கட்டுரைகள்

இன்றைய இளைஞர்களும் நாளைய சமுதாயமும்…. இரா. சிவலிங்கம்

தேசபந்து இரா. சிவலிங்கம். J.P. (W.IS)

“இன்றைய இளைஞர்கள் நாளையத் தலைவர்கள்” என்ற கூற்றுப்படி இளைஞர் சமூகமே ஒரு தேசத்தின் வளர்ச்சியில் அதிகப் பங்கை வகிக்கக் கூடியவர்கள். இளைஞர்களின் நிகழ்கால நடவடிக்கைகளே ஒரு குடும்பத்தின், சமூகத்தின், கிராமத்தின், தோட்டத்தின,  நகரத்தின், தேசத்தின் முன்னேற்றத்ல் அதிக பங்களிப்பைச் செய்கிறது. இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் தன்னுடையக் கல்வியை இடைநடுவே விட்டவர்களும் இருக்கின்றனர், தொடர்ந்து கொண்டு இருப்பவர்களும் இருக்கின்றனர். சிலர் க. பொ. த சாதாரணத்தரம், உயர் தரம் பட்டப்படிப்பை படித்து விட்டு வேலையற்றும் உள்ளார்கள்.

குறிப்பாக இவர்களில் பாடசாலையை விட்டு இடைநடுவில் விலகிய மாணவர்கள் பட்டாளம்ää குறிப்பிடடடளவு சித்தியடையாதவர்களை விட அதிகமாக உள்ளதைக் காணலாம். இவ்வாறானவர்களும் எமது சமூகத்தில் உறுப்பினர்களே. குடும்ப வறுமை,வீட்டு வசதியின்மை, படிப்பதில் அக்கறை இன்மை, தொழில் இல்லை, தொடர்ந்து படிப்பதற்கு வாய்ப்பில்லைää அல்லது தொடர்ந்து படிக்கவில்லை ஏதோ பல காரணங்களுக்காக படிப்பைத் தொடராத அனைவருக்கும் இன்று ஒரு சமூகப் பிரச்சினையாகத் தொழில்வாய்ப்பின்மை காணப்படுகின்றது. அனைவருக்கும் உயர் தொழில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை நியாயமானதே. ஆனால் இந்த வாய்ப்பு எத்தனைப் பேருக்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம். வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆக வேண்டும். எனவே இளைஞர்களும் தன்னுடைய வாழ்க்கையை செவ்வனே அமைத்துக்கொள்வதற்கு தனக்கொரு வாய்ப்பானத் தொழில் கிடைக்கவில்லையே என்ற அங்கலாய்ப்பைää கவலையை விட்டு விட்டு தமது பிரதேசத்தில் அல்லது தன்னுடைய வீட்டுச்சூழலில் செய்யக்கூடிய ஒரு சுயதொழிலை செய்வதற்கு முன்வர வேண்டும்.

 

சுய தொழில் வாய்ப்புக்களை யாரும் சொல்லித்தர வேண்டியது இல்லை. தன்னுடைய தகுதிக்கும், வசதிக்கும் ஏற்ப தொழில்களை ஆரம்பிக்கலாம். உதாரணமாக இன்று ஒரு சுய தொழில் வாய்ப்புக்களைப் பெறுவதற்காக அநேக நிறுவனங்களில் தொழில் பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டள்ளன. இதில் சேர்ந்து பயிற்சிகளைப் பெற்றுத் தேர்ச்pயடைய வேண்டும். தொழில் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து தொழில் பயிற்சியைப் பெற்று சான்றிதலைப் பெற வேண்டும். இந்தச் சான்றிதழைப் பெற்றவர்களுக்கு உள்நாட்டிலும், நெளி நாடுகளிலும் அதிக வேலைவாய்ப்பு காணப்படுகின்றன. தேசியப் பரீட்சைகளில் சித்தியடையத் தவறிய மாணவர்கள் இ;ந்தத் தொழில் பயிற்றசி நிலையங்களுக்கு விண்ணப்பித்து தனக்கு முடிந்த பிரிவில் பயிற்சிப் பெறலாம். கணினி,ஹோட்டல் முகாமைத்துவம், வேல்டிங், மோட்டர் மெகனிக், தச்சத் தொழில், டிசைனிங், முகாமைத்துவ உதவியாளர் போன்ற பிரிவுகளில் சேரலாம். அத்துடன் சில்பா லோக்க வேலைத்திட்டத்தின் கீழ் காணப்படும் 21 பாட நெறிகளைத் தொடரலாம்.

