கட்டுரைகள்

மலையக மக்கள் அரசியல் ரீதியாக விழிப்புணர்வு பெற வேண்டும்… இரா. சிவலிங்கம்

மலையக மக்கள் பெருந்தோட்டத் தொழிலுக்காகத் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 வருடங்களைக் கடந்த நிலையிலும் மலையக மக்களின் வாழ்க்கையில் இன்றும் ஒரு சில அடிப்படைப் பிரச்சினைகள் கூட தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மலையகப் பிரதேசத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளை பின்வருமாறு கோடிட்டுக்காட்டலாம். அடிப்படை சம்பளப் பிரச்சினை, சகலருக்கும் சொந்த நிலம் இல்லாப் பிரச்சினை, கானி உறுதியில்லாப் பிரச்சினை, லயத்து வாழ்க்கை முறை, அடிப்படை சுகாதாரப் பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறை, தூய குடி நீர் கிடைக்காமைää சிறுவர்களின் போசாக்குப் பிரச்சினை, இளைஞர், யுவதிகளுக்கான வேலையில்லாப் பிரச்சினை,சிறுவர்களின் பிரச்சினைகள், இளவயது திருமணம், சிறுவர் தொழிலாளர்கள்ää அறிவு வறுமை பிரச்சினை, அரசியல் ரீதியான விழிப்புணர்வு இன்மை, மாணவர்களின் இடைவிலகல், பாடசாலையில் சிற்றாழியர்கள் இல்லாமை, கணித, விஞ்ஞான ஆசிரியர்கள் போதாமை, பௌதிக வளங்கள்,மனித வளங்கள் பற்றாக்குறை, அதிகரித்த மது விற்பனையும, தேயிலைத் தோட்டங்களின் பராமரிப்பு குறைபாடுகள், தேயிலைத் தோட்டங்களில் வெளியார்களின் தலையீடுகள், அதிகரித்த மது பாவனையும், அடிப்படை உரிமை மீறல்கள், நிவாரணங்கள் போதியளவு கிடைக்காமை, தேயிலைத் தோட்டங்கள் குறைவடைந்து வருகின்றமை, தேயிலைத் தோட்டங்கள் காடாகுதல், தேயிலை மலைகளில் காணப்படும் பாதுகாப்பற்றப் பிரச்சினைகள் (குளவி கூடுகள், தேன் கூடுகள், பம்பரைக் கூடுகள், கதண்டு கூடுகள்,சிறுத்தைகளின் நடமாட்டம், அட்டைக் கடி, பாம்புகள் காணப்படுதல், தகாத காலநிலைகள், பாதுகாப்பற்ற உடைகள், பாதுகாப்பற்ற வேலைச்சூழல்), மற்றும் வேலைத்தளங்களில் பாதிக்ப்பட்டத் தொழிலாளர்களுக்கு காப்புறுதிகள் இன்மை, எவ்வித வகைக் கூறலும்,பொறுப்புக் கூறலும் இன்மை, தொழிற்சங்கப் பிரச்சினைகள், தொழிலாளர்களின் பிரச்சினைகள், அதிகரித்த மதுபாவனை, அதிகரித்து வரும் மதுபானசாலைகள், சுய தொழில் வாய்ப்பின்மை, தேயிலை, இறப்பர் தோட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் வெளியேறுதல், நுண்கடன் பிரச்சினைகள் போன்ற பல பிரச்சினைகளில் மலையகச் சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. என்பதை பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேற்கூறியப் பிரச்சினைகளுக்கு எல்லாம் அடிப்படைக் காரணம் மக்களின் கல்வியறிவும்ää அடிப்படை அரசியல் வழிப்புணர்வும் போதாமையாகும் என குறிப்பிடலாம். இம் மலையக மக்களுக்குத் தேவையான விடயங்களை அரசாங்கத்திடம் இருந்தும், தோட்டக் கம்பனிகளிடம் இருந்தும் பெற்றுக்கொள்ள வேண்டிய சலுகைகள், உரிமைகள், தொடர்பாக இதுவரைகாலமும் முறையான வழிகாட்டல் ஆலோசனைகளை இம்மக்களுக்கு போதியளவு வழங்கப்பட வில்லையென குறிப்பிடலாம். இதனை யார் தொடர்ச்சியாக வழங்குவது என்பதும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது.

