இலங்கை ஜனாதிபதியின் சிறந்த முடிவு!…. ஏலையா க.முருகதாசன்.
இலங்கையின் மாண்புமிகு ஜனாதிபதி திரு.ரணில் விக்கிரமசிங்கா ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்:பாளராக போட்டியிடப் போவதாக கூறியிருப்பது சிறந்த சாதுர்யமான முடிவாகும்.
இலங்கை பெரும் வரலாறங்றைக் கொண்ட நாடாக இருந்த போதிலும்,அந்த வரலாற்றில் அந்நாடு சந்தித்த வரலாற்றுச் சம்பவங்களை வைத்து இலங்கையை ஒருதலைப்பட்சமான நாடாக அதன் நோக்கில் ஆட்சியிருக்க வேண்டும் என எதிர்பார்க்கவே கூடாது.
இலங்கைக்கு 75வீதமான ஜனநாயகப் பண்பும் 25 வீதமான சோசலிசப் பண்புமே சிறப்பானது மட்டுமல்ல இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்புக்கு இதுவே சாத்தியமானது என்பது எனது கருத்தாகும்.
இலங்கைக்கு பொதுவுடமைப் பண்பு அறவே பொருத்தமற்றது.கேட்பதற்கும் பேசுவதற்கும் எழுதுவதற்கும்,விவாதிப்பதற்கும்,கலந்துரையாடுவதற்கும மட்டுமே பொதுவுடமைப் பண்பு இலங்கைக்கு பொருத்தமானதே தவிர ஒரு போதும் இலங்கையை இப்பண்பால் நிர்வகிக்கவே முடியாது.
இலங்கையின் வரலாற்றில் அடிஅந்தலையாகக் கருதப்படுகின்ற சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் பொதுச் சக்கரவர்த்தியாகஇ ருந்த இலங்கையை ஆண்ட இராவணன் காலத்தையோ அல்லது இலங்கை மக்களின் அவரவர் மொழி சார்ந்தோ,மதம் சார்ந்தோ அதையே காலத்துக்கும் திரும்பத் திரும்பக் கதைப்பதன் மூலமோ இலங்கையை நிர்வகிக்க முடியாது.
அது இலங்கை மக்களின் வாழ்வியலுக்கான பொருளாதார அலகுமல்ல.
மொழி என்பதோ மதம் என்பதோ மக்களால் தாமாகவே வளரக்கூடியவை.தமிழர்கள் தமிழைப் பேசுவதன் மூலமும்,எழுதுவதன் மூலம் அதே போல சிங்களவர்கள் சிங்களத்தைப் பேசுவதன் மூலமும் எழுதுவதன் மூலமும் அவரவர் மொழி நிலைத்து நிற்கும்.
அந்நியரின் படையெடுப்பின் போது மொழி சார்ந்து சுதேசிய மக்கள் அப்படை எடுப்புகளை எதிர்கொள்ளவில்லை.அவரவர் மதத்தைக் காப்பதற்காகவே மக்கள் அந்நியர் ஆதிக்கத்தை எதிர்த்தார்கள்.
அதனை கலாநிதி திரு.முருகர் குணசிங்கம் அவர்கள் எழுதிய இலங்கைத் தமிழ்த் தேசியவாதமும் அதன் ஆரம்ப தோற்றமும் என்ற நூலில் வரையறுத்துக் குறிப்பிட்டுள்ளார்.
இப்பொழுது இலங்கையில் அனைத்துக் கோவில்களிலும் பகதர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கின்றது.அவர்களைக் கோவிலுக்கு போங்கள் என்று யாருமே வழிநடத்தவில்லை.அது தானாகவே நடக்கும்.
அது அரசியலின் அலகல்ல. மொழி சார்ந்து அரசியல் என்பது மக்களை உணர்ச்சி வசப்படுத்தலாமே தவிர மக்களின்பொருளாதார வாழ்வுக்கு ஒரு போதுமே அது பலனளிக்காது.
இலங்கை ஒரு விவசாய நாடேயாகும்.இங்கு பாரிய தொழிற்:சாலைகளை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் அரிதானவை. காங்கேசன்துறையில் இயங்கிய சீமெந்துத் தொழிற்சாலையே,வாழைச்சேனையில் இயங்கிக் கொண்டிருக்கும் காகிதத் தொழிற்சாலையோ,பரந்தனில் இயங்கும் இரசாயணத் தொழிற்சாலையோ,காலியில் இயங்குகிற சீமெந்துத் தொழிற்சாலையோ,புத்தளம் தம்பன்ன சீமெந்து தொழிற்சாலையோ பாரிய தொழிற்சாலைகள் அல்ல.
இவை போன்ற தொழிற்சாலைகளே இலங்கைக்கு உகந்தவையே தவிர பாரிய தொழிற்சாலைகள் இலங்கை மக்களின் சுகாதாரத்தையம்,தரை வளத்தையும் சுற்றியிருக்கும் கடல் வளத்தையும் பாதிக்கும்.
இலங்கையில் இருக்கும் வளங்களை மேன்மைப்படுத்தலிலும் அபிவிருத்தி செய்வதிலுந்தான் இலங்கை மக்களை செல்வச் செழிப்புடன் வாழ வைக்க முடியும். இலங்கை விவசாய நாடு மட்டுமல்ல உல்லாசப் பயணிகளுக்கான நாடுந்தான்.
பெரும் பொருளாதார கட்டமைப்பாக இருக்கின்ற தேயிலை,றப்பர் போன்றவற்றுடன் ஏலக்காய்,கராம்பு, போன்வற்றுடன் தென்னம் பொருட்கள் பனம் பொருட்கள் போன்றவற்றை இன்னும் இன்னுமாய் அவற்றின் பயன் பொருட்களை உற்பத்தி செய்தலே சிறப்பானது.
இலங்கையை அமெரிக்காவைப் போலவோ ஐரோப்பிய நாடுகள் போலவோ பெரும் பிரமாண்டங்களாக உருவாக்க வேண்டும் என்ற கற்பனை மிகத் தவறானது. மக்களுக்கு அவர்களின் வருமானத்துக்குள் அவர்கள் முதலில் சத்தான உணவுண்டு வாழும் தேவையைப் பூர்த்தி செய்தல் வேண்டும்.
பொதுத் தேர்தலின் போதும்,ஜனாதிபதித் தேர்தலின் போதும் காற்றைக் கயிறாக்குவோம் என போட்டியிடுபவர்கள் சொல்லத்தான் செய்வார்கள். பொய் பேசுவார்கள்,நிறைய வாக்குறுதிகளை வழங்குவார்கள்.அதனைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய பொறுப்பு வாக்காளர்களுக்கு உண்டு.
எமது நாட்டில் இன்னென்ன பிரச்சினை உண்டு அதனைச் சரிப்படுத்த வேண்டிய பொருளாதார நிலவரம் எதுவோ அதை வெளிப்படையாக சொல்லுகின்ற வேட்பாளர்கள் எமது நாட்டில் மிக அரிதாகவே காணப்படுகின்றார்கள்.
மிக எளிமையான உதாரணமாக வீட்டுத் தோட்டத்தை உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான வழியாகச் சொல்வதானால்,விவசாயத்தில் ஐந்து அவரைக் கொடியை ஒருவர் தனது வீட்டுப் பின் வளவில் நட்டு அப்பப்ப அன்றாட தேவைக்கு பயன்படுத்தும் நிலை பெருமளவு முறையாக அதே ஐந்து அவரைப் பயிர் ஐம்பது இலட்சமாவோ ஐம்பது கோடியாகவோ விவசாயம் செய்யும் போது பெரும் பொருளாதாரமாக வளர்கிறது.
ஒன்று என்பது பொருளாதாரத்தின் ஆரம்பம்.வெளிநாட்டுப் பணத்தின் பெறுமதி இலங்கையில் குறையும் போது இலங்பை; பணத்தின் பெறுமதி கூடும் என்பது எல்லோரும் அறிந்ததே. இப்பொழுது இலங்கை இருக்கும் சூழ்நிலையில் மாண்புமிகு ஜனாதிபதி திரு.ரணில் விக்கிரமசிங்கா அவர்களே பொருத்தமான ஜனாதிபதி.அவர் சுயேட்சையாகக் கேட்பதும் சரியானதே.மொழியோ மதமோ பொருளாதாரமல்ல