கதைகள்

நடுகைக்காரி…73…  ஏலையா க.முருகதாசன்

 ஞானம் தன்னைத்தான் காலிக்கிறான்.புஸ்பகலாவோடை இயல்பாக கதைப்பதை வைச்சுக் கொண்டுஅவன் அவளைத்தான் காதலிக்கிறான் என நான் கற்பனைபண்ணிவிட்டேன்,ஞானம் என்னைக் காதலிப்பதைத்தான் சொல்லப் போகிறான் என்ற மகிழ்ச்சியுடன் வீதியோரத்தில் காத்திருந்தாள் நீலா.

வீதியோரத்து பெரிய பூவரசம் மரத்தோடு சைக்கிளைச் சாய்த்து வைச்சவன் சைக்கிளோடு சாய்ந்து நின்றபடியே நீலாவைப் பார்த்து எதற்காகப் புஸ்பாவோடு என்னைப் பற்றிக் கதைச்சு சண்டை போட்டனீங்கள் என்று கேட்க,சில விநாடிகள் அமைதியாகப் பதில் எதுவும் சொல்லாதிருந்த நீலா அவனுக்குக் கிட்ட வந்து வீதிக்கு தனது முதுகைக் காட்டியபடிஇப்ப என்ன கேட்டனீங்கள் என்று விளங்காத மாதிரி வேண்டுமென்றே ஞானத்தைக் கேட்க, என்ன நான் கேட்டதை அதுக்குள்ளேயே மறந்திட்டியளா நீங்கள் என்ன அரணையா என எடுத்தெறிந்து பேச அவளுக்குக் கோபம் வந்துவிடுகிறது.

நான் அரணையும் இலi;ல ஒண்டுமல்ல,நீங்கள் காலமை அவளுடன் சண்டை பிடிச்சதற்காக என்னைக் குற்றவாளியாக்கி இஞ்சை வைச்சு விசாரிக்கிறியள் என்று கொஞ்சம் கோபமாகக் கேட்கிறாள். தான் எதிர்பார்த்ததற்கு மாறாக நீலாவின் வார்த்தைகள் தடித்தவையாக வெளிப்பட்டதைக் கண்ட ஞானமும் அவள் கோபமாகக் கதைப்பாள் என்பதை எதிர்பார்க்கவேயில்லை.

தான் அவளுக்குப் பயப்படவில்லை என நடித்தவன் தனது முகத்தில் தோன்றிய தடுமாற்றத்தைத் தெண்டித்து மறைச்சபடி என்ன என்னைப் பயப்படுத்திற மாதிரிக் கதைக்கிறியள் நான் கேட்ட கேள்வியான எதற்காக காலைமை புஸ்பாவோடை சண்டை பிடிச்சனீங்கள் என்றதற்கு பதில் இன்னும் வரவில்லையே என்று ஞானம் கேட்டதற்கு இதுவரை தனது மனதில் அடக்கி வைத்திருந்த நீலாவின் கோபம் எரிமலையாக வெடித்தது.

அவளோடை சண்டை பிடிச்சால் உங்களுக்கேன் கோபம் வருகுது,என்னை இஞ்சை கூட்டிக் கொண்டு வைச்சு வீதியோரத்திலை நிற்க வைச்சு கேள்வி கேட்கிறியள் நான் என்ன இளிச்சவாய்ப் பொட்டை என்று நினைச்சியளோ என்னைக் காதலிச்சுப் போட்டு இப்ப அவளை விரும்புகிறியள்,என்னை மற்றக் கிளாஸ்மேற் எல்லாம் கேலி செய்கிறார்கள் என் நிலையிலிருந்து பார்த்தால்தான் அது புரியும் என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பொறுங்கோ பொறுங்கோ நான் உங்களை விரும்புகிறன் என்று எப்ப சொன்னனான் நீங்களே தேவையில்லாமல் கற்பனை செய்ததற்கு நான் பொறுப்பல்ல என்றவனை கோபத்தடன் கண்கள் சிவக்க பார்த்த நீலா அப்ப எதற்காக பிறப் எஸ்.எஸ்சியில் என்ரை தலையிலை ரோஜாப்பூவைச் செருகினனீங்கள் என்று கேட்டதும் ஞானத்தின் செருக்குத்தனமான பதில் இன்னும் அவளை கோபமடைய வைச்சது.