இம்மக்களை ஒரு அடிமைச் சமூகமாக தொடர்ந்து நோக்கப்பட்டு வந்தாலும்ää இவர்களுக்கு சலுகைகள்ää கல்வி வாய்ப்புக்கள், அடிப்படை வசதிகள் போன்றவற்றைப் பெற்றுக் கொடுத்தால் சில தொழிற்சங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும்,கம்பனிகளுக்கும் எதிர்காலத்தில் தங்களுடைய தொழிற் சங்க, அரசியல் விடயங்களை தோட்டங்களில் தொடர்ச்சியாக கொண்டு நடத்துதல் போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்ற ஐயப்பாட்டாலும், அநேக விடயங்களில் காலம் காலமாக மலையக மக்களுடையப் பிரச்சினைகளை ஒரு சமூகப் பிரச்சினையாக யாரும் முன்னெடுக்க முயற்சிக்கவில்லை. அவ்வாறு காலத்துக்கு காலம் சிலர் முயற்சி செய்த போதும் அதனை பல்வேறு வழிகளில் அல்லது வடிவங்களில் மழுங்கடித்த வரலாறுகளும் மலையகத்தில் இல்லாமல் இல்லை. ஒரு கட்சி ஒரு நல்ல விடயத்தை செய்ய முயற்சிக்கும் போது அதற்கு ஏனையக் கட்சிகள் இடையூராக இருப்பதும், ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து பல நல்ல விடயங்களை செய்யும் பொது அதற்கு ஒன்று, இரண்டு கட்சிகள் இடையூராக இருப்பதும் மலையகத்துக்கேயுரிய சாபக்கேடாக இருக்கின்றது.

மலையக மக்கள் கல்விக் கற்க வேண்டும், சுயமாக சிந்திக்க வேண்டும். நான்கு பரம்பரையாக லயத்து காம்பிராக்களில் எவ்வித அடிப்படை வசதிகளும், விமோசனமும் இன்றி வாழுகின்ற இவர்களுக்கு அரசியல் ரீதியான வழிகாட்டல் ஆலோசனைகளை செய்வது யார்? மலையக மக்களுக்கு பல்வேறு போராட்டங்களின் பின்னர் கிடைத்த வாக்குரிமையை மிகச் சரியாகவும், தீர்க்கதரிசனமாகவும், தூரநோக்கத்துடனும், மலையக மக்களினதும், தமிழ் மக்களினதும் நலன் கருதி பயன்படுத்த வேண்டும் என்பதை மிகத் தெளிவாக இம்மக்களுக்கு எடுத்து சொல்லுவதன் மூலமாக இம்மக்களின் வாக்குரிமையை எதிர்வரும் தேர்தலில் மலையக மக்களின் வாக்குகள் சிதறடிக்காமல் சமூகம் நோக்கம் கருதி மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. அந்த எதிர்கால சவால்களுக்காக இப்போதே காத்திரமான திட்டங்களையும், முன்மொழிவுகளையும், பரப்புரைகளையும் மக்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும். அதற்காக மக்களை தயார்படுத்த வேண்டும்.

