இலக்கியப் படைப்பாளியும் ஓவியருமான திரு.கிறிஸ்டி நல்லரத்தினம்! … ஏலையா க.முருகதாசன்.
அவுஸ்திரேலியாவில் வாழும் இலக்கியப் படைப்பாளியும் ஓவியருமான திரு.கிறிஸ்டி நல்லரத்தினம் அவர்களின் படத்தைத்தாங்கி அவரை அதிதியாக கௌரவித்து இலங்கை கொழும்பிலிருந்து வெளிவரும் ஞானம் சஞ்சிகை இதழ் 290ஐ வெளியிட்டிருக்கிறது.அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தில் எனது பலதரப்பட்ட ஆக்கங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அவற்றில் எனது சிறுகதைகளுக்கும் நடுகைக்காரி என்ற நாவலுக்கும் இப்பொழுது எழுதத் தொடங்கியுள்ள குறுநாவலான ஆகாயப் பந்தல் என்ற அறிவியல் புனைகதைக்கும் மனம் வியக்கும்படி ஓவியம் வரைந்;து வருகிறார்.
ஓவியக் கலையுடன் கற்பனையும் நவீன தொழில்நுட்பமான டிஜிட்டல் முறையினையும் கலந்து வரைவது ஓவியத்தில் ஒரு புதிய சுவையை ஏற்படுத்துகின்றது.ஆகாயப் பந்தல் நவீன கதைக்கு அவர் வரைந்துவரும் ஓவியம் நான் கதாபாத்திரங்கள் தோற்றத்தை எவ்வாறு கற்பனை கொண்டு எழுதினேனோ அவ்வாறே அவரும் வரைந்துவருவது எனக்கு மகிழ்ச்சியையும் வியப்பையும் தந்தது.
சிறந்த இலக்கியப் படைப்பாளியும் சிறந்த ஓவியருமான திரு.கிறிஸ்டி நல்லரத்தினம் அவர்கள் நிறைகுடம் தழும்பாது என்பதற்கும் உதாரணமாக இருக்கிறார். அவரை வாழ்த்தியும் பாராட்டியும் மகிழ்வதுடன் அவரைக் கௌரவித்த ஞானம் சஞ்சிகைக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதுடன்.தரமான இணையத்தளமாக உலகளவில் தமிழர் பரப்பெங்கும் வியாபித்து நிற்கும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் திரு.சதா பாஸ்கர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறேன். ….ஏலையா க.முருகதாசன்