அவளின் கேள்விக்கு அவன் சும்மா நான் ஒரு விளையாட்டாகத்தான் செருகினனான்.பாலா தங்கடை முற்றத்திலை பூத்தது என்று என்று என்ரை கையிலை மூன்று ரோஜாப்பூக்களை வைச்சான் எனக்கு ரோஜாப்பூ என்றால் பிடிக்கும் அதன் இதழகு பிடிக்கும் அமுத்தமான அதன் வாசனை பிடிக்கும் அது அவனுக்கும் தெரியும்,அதனால்தான் ஒரு கிழமையிலை மூன்று நாட்களுக்காவது பூக்களைக் கொண்டு வந்து என்னிடம் தருவான். அப்படி ஒரு நாள் தந்த போது எனக்கு வேறு எந்த யோசனையும் வரவில்லை சடாரென்று உங்கடை தலையிலை செருகிவிட்டன் நீங்களும் முதலில் அதிர்ச்சியடைஞசாலும் பிறகு பேசாமலிருந்துவிட்டியள்,நானும் அதைப் பெரிசு படுத்தவில்லை என்று அவன் சொல்ல,நான் பெரிசு படுத்தவில்லையென்றால் அதுக்கு என்ன அர்த்தம் எனக்கு உங்களிலை ஒரு கோபமும் வரவில்லை என்பதுதானே அது ,ஒரு கோபமும் வரவில்லையென்றால் உங்களிலை எனக்கு விருப்பம் என்றுதானே அர்த்தம் என்றவள், சில விநாடிகள் அமைதியாக இருந்தாள். ஆனால் ஞானம் இந்தப் பிரச்சினையை இன்றோடு முடிச்சுக் கொள்ள வேண்டுமென்பதிலேயே குறியாக இருந்தான்.

உங்கடை தலையிலை நான் விளையாட்டாகப் பூ செருகியதை நான் உங்களை விரும்பித்தான் அப்படிச் செய்தேன் என்று நீங்கள் நினைச்சதற்கு நான் என்ன செய்யிறது என்று அவன் சொல்ல எங்கடை வகுப்பிலை எத்தனையோ பொட்டையள் இருக்கத்தக்கதாக என்ரை தலையிலை மட்டும் என் பூவைச் செருகினனீங்கள் என்று அவள் விரல் நீட்டிக் கேட்டதும் பதில் சொல்ல முடியாமல் ஞானம் தடுமாறினான். அவளே தொடர்ந்தாள் ஏனென்றால் நான் வெள்ளை, வடிவானவள் என்பதுதானே காரணம்,இப்ப இன்னொரு வடிவானவள் கிடைச்சதும் குரங்கு மரம் தாவுகிற மாதிரித் தாவிவிட்டியள் என்று அவள் குமுறத் தொடங்கினாள். நீங்கள் தலையிலை ரோஜாப்பூ செருகின கதை ஏதோ ஒரு வழியில் எப்படியோ அம்மாவுக்குத் தெரிஞ்சு போச்சுது அம்மா கேட்டா நீலா நான் கேள்விப்பட்டனான் ஒரு பொடியன் உன்ரை தலையிலை ரோஜாப்பூ வைச்சானாமே யார் அந்தப் பொடியன் அவனுக்கு என்ன துணிச்சல் அதை நீ உன்ரை மாஸ்ரர்மாருக்குச் சொல்லியிருக்கலாமே என்று,அதுக்கு நான,; அம்மா நாகேஸ்வரிதான் ரோஜாப்பூ கொண்டு வந்தவா நான்தான் அவளிட்டை வாங்கி என்ரை தலையிலை வைச்சனான் என்று அம்மாவுக்குப் பொய் சொன்னது மட்டுமல்ல அம்மாதான் எனக்கு தலையிலை ரோஜாப்பூ வைச்சுவிட்டவா என்று மாஸ்ரருக்குப் பொய் சொன்னனான் என்று அவனுக்குப் பதில் சொன்னாள்.

சரி சரி என்னிலையும் பிழை இருக்கலாம் அதுக்கு காலமை புஸ்பகலாவிடம் எப்படி அவனை மயக்கினாய் என்று கேட்டியாமே நீற்கள் வரம்பு மீறிக் கதைச்சது சரியென்று நினைக்கிறியளோ என்று ஞானம் கேட்டதும் பொறுக்கமுடியாத கோபத்திலைதான் கேட்டனான் ஆனால் நான் அப்படிக் கேட்டிருக்கக்கூடாதுதான் என்றவள் கொஞ்ச நேரம் எதுவுமே பேசாது நின்றுவிட்டு வீட்டுக்குப் போவதற்கு வீதரியோரத்தைவிட்டு அடி எடுத்து வைச்ச போது வீதியோரத்தில் இருந்த பஸ்தரிப்பு நிலையத்தை நோக்கி மாணவர்கள் வரத் தொடங்கினர். நீலா தலையைக் தலையைக் குனிஞ்சபடி சிவந்த கண்களுடன் போவதையும் ஞானம் சைக்கிளை எடுத்து உருட்டிக் கொண்டு வீடு நோக்கிப் போவதையும் மாணவர்கள் கவனிக்கின்றனர். ஞானம்; நீலாவின்; தலையில் பூ செருகின கதை எற்கனவே ஊர் வட்டாரத்தில் கதைக்கப்பட்டு நாளடைவில் காற்றில் கரைந்து போன கதையானது. இப்ப ஞானம் புஸ்பகலா சோடிக் கதையே ஊர் வட்டாரத்தில் உலவிக் கொண்டிருக்கும் கதை.இரண்டு கதையும் ஊர் மக்களுக்கு நன்றாகவே தெரியும். நீலாவும் ஞானமும் தனிமையில் சந்தித்து அப்படி என்னதான் கதைச்சிருப்பார்கள் என்று மாணவர்கள் சிந்திக்கத் தொடங்கினார்.

பருவ வயது பொம்பிளைப் பிள்ளையளும் இளந்தாரிப் பிள்ளையளும் ஒருவரையொருவர நிமிர்ந்து பார்த்துச் சிரித்தாலே சும்மா மெல்லுற வாய்க்கு அவல் கிடைச்சமாதிரி ஊருக்குள்ளை விண்ணாணம் பேசுகிறவைக்கு அது நல்ல பொழுது போக்கு. ஒருவர் சொல்வதை மற்றவர் இன்னும் கொஞ்சம் அதற்கு கற்பனை வர்ணம் தீட்டி சுவைபட வாய்மாறி வாயென காதுகளில் போட்டு வைப்பார்கள். கண்டபடி கதைப்பதில் சமூகத்தில் இருக்கும் சிலருக்கு பிஞ்சப் பாக்கோடு சுண்ணாம்பை வெற்றிலையில் தடவி பாக்குப் போடுற மாதிரி சிலருக்கும் சப்புகிறதுக்கு பொயிலை கிடைனக்காட்டில் பொயிலைக் காம்பை கடைவாய்க்குள் வைச்சிருக்கிற மாதிரி ஒரு உருசி அப்படியானவர்களுக்குக் கிடைக்கும்.; தங்கள் தங்கள் வீடுகளில் இளந்தாரிப் பிள்ளைகளையும்,பருவவயதுப் பிள்ளைகளை வைச்சிருப்பவர்களே கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிவது நரம்பில்லாத நாக்காலை வரம்பில்லாமல் பொய்களைக் கதைக்கவே செய்கின்றனர்.

இது நடந்தது வெள்ளிக்கிழமை.ஊர்ப் புடவைக் கடையில் மலிவு விற்பனை என்ற செய்தி ஊருக்குள் வேகமாகப் பரவஅந்த ஊரைச்; சேர்ந்தவர்கள் மட்டுமல்ல அயலூரைச் சேர்ந்தவர்களும் கடைக்குள் குவியத் தொடங்கிவிட்டனர். கடைக்குள் நிற்பதற்கே இடமெல்லாத நெருக்குவாரம்.கையிலிருந்த பொருள் ஒன்று தற்செயலாக கீழே விழுந்தால்,அதை எடுப்:பதற்குக் குனிஞ்சால் நிமிரமுடியாத இக்கட்டான நிலையில் புடவைப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

ஞானம் தாயாரை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு கடையடிக்கு வந்து சேர்ந்த சில நிமிட இடைவெளியில்: மங்களேஸ்வரி தாயாருடன் கடையடிக்கு வந்து சேர்ந்தாள். மங்களேஸ்வரியின் தாய் தகப்பனை ஞானத்தின் தாய் தகப்பனுக்குத் தெரியுமென்பதால் மங்களேஸ்வரியின் தாயைக் கண்டதும், ஞானத்தின் தாய் இதென்ன இப்பிடிச ;சனமாய்க் கிடக்குது,மலிவென்றால் எங்கடை ஆட்கள் கொடிவிட்டு வரத் தொடங்கிவிடுவினம் என்று தாய் சொல்ல, அம்மா நாங்களும் துணிகள் மலிவென்று தெரிஞ்சுதானே வந்தனாங்கள் பிறகேன் மற்றவையைக் குறை சொல்லுறியள் என்று சொல்ல, இவன்: ஒருத்தன் எதுக்கெடுத்தாலும் நியாயம் தர்மம் பேசிக் கொண்டிருக்கிறான்,அரிச்சந்திரன்ரை பக்கத்து வீட்டுக்காரன் மாதிர,p ஏதோ வாயிலை வந்துது சொன்னன் என்று ஞானத்தின் தாய் சொல்ல,அன்ரி அதையேன் பேசுவான் வகுப்பிலை இவர் செய்கிற அட்டகாசமிருக்கே எக்கச்சக்கம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே புஸ்பா தாய்தகப்பனுடன் கடையடிக்கு வந்து சேர்ந்தாள் .

புஸ்பாவைக் கண்டதும் ஞானத்தின்: முகம் பிரகாசமாக,மங்களேஸ்வரியின் முகம் இருண்டது.புஸ்பாவும் மங்களேஸ்வரியை அங்கு எதிர்பகார்க்கவில்லையாதலால் தடுமாறினாள்.தான் மங்களேஸ்வரியை வருத்தம் பார்க்கப் போவதாகப் பொய் சொல்லிவிட்டு ஞானத்தின் வீட்டுக்குப் போனது தெரிந்துவிடப் போகிறதே எனப் பயப்பட்டாள். நிலைமையை ஊகித்துக் கொண்ட மங்களேஸ்வரி தாயாரின் கையைப் பிடிச்சு இழுத்துக் கொண்டு யூனியனின் சாப்பாட்டுக் கடையை நோக்கிப் போனாள்.

(தொடரும்) (யாவும் கற்பனை)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.