மலையக மக்கள் எப்போது அரசியல் ரீதியாக சிந்திக்கின்றார்களோ அன்றுதான் மலையக மக்களுக்கு விமோசனம் கிடைக்கும். அற்ப சலுகைகளுக்கும், மதுவிற்கும், ஏனைய சலுகைகளுக்கும் விலைபோகின்றமோ அன்றே இச் சமூகம் இன்னும் படுபாதாளத்திற்கு செல்லும் எனபது போகப் போகத் தெரியும். அத்துடன் அதற்கு காலமும் பதில் சொல்லும். ஆகவே தங்களுடைய வாக்குரிமையை ஒரு கட்சிக்கோ, அல்லது தொழிற்சங்கத்திற்கோ, தனி நபர்களுக்கோ பயன்படுத்தம் போது பல்வேறு விடயங்களை எதிர்கால சமூக நோக்கம் கருதி தங்களுடைய வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும். எது எவ்வாறாயினும் மலையகத் தமிழ் பிரதிநிதித்துவத்தை மலையக மக்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் எந்த தொழிற்சங்கத்தில் இருக்கின்றோம் என்பது முக்கியம்மல்ல, அந்த தொழிற்சங்கத்தில் எமது சமூகத்திற்கு கிடைக்கப் போகும் நன்மைகள்,என்பது பற்றி சிந்திக்க வேண்டும். தொழிற்சங்கங்களிலும் அனைத்து விடயங்களும் சரியாகவும், முறையாகவும்ää ஒழுங்காகவும் இருக்காது. அதே வேளை பிழையாகவும் இருக்காது ஆனால் சரியான விடயங்களை தெளிவாகப் புரிந்து கொண்டு கட்சிக் கொள்கைகளையும், தொழிற் சங்க கொள்கைகளையும் சரியாக சீர்தூக்கிப் பார்த்து மலையகச் சமூகத்திற்கு பொருத்தமான வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

மலையக மக்களும்,தமிழ் மக்களும் வாக்களிக்கும் போது எமது இனம், சமூகம், மொழி, கலாசாரம்,பண்பாடு, விழுமியங்கள், இனத்துவ அடையாளங்கள், சமூக மாற்றம், பிரதேசம், எமது அரசியல் எதிர்காலம், மக்களுக்கு சேவைகள் செய்த,சேவைகள் செய்கின்ற தொழிற்சங்கங்கள், கட்சிகள், தனி நபர்கள், பிரதேச சபை, மாகாண சபை, பாராளுமன்றத்தின் ஊடாக எமது மக்களுக்கு கடந்த காலத்தில் செய்த விடயங்களை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். யாரைத் தெரிவுச் செய்வதன் மூலம் ஒரு சமூகம் தன்னுடைய அரசியல் அபிலாசைகளையும்ää அரசியல் உரிமைகளையும், சலுகைகளையும் பெற்றுக்கொள்ளலாம் என சிந்தித்து வாக்களிக்க வேண்டும். சாணக்கியமான அரசியலை யார் காலத்துக்கு ஏற்ப செய்கின்றார்களோ,அவர்கள் பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் அரசுடன் பேரம் பேசும் சக்தியை பெறுவதுடன், மலையக மக்களுக்கு சேவை செய்யக் கூடிய அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்வதன் ஊடாக, எமது மக்களின் பிரச்சினைகளை ஓரளவாவது பூர்த்திச் செய்ய முடியும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

வெறுமனே வேட்பாளர்களின் வீர வசனங்களுக்கும், வாக்குறுதிகளுக்கும்ää சாதி சங்கங்களுக்கும், கௌரவத்திற்கும், கெடிபிடிகளுக்கும், சன்டித்தனங்களுக்கும்ää செல்வாக்குகளுக்கும் வாக்களிக்க கூடாது. மக்கள் தன்னுடைய சமூகத்தின் எதிர்காலம் கருதி பொருத்தமானவர்களைப் பொருத்தமாகத் தெரிவுச் செய்ய வேண்டும். வாக்குரிமை என்பது பொருத்தமானவர்களைத் தெரிவு செய்வதற்கும், பொருத்தமற்றவர்களைத் தெரிவு செய்யாமல் விடுவதற்கும் பயன்படுத்தக் கூடிய ஒன்றாகும். எனவே மலையக மக்கள் எதிர்காலத்தில் சுயமாகச் சிந்தித்து தொழிற்சங்கங்களின் தேர்தல் கொள்கைகளையும்,தேர்தல் விஞ்ஞாபனங்களையும் சீர்தூக்கிப் பார்த்து தங்களுடைய வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும்.