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் இளைஞர்கள் எதிர்காலத்தில் வேலை உலகத்திற்குத் அவசியமான கற்கை நெறிகளைத் தெரிவு செய்து கற்ற வேண்டும். இன்று எத்தனையோ நாடுகளில் ஒன் லைனில் வேலை கிடைக்கின்றது. வீட்டில் இருந்து கொண்டே இவ்வாறான வேலைகளைச் செய்யலாம். செல்போனை வைத்தே இன்று அநேக இளைஞர்கள் தங்களுடைய வருமானத்தை யு டியுப் மூலம் தேடுகின்றார்கள். ஒன்லைன் வகுப்புக்கள் செய்கின்றார்கள். ஒன்லைன் மூலம் எத்தனையோ விடயங்களை செய்வதைக் காணலாம்.

இளைஞர்கள் சிலர் இன்று வாழ வேண்டிய வயதில், வேலை செய்ய வேண்டிய வயதில், குடும்பத்தை, தன்னுடைய தாய் தந்தையை, தேசத்தைக் காப்பாற்ற வேண்டிய வயதில் மதுவிற்கும், போதை வஸ்த்துக்கும், தவறான விடயங்களிலும் கொலை, களவு, வஞ்சகம், சூது, ஏமாற்று வித்தைகள்,  இளவயது திருமணம்ää காதல் லீலைகள்ää நெறி பிறழ்வான நடத்தைகள், தற்கொலை முயற்சிகள்,  விவாகரத்து,  கோஸ்டி சண்டைகள்ää வாள்வெட்டுக் கலாசாரம் மோதல்கள் போன்றவற்றில் ஈடுபட்டு தன்னுடைய வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதை தினமும் பார்க்கலாம். இன்றைய ஒரு சில இளைஞர்களின் பொறுப்பற்றத் தன்மைää பொறுப்புக் கூறல்ää வகைக் கூறல், சமூகப் பொறுப்பு, குடும்பப் பொறுப்பு போன்றவற்றிலிருந்து விலகி ஏனோ தானோ என வாழ்வதை அவதானிக்கலாம்.
எந்த ஒரு வேலையையும் விருப்பமாகவும், ஆர்வமாகவும், நேர்மையுடனும், நம்பிக்கையுடனும், பொறுப்புடனும், விசுவாசத்துடனும் செய்வதற்கு முயற்சிப்பது குறைவு. ஒரு வேலையில் சேர்ந்த உடனேயே அதிக சம்பளம் கிடைக்க வேண்டும். அதிக ஒய்வும், விடுமறையும் கிடைக்க வேண்டும். கஸ்டமான வேலையாக இருக்கக் கூடாது. தாங்கள் நினைத்த மாதிரியான வேலை அமைய வேண்டும். சுதந்திரமான வேலையாக இருக்க வேண்டும். வேலைத்தளத்தில் சகலதும் இவர்கள் நினைத்த மாதிரி கிடைக்க வேண்டும். குறிப்பாக செல்போன் பயன்படுத்த வேண்டும்.

வேலை நேரம் குறைவாக இருக்க வேண்டும். தொடர்ந்து ஒரு வேலையில் திருப்தியடைவது குறைவு, அடிக்கடி வேலைகளை மாற்றுதல். நிரந்தரமாக தொடர்ந்து ஒரு வேலையைப் பழகாமல் இருத்தல். வேலையை செய்வதற்கு ஆர்வம் இன்மை. கிடைக்கின்ற சம்பளத்தை சினிமா, செல்போன், உடைகள், விளையாட்டுக்கள்ää ஆடம்பர செலவுகள் என வீண் செலவு செய்தல்.

ஆரம்பக் காலங்களில் வீடுகளில் தன்னுடைய குலத் தொழிலையே பரம்பரை பரம்பரையாகச் செய்து வந்தார்கள். அத்துடன் கிராமங்களில் அதிகமானத் தொழில் வாய்ப்புக்கள் இருந்தன. குறிப்பாக விவசாயம்,கால்நடை வளர்ப்பு, மேசன் தொழில், தச்சுத் தொழில், இரும்பு தொழில், கோழி வளர்ப்பு, தையல், உடைகளட தை;தல், சிறு கடைகளை நடாத்துதல், உணவு பண்டங்களைத் தயாரித்து விற்றல். மருத்துவம், சமயம் தொடர்பான வேலைகளை குடும்பத்தில் உள்ளவர்கள் செய்து வந்தனர் இதனால் இளைஞர்களுக்கு வேலையில்லாப் பிரச்சினைகள் இருக்கவில்லை. ஆனால் தற்போதைய காலத்தில் யாரும் குடும்பத் தொழிலைச் செய்வதற்கு விரும்புவதும் இல்லை. முன்வருவதும் இல்லை. இதனால் குடும்ப வருமானம் குறைந்ததுடன்,வேலைவாய்ப்பும் குறைந்தது. அனைவரும் வெள்ளை நிற உடைத் தொழில்களை செய்வதற்காக தன்னுடைய கிராமங்களில் இருந்து நகரத்தை நோக்கிப் படையெடுப்பதால் இன்று நகரத்தில் பல்வேறு வகையான பிரச்சனைகளை இன்றைய இளைஞர்கள் எதிர்நோக்குவதை அவதானிக்கலாம்.

