பலதும் பத்தும்

WWE இல் இருந்து ஓய்வு பெறுவதாக ஜோன் சீனா அறிவிப்பு

பிரபல மல்யுத்த வீரரான ஜோன் சீனா WWE இலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

47 வயதான ஜோன் சீனா சனிக்கிழமை இரவு டொராண்டோவில் இடம்பெற்ற Money in the Bank போட்டியில் தோன்றி தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இதன்படி, Royal Rumble, Elimination Chamber மற்றும் WrestleMania போன்ற மல்யுத்த தொடர்களில் இருந்து விலகுவதாக ஜோன் சீனா அறிவித்தார்.

16 முறை WWE உலக சாம்பியனான ஜோன் சீனா திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சியில் நடிக்க தொடங்கியவுடன் மல்யுத்த போட்டிகளில் கலந்துகொல்வதை வெகுவாக குறைத்துக்கொண்டார்.

இந்நிலையிலேயே தனது ஓய்வை அவர் அறிவித்துள்ளார். தனது ஓய்வு குறித்து பேசிய அவர்,

“இன்று இரவு நான் WWE இலிருந்து ஓய்வு பெறுவதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்.

‘2025 Royal Rumble எனது கடைசி தொடராக இருக்கும். 2025 Elimination Chamberkம் எனது கடைசி தொடராக இருக்கும்,

2025ஆம் ஆண்டு WrestleMania நான் போட்டியிடும் கடைசி WrestleManiaவாக இருக்கும் என்பதை அறிவிக்கின்றேன்.

இத்தருணத்தில் உங்கள் அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்” என்றார்.

கடந்த 20 ஆண்டுகளில், Dwayne ‘The Rock’ Johnson, Triple H, Brock Lesnar மற்றும் Randy Orton உள்ளிட்ட மிகப் பிரபலமான மல்யுத்த வீரர்களுடன் ஜோன் சீனா போட்டியிட்டுள்ளார்.

இந்த காலப்பகுதியில் 16 முறை WWE உலக சாம்பியன் பட்டத்தை ஜோன் சீனா வெற்றிகொண்டுள்ளார்” என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.