மாறுவேடத்தில் தியேட்டருக்கு சென்ற நம்பியார்: உடனடியாக வீட்டுக்கு அழைத்த மனைவி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்த எம்.ஜி.ஆருக்கு நகரான வில்லனாக நடித்தவர் நம்பியார். சினிமாவில் வில்லன் என்றாலும் நிஜத்தில் ஹீரோவாக இருந்த அவர், ஒருமுறை தனது மனைவியுடன் படம் பார்க்க சென்றபோது நடந்த சம்பவத்தை இயக்குனர் வி.சேகர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக எம்.ஜி.ஆர் படங்கள் என்றால், அதில் முக்கிய வில்லனாக நடிப்பவர் நம்பியார் தான். பெரும்பாலான படங்களில் இவர்களின் காம்போ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இப்போதும் க்ளாசிக் சினிமா என்றால் எம்.ஜி.ஆருக்கு நிகரான வில்லன் நம்பியார் என்று பலரும் கூறுவார்கள். அதேபோல் நம்பியாருக்கு தனியாக ரசிகர்கள் இருந்தாலும், எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு அவர் நிஜ வில்லனாகவே தெரிந்துள்ளார். இதற்கு பல சம்பவங்களை உதாரணமாக சொல்லாம்.

படத்தில் எம்.ஜி.ஆரை அடித்தார் என்பதற்காக நம்பியார் வீட்டின் முன்பு கல் எறிந்து கலாட்டா செய்துள்ள எம்.ஜி.ஆர் ரசிகர்கள், நம்பியார் காரில் சென்றுகொண்டிருக்கும்போது அவரது காரை வழிமறித்து மிரட்டிய சம்பவங்கள் கூட நடந்நதுள்ளது. அந்த வகையில், தான் நடித்த ஒரு படத்தை பார்ப்பதற்காக மாறுவேடத்தில் தனது மனைவியுடன் சென்றிருந்த நம்பியாரை அவரது மனைவி அவசர அவசரமாக வெளியில் அழைத்து சென்றுள்ளார் என்று இயக்குனர் வி.சேகர் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர் 2 வேடங்களில் நடித்து வெளியான படம் எங்க வீட்டு பிள்ளை. பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படத்தில், முக்கிய வில்லனாக நம்பியார் நடித்திருந்தார். இந்த படத்தில் நான் வித்தியாசமாக நடித்திருக்கிறேன் இந்த படம்தை நாம் போய் பார்க்கலாம் என்று, தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு மாறுவேடத்தில் தனது மனைவியுடன் தியேட்டருக்கு சென்றுள்ளார் நம்பியார். தியேட்டரில் கூட்டம் குவிந்து இருந்துள்ளது.

படத்தில் நம்பியார் எம்.ஜி.ஆரை சாட்டையால் அடிக்கும் சீன் வந்துள்ளது. முதல் அடி அடித்தவுடன், அங்கிருந்த ரசிகர் ஒருவர் ஏய் என்று சொல்ல, மற்றொருவர் தலைவரையே அடிக்கிறியா நீ என்று கேட்க, மற்றொருவர் ஸ்கிரீனை கிழித்துள்ளார். இதை பார்த்துக்கொண்டிருந்த நம்பியாரின் மனைவி, மாறுவேடத்தில் இருப்பது நீங்கள் தான் என்று தெரிந்தால் உங்களை கிழித்துவிடுவார்கள் வாங்க போய்டலாம் என்று சொல்லி, நம்பியாரை அவசர அவசரமாக வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் அவரது மனைவி. இந்த தகவலை இயக்குனர் வி.சேகர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button