மாணவர்கள் பாடசாலைக் காலத்தை முழுமையாகவும், சிறப்பாகவும், முறையாகவும், பொறுப்பாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாலர் வகுப்புத் தொடக்கம் பல்கலைக்கழகம் வரையும் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. இதனை ஒவ்வொரு மாணவனும், பெற்றோர்களும் உணர வேண்டும். கல்விதான் ஒருவனின் முதலீடு அதனை குறிப்பிட்ட வயதில் பெற வேண்டும்.

கல்வி கற்காதவன் நடைபிணத்திற்கு சமமானவன் என்று சொல்லப்படுகின்றது. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே என கூறப்படுகின்றது. கற்க மறுப்பவன் பிறக்காமலே இருந்து விடலாம் என சொல்லப்படுகின்றது. படித்த இளைஞர்கள் எவ்வாறு சமூகத்தில் சிறப்பாக வாழ்கின்றார்கள் என அவதானிக்க வேண்டும். எதனையும் குறுக்கு வழியில் அடைந்து விடலாம் என நினைத்து தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கூடாது. அதிஸ்டம், இலவசம், தங்கி வாழ்தல் போன்ற விடயங்களில் அதிக ஈடுபாடு காட்டக்கூடாது. இளைஞர்கள் படிக்க வேண்டும். தொழிலுக்குச் செல்ல வேண்டும். சம்பாதிக்க வேண்டும். தாய் தந்தையைப் பார்க்க வேண்டும். குடும்பத்தைக் கவனிக்க வேண்டும். தன்னுடைய இளமைக் காலத்தை சரிவர பயன்படுத்த வேண்டும். இளைஞர்களால் முடியாதது ஒன்றும் இல்லை என்பதை உணர வேண்டும்.

இன்று பெரும்பாலன இளைஞர்கள் வாழ்க்கையில் திட்டமிடல் இன்றி, குறிக்கோள் இன்றிää தூர நோக்கம் இன்றி,ஒர் இலக்கு இன்றி, வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இன்றி வாழ்கின்றார்கள். வாழ்க்கையில் இலக்கு இருக்க வேண்டும். ஒரு மனிதனுக்கு வாழ்க்கை என்பது ஒரு முறைதான் கிடைக்கும் எனவே அதனை சரிவர பயன்படுத்திக் கொண்டு வாழ வேண்டும். இளைஞர் சமூதாயம் எப்படியும் வாழ நினைக்கலாம். ஆனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நியதி உலகத்தில் இருக்கின்றதை மறக்கக் கூடாது. வாழ்க்கையை வாழ வேண்டும். சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டும்.

போராட்டங்களையும், பிரச்சினைகளையும்,  இடையூறுகளையும்,  துன்பங்களையும், வேதனைகளையும், சோதனைகளையும் சந்திக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, ஆர்வம், நம்பிக்கை 100 வீதமம் இருக்க வேண்டும். எதனையும் சாதிக்கலாம் என்ற துணிவு வேண்டும். இன்று உலகத்தில் பணக்காரர்களாவவும்,  செல்வந்தர்களாகவும், புகழ்பெற்றவர்களாகவும் வாழ்வதற்கு காரணம் அவர்கள் தங்களுடைய இளமைக் காலத்தில் மிகக் கடுமையாக கஸ்டப்பட்டு உழைத்ததால் தான் என்பதை உணர வேண்டும். வாழ்க்கையில் வெற்றிப் பெற வேண்டும் என்ற வைராக்கியம், உயர்ந்த சிந்தனை இருக்க வேண்டும். பாடசாலையில் படிக்கின்றக் காலத்திலேயே ஒரு தொழிலையும் கற்றுக்கொள்ள வேண்டும். உயர் கல்வியை தொடர்வதற்கு முன்னர் தனக்கு ஏற்ற, தனக்கு முடிந்தää சாதிக்கக் கூடிய துறையை தெரிவு செய்ய வேண்டும்.

