இந்தியா

இன்று கூடுகிறது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம்

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் டெல்லியில் இன்று திங்கட்கிழமை கூடவுள்ளது.

நாடாளுமன்ற வரவுசெலவுத் திட்ட கூட்டத்தொடர் இன்று முதல் ஒகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி நடைபெறும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் அதன் தலைவர் சோனியா காந்தி தலைமையில், டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று கூடுகிறது.

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் இடம்பெறுகிறது.

புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற இல்லத்தில் நேற்று காலை 11 மணியளவில் அனைத்து கட்சி கூட்டத்திற்கும் அழைப்பு விடப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மக்களவை துணை தலைவர் கவுரவ் கோகாய், மாநிலங்களவை துணை தலைவர் பிரமோத் திவாரி ஆகியோரும் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *