சிக்குப்பட்டுவிட்டது.
அதற்கு உதாரணமாக கைத்தொலைபேசி மனநோயாளிகளாக இசைவாக்கம் பெற்ற மனிதர்களாக உலக மனிதர்கள் மாறி வருகிறார்கள்.இந்த பூமி உருண்டையை தாம் நினைத்தபடி ஆட்டிப்படைக்க அனைத்து வழிகளையும் ஏற்படுத்தி அதை நோக்கி இலக்குத் தவறாதுபயணிக்கத் தொடங்கியுள்ளது ஒரு இனம்.