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை உலகத்தில். வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். கனவு காண வேண்டும். இளைஞர்களின் பலம் என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. இளைஞர்கள் தங்களது சக்தியை சரியான முறையில் பயன்படுத்தினால் வாழ்க்கையில் பல சாதனைகளையும் வெற்றிகளையும் அடையலாம். இளைஞர்கள் ஆண்மீக வழியில் ஈடுபட வேண்டும். விளையாட்டுää இசை துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தங்களுடைய ஆற்றல்களையும்ää திறமைகளையும், திறன்களையும் புரிந்து கொள்ள வேண்டும். தன்னால் எதனை சிறப்பாக செய்து வெற்றிப் பெற முடியுமோ அதனை தெரிவு செய்து அதில் முழுமையாக ஈடுபட வேண்டும்.

இளைஞர்களே உங்களிடம் மிக அதிகமான ஆற்றல்களும், திறமைகளும்ää திறன்களும்ää அறிவும், புத்திசாலித்தனமும்,  தைரியமும் இருக்கின்னறன. அதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் நீங்கள்தான் இந்த உலகத்தை வெற்றிப் பெற்றவர்களாக இருப்பீர்கள். உங்களிடம் உள்ள திறமைகளை நீங்கள் முதலில் இனங்காணுங்கள். அதனை வெளியில் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். எந்த சவால்களுக்கும், பிரச்சினைகளுக்கும்,துன்பங்களுக்கும், நோய்களுக்கும், இடர்களுக்கும், ஆபத்துக்களுக்கும் முகங்கொடுக்க உங்கள் மனநிலையை தைரியப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் குறிக்கோள் இருக்க வேண்டும். ஒரு இலக்கு வேண்டும். நம்பிக்கை வேண்டும். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சியம்.

உங்கள் பெற்றோர்களை கடைசி வரைக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள். எதனைச் செய்தாலும் ஏன்? எதற்காக? யாருக்காக? எப்போது? எப்படி என்ற வினாக்களுக்கு விடையளித்தப் பின்னர் ஒரு வேலையை செய்யுங்கள். உங்களால் முடியும் என்ற நம்பிக்கையில் ஈடுபடுங்கள். நல்லப் புத்தகங்களைப் படியுங்கள். நல்ல நண்பர்களை தேட வேண்டும், வாழ்க்கையில் கஸ்டப்பட்டு உழைத்து வாழ்ந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படியுங்கள். வாழ்க்கையில் எப்போதும். நேர்ச் சிந்தனையுடனும்ää உயர்ந்த கனவுடனும் இருங்கள். நேரத்தை திட்டமிடுங்கள். இந்த உலகத்தில் பிழையான வழிகளில் செல்வதற்கு உள்ள வழிகளை விட சிறப்பாக வாழ்வதற்கான வழிகள் மிக அதிகமாகவே காணப்படுகின்றன. அதனால் நம்பிக்கையோடும், கடவுள் நம்பிக்கையோடும் முன் நோக்கிச் செல்லுங்கள்.

யாருக்காகவும் எந்த சூழ்நிலையிலும் உங்கள் இளமையான சந்தர்ப்பங்களைவ விட்டுக் கொடுத்து வாழாதீர்கள் உங்கள் வாழ்க்கையை உங்களுக்காக வாழ முயற்சி செய்யுங்கள். பாடசாலைக் காலத்தையும், பல்ககலைக்கழக காலத்தையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் கடவுள் ஒருமுறைதான் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவார் அதனைப் பற்றிப் பிடித்துக் கொண்டு நாம் வாழ முயற்சிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை சினிமா கிடையாது. அது போலியானது. உங்கள் நிஜ வாழ்க்கையில் உங்கள் அம்மா, அப்பாத்தான் ஹ_ரோ அவர்களைப் பின்னபற்றி நடக்கப்ப பழகுங்கள். உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சியம். உங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லங்களிலும், அநாதை மடங்களிலும் சேர்த்து விடாதீர்கள். அவர்களை தெரிவில் பிச்சை எடுக்க வைத்து விடாதீர்கள். இளைஞர்களே நீங்கள் சாதிப்பதற்காகப் பிறந்தவர்கள் சாதித்துக் கொண்டே இருக்க முயற்சி செய்’யுங்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.