எனவே வாக்குரிமையை பயன்படுத்தும் மக்கள் தங்களுடைய எதிர்காலம், பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள், வாழும் உரிமை,சமூகப் பாதுகாப்பு, இளைஞர் யுவதிகளின் பாதுகாப்பு, இனங்களின் பாதுகாப்பு, மலையக சமூகத்தின் இருப்பு, வாழ்க்கையில் நிச்சயத் தன்மை, மக்களின் சுய கௌரவம், சுய மரியாதை, சுய நிர்ணய உரிமை, போன்றவற்றை சிந்தித்து வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.
பாராளுமன்றத்திற்குத் தெரிவுச் செய்யப்படும் பிரதிநிதிகள் அவர்களுடைய அரசியல், தொழிற்சங்க அனுபவங்கள், மலையக மக்களுக்கு செய்த சேவைகள், இதுவரையும் மக்களுக்குப் பெற்றுக்கொடுத்த வெற்றிகள்,சலுகைகள், உரிமைகள் போன்றவற்றை மிக காத்திரமாக சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மலையக மக்களுடைய அரசியல் பலத்தை அரசிற்கு காட்டுவதன் மூலம் அரசியல் வரலாற்றில் மலையக மக்களுக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். இதன் மூலமாக அரசுக்கு பல அழுத்தங்களையும், நிர்ப்பந்தங்களையும் கொடுப்பதன் மூலம் சில பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளைப் பெற்றக்கொள்ள முடியும் என்பது மட்டும் உண்மையாகும். சாணக்கியமான அரசியல் தந்திர உபாயங்களே சிறுபான்மையினருக்கு மிகப் பொருத்தமாக இருக்கும் என்பது பலரது கருத்தாகும்.

ஆளும் கட்சிகளுடன் சேர்ந்து பயணிக்கும் போது எமது மக்களுக்கு பல அரசியல் ரீதியான சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது தொழிற்சங்கங்கள்ää தனிநபர்கள் தாங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கும், வெற்றிபெறுவதற்கும் எந்த வகையான எதிர்கால திட்டங்களை மக்களுக்கு முன் வைத்துள்ளார்கள், நாங்கள் தேர்தலில் பங்குபற்றுவதற்கான நோக்கத்தை மிகத் தெளிவாக மக்களுக்குச் சொல்ல வேண்டும். தங்களுடைய ஐந்து வருட வேலைத்திட்டங்களை ஒரு முன்மொழிவாக மக்கள் முன் எடுத்துச் செல்ல வேண்டும். கடந்த காலத்தில் தங்களால் (கட்சிகள், தொழிற்சங்கங்கள்) விட்டத் தவறுகளை அனுபவமாகக் கொள்ள வேண்டும். தாங்கள் எதிர்காலத்தில் மக்களுக்காக செய்யவிருக்கின்ற வேலைத்திட்டங்களை தூர நோக்கத்தோடு நடைமுறைச்சாத்தியமானதான விடயங்களை மக்கள் முன் வைக்கவேண்டும். மலையக மக்களின் கல்வி அபிவிருத்தி, சுகாதாரம், சௌக்கியம், தேயிலைத் தோட்டங்களில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமைகள், சம்பள போராட்டம், வீடமைப்பு,உட்கட்டமைப்பு வசதிகள், சுய வேலைவாய்ப்பு, உயர் கல்வி வாய்ப்புக்கள், (மலையகப் பல்கலைக்கழகம்) பிரதேச ரீதியான அபிவிருத்தி, தோட்டங்களை கிராமங்களாக ஆக்குதல், கிராம அபிவிருத்தி திட்டம், பெண்கள் தொடர்பான பிரச்சினைகள், மது ஒழிப்பு, சுய தொழில் வாய்ப்பு, அரச நிவாரணங்கள், மலையகத்தின் 10 ஆண்டு வேலைத்திட்டம்,பிரதேச செயலகங்கள், தேசிய சுகாதார சேவையுடன் தோட்டச் சுகாதார சேவையை இணைத்தல், பெருந்தோட்ட அதிகார சபை போன்ற பல்வேறு விடயங்களுக்கும் தனித்தனியாக முன்மொழிவுகளை முன் வைக்க வேண்டும்.

