இந்தியா

கேதார்நாத் கோவில் வடிவத்தில் டெல்லியில் புதுக் கோவில் கட்ட எதிர்ப்பு

கேதார்நாத்தில் உள்ள சிவன் கோவிலைப் போன்று டெல்லியில் ஒரு கோவிலைக் கட்ட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ‘கேதார் சபா’ என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டு, டெல்லியில் கட்டவிருக்கும் கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் கேதார்நாத் சிவன் கோவில் முன் மடாதிபதிகளும் துறவிகளும் கடந்த சில நாள்களாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் கோவில் கட்டினால் கேதார்நாத்தில் உள்ள சிவன் கோவிலின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று கேதார் சபாவின் செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சுக்லா தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் கேதார்நாத்துக்கு வருகை தந்த பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் மாநில அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளைத் தெரிவித்துள்ளதாகவும் பங்கஜ் சுக்லா கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *