பெருந்தோட்டத் தொழிலாளர்களும் மாதாந்த வாழ்க்கைச் செலவும்….. இரா. சிவலிங்கம்
இலங்கையில் மலையக மக்கள் குடியேறி சுமார் 200 வருடங்கள் கடந்துவிட்டன. இன்று வரையும் இவர்களுடைய வாழ்க்கையானது பல்வேறு சமூகப் பொருளாதார, அரசியல் காரணிகளில் பின்னடைந்தே வந்துள்ளது. இலங்கையில் வாழும் ஏனையச் சமூகங்களோடு ஒப்பிடும் போது, பல விடயங்களில் முன்னேற்றம், வளர்ச்சி, மேம்பாடு, அபிவிருத்தி என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. அரச வேலைவாய்ப்பு, வீடமைப்பு, போக்குவருத்து வசதிகள் அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகளின் வளர்ச்சி, கல்வி அபிவிருத்தி, சுய தொழில் வாய்ப்புக்கள், தோட்டத் தொழிலாளர்களின் மாதாந்த வருமானம், அடிப்படை வசதிகளின் முன்னேற்றம், தொழில் உரிமை, தொழில் பாதுகாப்பு, தொழில் அந்தஸ்து, தொழில் கௌரவம், தொழிலுக்கான வேதனம்,போசாக்கு, சௌக்கியம், சுத்தமாகன் குடிநீர் போன்ற அனைத்துமே இன்றுவரையும் முன்னேற்றமடையாமல் ஒரு தேக்க நிலையிலேயே காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் இன்றையப் பொருளாதாரமானது பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இருக்கின்றது என்பது உலகம் அறிந்த விடயமாகும். இலங்கையின் பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதை அன்றாடச் செய்திகளில் அவதானிக்கலாம். இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இப்பொருளாதாரப் பின்னடைவினால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது மத்தியதர வகுப்பினரும், ஏழை மக்களும், தொழிலாளர் வர்க்கமும் தான் என்பதை புரிந்தவர்களுக்குப் புரியும்.
குறிப்பாக இன்றை அத்தியாவசிய மற்றும் ஏனைய பொருள்களின்,சேவைகளின் விலை உயர்வினால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது. மலையகத்திலுள்ள தோட்டத் தொழிலாளர்களே என்றால் அது மிகையாகாது. இன்று பெருந்தோட்டங்களில் குறிப்பாகத் தேயிலை, இறப்பர் தோட்டங்களைப் பெருந்தோட்டக் கம்பனிகள் பசளைகள் பாவனையைக் குறைத்துள்ளது. கிருமிநாசினி, களைநாசினி தெளிப்பது மிகவும் குறைவு, தோட்டங்களை முறையாகவும்ää நேர்த்தியாகவும் பராமரிப்பது குறைவு போன்ற பல்வேறுப் பிரச்சனைகளுக்கு மத்தியில் தோட்டங்கள் இயங்குகின்றன. பல தோட்டங்கள் காடாக காட்சியளிக்கின்றன. தோட்டத் தொழிலாளர்களுக்கு தோட்டத்தில் மாதாந்தம் வழங்கப்படும் நாள் வேலையும் குறைந்துள்ளது. இதனால் நாட் சம்பளமும் குறைந்துள்ளது. ஒரு நாளைக்கு 20 கிலோ கிராம் கொழுந்தைச் சராசரியாக ஒரு தொழிலாளி எடுக்க வேண்டும். அப்படி எடுக்காத நாட்களில் எடுத்தக் கொழுந்துக்கானக் காசு வழங்கப்படுகிறது. சராசரியாக 20 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது. சில தோட்டங்களில் 20 நாட்களுக்கும் குறைந்த நாட்களே வேலை வழங்கப்படுவதாக தொழிலாளர்கள் அங்கலாகிக்கின்றனர்.
ஒரு தோட்டத் தொழிலாளியின் குடும்பத்தில் சராசரியாகää ஐந்து பேர் உள்ள குடும்பத்திற்கு ஒரு நாளைக்கானச் சராசரி உணவுச் செவானது ரூபா 1500.00 – 2000.00 வரை செலவாகிறது. எனின் மாதாந்தம் ஒரு குடும்பத்திற்கு உணவுச் செலவுக்காக ரூபா 45000.00 – 60000.00 செலவாகின்றது. தோட்டத்தில் கொடுக்கும் முழு நாட்களுக்கும் வேலைக்குச் சென்றாலும். 20 – 22 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு ரூபா 1000.00 வீதம் வைத்தாலும். ஒரு தொழிலாளிக்கு 22000.00 ரூபாய் சம்பளம் கிடைக்கும். ஒரு குடும்பத்தில் இருவர் வேலை செய்தால் ரூபா 44000.00 கிடைக்கும். எனவே மிகுதியான துண்டுவிழும் தொகையானது மாதாந்தம் கடனாகவே பெறப்படுகிறது.
இந்த மாதாந்தக் கடனானது இவர்கள் வாழ்க்கை முழுவதும் கடனாளியாக வாழ்வதற்கு காணமாகின்றது. இவர்களின் மாதாந்த வருமானமானது மனிதனின் அடிப்படையான உணவுச் செலவுக்கே சரியாகப் போய்விடுகிறது.
இவர்களுடைய மாதாந்த வருமானத்திலேயே பிள்ளைகளின் கல்விச் செலவு, மருத்துவச் செலவு, உடைகள்,மனித வாழ்க்கைக்குத் தேவையான ஏனைய பொருள்களை வாங்குதல், போக்குவரத்துச் செலவு, விழாக்கள், பண்டிகைகள், திருமணச் சடங்குகள் செலவு, பிறந்த நாள் விழாக்கள், கோயில் திருவிழா, விழாக்கள், வீடுகளுக்கு வரும் விருந்தினர்களைக் கவனித்தல் போன்ற அனைத்து விடயங்களும் செய்ய வேண்டிய இக்கட்டானச் சூழ்நிலையில் வாழ்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு தோட்டத் தொழிலாளி வாங்குகின்ற மாதாந்த கடனைக் கட்டுவதற்காக பெருந்தொகையான நுண் கடன்களை பல நிறுவனங்களிடமும், தனி நபர்களிடமும் அதிக வட்டிக்கு வாங்குவதால் வாழ்க்கை முழுவதும் கடனிலேயே பிறந்து கடனினிலேயே வாழ்கின்றார்கள். பெருந்தோட்டங்களில் நுண் கடன் வழங்கும் நிகழ்வானது சர்வசாதாரனமாக நடைபெறுகின்றது. இந்த கடனைக் கட்ட முடியாமல் மேலும்,மேலும் கடன் வாங்கி கடன் கட்டுபவர்களும் இருக்கின்றார்கள்.
நாளாந்தம் இவர்களது உணவானது கோதுமை ரொட்யாகவே பெரும்பாலும் உள்ளது. இன்று கோதுமை மாவின் விலையும் கிலோகிராம் ஒன்றுக்கு 150.00 ரூபாக இருக்கின்றது. மண்ணெண்ணை விலையும் அதிகரித்துள்ளது. மறக்கறிகளின் விலை, அரிசி விலை, பால்மா விலை, கேஸ் விலை, ஏனைய உணவுப் பொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டாலும். தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. இதனால் இவர்களின் வறுமை நிலையானது மெலும் வறுமை நிலைக்கே தள்ளப்படுகிறது.
கடந்த காலங்களில் ரூபா 750.00 சம்பளமாக ஒரு நாளைக்கு வழங்கியபோது, தோட்டங்களில் சில குறிப்பிட்ட நாட்களுக்கு வேலை வழங்கியதாகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்றறை நாள் பெயர் வழங்கியதாகவும் இன்று பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை வழங்கப்படுவது இல்லையென்றும் தொழிலாளர்களால் குறைக்கூறப்படுகிறது. ரூபா, 1000.00 சம்பளம் கிடைக்கும் என ஒப்பந்தங்களில் சொல்லப்பட்டாலும். இன்று தோட்டத் தொழிலாளர்களுக்கு இச் சம்பளத்தை முழுமையாகப் பெறுவதற்கு தோட்டக் கம்பனிகள் பல்வேறு நிபந்தனைகளையும், சட்டத்திட்டங்களையும் முன் வைக்கின்றது. இதனால் வருமானம் பற்றாக்குறையால் அன்றாட உணவுக்கே மக்கள் அதிகம் கஸ்டப்படுவதைப் பார்க்கும் போது வேதனையாக உள்ளது.
தொழிலாளர்களின் அன்றாட உணவு என்பது சாதாரண உணவாககே; காணப்படுகிறது. அதாவது உடலுக்குத் தேவையானக் கலோரிகளோ, ஊட்டச் சத்துக்களோ, போசாக்கானதாகவோ, ஆரோக்கியமானதாகவோ இல்லை. கோதுமை ரொட்டி, அரிசிச் சோறு, மறக்கறி என அமைந்துள்ளது. கோழி, மீன், இறைச்சி, பால, முட்டைகள் என்பன மிகவும் குறைவாகவே உணவு வேளைகளில் சேர்க்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் போசாக்கற்றும், தொழிலாளர்கள் உடல் சக்தி குறைந்து அடிக்கடி நோய்வாய்ப்படும் தன்மையும் அதிகரித்தே உள்ளது. உழைப்புக்கேற்ற உடல் சக்தியும் இம்மக்களுக்கு கிடைக்க வில்லை. உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடைக்காத அப்பாவி மக்களாக இவர்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள்.