மலையக வேட்பாளர்கள் மலையகத்தில் இருக்கின்ற புத்தி ஜீவிகள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், வர்த்தகர்கள்,தொழிலாளர்கள், இளைஞர் யுவதிகள், பெண்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்வேறு நலன்புரிச் சங்கங்கள், சமூக ஆர்வலர்கள், ஆட்டோ சங்கத்தினர்கள், சாரதி சங்கத்தினர்கள், குருமார் சங்கத்தினர்கள், க.பொ.த உயர் தர மாணவர்கள், அரச உத்தியோஸ்தர்கள், சமூக நலன் விரும்பிகள், விளையாட்டு கழகங்கள், மன்றங்கள்,கட்கியில் இருந்து விலகி இருப்பவர்கள்ää விரக்தியுற்று இருப்பவர்கள்,கட்சியின் ஆரம்பகால அனுபவசாலிகள், கட்சிக்காகத் தொண்டு செய்தவர்கள், விளையாட்டு வீரர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள்,ஏனைய விரிவுரையாளர்கள், மலையகத்திலிருந்து சென்று உயர் பதவியில் இருக்கின்ற அதிகாரிகள், ஆலயங்கள், கோவில்கள், மத ஸ்தாபனங்கள்,முதியோர்கள் போன்றவர்கள் இணைத்துக் கொண்டு அவர்களுடைய ஆலோசனை வழிகாட்டலுடன் இந்த தேர்தல் களத்தை சந்திக்க வேண்டும்.

வெறுமனே ஒருவரை ஒருவர் குறை கூறாமல், தவறுகளை காத்திரமாகவும், மனித பண்புகளுடனும் எடுத்துக் கூறி மக்களின் நலன்களுக்காக தங்களுடைய வாக்குவாதங்களை மிக நாகரிகமாகவும், காத்திரமாகவும் முன் வைக்க வேண்டும். மக்கள் மனங்களில் இடம் பிடிப்பதற்காகவும், மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதன் மூலமும் இத் தேர்தலில் பலர் வெற்றிப் பெறுவதற்கு சாத்தியப்பாடுகள் அதிகம் உள்ளன. வாக்குகளை சிதரடிக்காமல் மக்களுக்கு வாக்களிக்கும் முறை பற்றி பல்வேறு வகையில் விளங்கப்படுத்தி வாக்களிக்கச் செய்ய வேண்டும். மலையகத்தின் பிரதிநிதித்துவத்தை தங்களுடைய சொந்த நலன்களுக்காகவோ, அபிலாசைகளுக்காகவோ விட்டுக்கொடுக்க கூடாது. ஒவ்வொரு தொழிற்சங்கங்களையும் சய விமர்சனம் செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். தங்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

மலையகத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் தங்களை சரியாகவும், முறையாகவும் தயார்படுத்திக் கொள்வதன் மூலம் எதிர்வரும் காலங்களில் நடைபெறப் போகின்றத் இத் தேர்தலில் வெற்றிப்பெறக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இதற்கு மக்களிடம் அணுகும் முறைகளும், தேர்தலில் ஒருவர் பயன்படுத்தும் தந்திர உபாயங்களிலுமே தங்கியிருக்கின்றன என்பதை ஒவ்வொரு வேட்பாளரும, கட்சியின் தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். மலையக மக்கள் தற்போது அரசியல் விழிப்புணர்வை பெறுவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகமாக சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், முக நூல் மூலமாகவும், தொலைத் தொடர்பு சாதனங்கள் ஊடாகவும், தொலைக்காட்சி வானொலி நிகழ்ச்சிகளையும் பார்க்கும் போதும்ää தினசரி பத்திரிகைகளைப் பார்க்கும் போதும், யூடிப் செனல்களைப் பார்க்கும் போதும் தெரிய வருகின்றது. எனவே மக்களை ஏமாற்றியோ, பொய் வாக்குறுதிகளை கொடுத்தோ எதிர்வருகின்ற தேர்தலில் வெற்றிப் பெறுவது கடினம் என்பதை உணர்ந்து கொண்டு கடந்த காலத் தவறுகளை திருத்திக் கொண்டு மக்களிடம் செல்வதே புத்திசாலித்தனமாகவும் காலத்துக்குப் பொருத்தமானதாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.