தோட்டத் தொழிலாளர்கள் இன்றைய வாழ்க்கைச’ செலவை சமாளிப்பதற்கும் மேலதிக வருமானத்திற்காகவும் மற்க்கறித் தோட்டங்கள் செய்வதென்றாலும் இன்று பசளைகள் இல்லலை. கிருமி நாசினிகள் இல்லை. தாவர உரப் பசளை இல்லை. இதனால் தோட்டங்கள் எல்லாம் வெற்று நிலமாக மறக்கறிச் செய்யப்படாமல் இருப்பதை அவதானிக்கலாம். செலவுச் செய்து மறக்கறிகள் செய்தர்லும் காலநிலை மாற்றங்கள் மற்றும் விலையில் ஏற்படும் மாற்றங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் மேம்மபாடு ஏற்படுவதற்கும்ää இம்மக்களுடைய அன்றாட வாழ்க்கைச் செலவைச் சமாளிப்பதற்கும் அரசாங்கமானதுää கோதுமை மா மற்றும், ஏனைய அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகளைக் குறைக்க வேண்டும். அல்லது இம்மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் உணவுக்கான மானியங்களை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்வரும் காலங்களில் 1972 ஆண்டு காலப்பகுதியில் போல் மக்கள் பசி பட்டினியில் இறக்க நேரிடலாம். இன்னுமொரு உணவுப் பஞ்சத்தை மக்கள் எதிர்நோக்கலாம். அதனால் எதிர்காலத்தில் இவர்களுக்கான மேலதிக வருமானத்தைப் பெற்றுக் கொடுக்கும் வழிமுறைகளை சம்மந்தப்பட்டவர்கள் அறிமுகப்படுத்த வேண்டும். இதனை உடனடியாகச் செய்யாவிட்டால் மக்களின் எதிர்காலம் கௌ;விக்குறியாகி விடும் என்பதில் ஐயமில்லை.
தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்குத் தோட்டங்கள் தோறும் இளைஞர், யுவதிகளுக்கான சுயத்தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். மறக்கறிச் செய்கையை ஊக்குவிப்பதற்கு வங்கிக் கடன்கனைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும். சிறு கைத்தொழில் முயற்சிகளைத் தோட்டங்கள் தோறும் உருவாக்க வேண்டும். பெண்களுக்கான சுயத்தொழில் வாய்ப்புக்களைத் தோட்டங்களில் உஐவாக்க வேண்டும். தோட்டங்கள் தோறும் அண்மையில் நகரப்புறங்களில் உருவாக்கப்பட்ட எலபோஜன நிகழ்ச்சித் திட்டங்களைத் தோட்டங்களை அண்டியப் பகுதிகளில் உருவாக்க முடியுமா என முன்மொழிவுகளை தயாரித்துக் கொடுக்கலாம்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தங்களுடைய வருமானத்தில் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதுடன் வாழ்க்கையைத் திட்டமிட்டுச் செயற்படுத்துவதற்கும் முயற்சிக்க வேண்டும். பெருந்தோட்டங்களில் உள்ள தரிசு நிலங்களை மலையக மக்களுக்கு ஒரு அரை ஏக்கராவது பிரித்துக் கொடுக்க வேண்டும். புதிய புதிய வேலைத்திட்டங்கள் மலையகப் பெரந்தோட்டப் பிரதேசங்களில் அறிமுகப்படுத்த வேண்டும். இந்திய அரசாங்கத்துடன் கதைத்து ஆட்டோ ரிக்ஷாக்களை இலகு விலையில் இறக்குமதி செய்து இளைஞர்களுக்குக் கொடுக்க வேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வங்கிக் கடன்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
பெருந்தோட்டப் பிரதேசங்களில் பாலர் சேவைகள், கேக் போடுதல், மாலைக்கட்டுதல், இளைஞர்களுக்கு ஹோட்டல் முகாமைத்துவம், ஆட்டோ திருத்தம், கனனி பயிற்சிகள், வேல்டிங் தொழில் பயிற்சி, மேசன் தொழில் பயிற்சி, தச்சன் தொழில் போன்றவற்றைப் பெருந்தோட்டப் பிரதேசங்களில் அறிமுகப்படுத்த வேண்டும்.
இரா. சிவலிங்கம்